கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசு கலை-அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு 3 நாள் பயிற்சி

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில், 55க்கும் மேற்பட்டோர் புதிய முதல்வர்களாக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு, நிர்வாகம் சார்ந்த, மூன்று நாள் பயிற்சி, சென்னையில் நேற்று துவங்கியது. மாநிலத்தில், 69 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், 55 கல்லூரிகளில், முதல்வர்கள் இல்லாமல், பொறுப்பு நிலையில், பலர் பணியாற்றி வந்தனர். சமீபத்தில், தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதல்வர்களாக பதவி உயர்வு செய்து, உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.

 பல ஆண்டுகளாக, கற்பித்தல் பணியில் இருந்தவர்கள், இனி, நிர்வாகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதால், அவர்களுக்கு, நேற்று முதல், நாளை வரை, மூன்று நாள், சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், துவக்கி வைத்தார். துறை முதன்மை செயலர் ஸ்ரீதர் கூறுகையில்,""கற்பித்தல் பணியில் இருந்தவர்களுக்கு, நிர்வாகம் சார்ந்த பணியில் ஈடுபடுவது, புதிய அனுபவம். எனவே, அந்தப் பணியில் எப்படி செயல்பட வேண்டும், மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு - அரசிதழில் வெளியீடு

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு -  அரசிதழில் வெளியீடு Announcement of 7 new municipalities - Publication in the Government Gazette  போளூர், செ...