முதுகலையுடன் பி.எட்., முடித்த கல்வித்துறை பணியாளர்களை, ஆசிரியர்களாக
நியமிக்கும் "ஆன் லைன் கவுன்சிலிங்' இன்று நடக்கிறது. பட்டதாரி, முதுகலை
பி.எட்., முடித்து, கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு, சர்வீஸ்
அடிப்படையில் 2 சதவீதம் பேர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் அரசு உத்தரவு 6
மாதத்திற்கு முன்பு அமலானது. இதன்மூலம் ஓய்வு பெற 5, 7 ஆண்டுகளே உள்ள
நிலையில், சிலருக்கு பள்ளியில் பாடமெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், தகுதியுள்ள முதுகலை பி.எட்., பட்டதாரிகளுக்கு
சீனியாரிட்டிப்படி அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆன்லைனில் இன்று
(நவ.,21) நியமன கவுன்சிலிங் நடக்கிறது. ஒருசில மாவட்டங்களில் இரு சதவீத
ஒதுக்கீட்டிற்கு ஆட்கள் இல்லாத நிலையில், சிவகங்கையில் இருவருக்கு வாய்ப்பு
கிடைத்திருக்கிறது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,
""கல்வித்துறை பணியாளர் சங்கம் சார்பில், போராடி 2 சதவீத இட ஒதுக்கீட்டை
பெற்றோம்.100 காலியிடத்தில் 2 என்பது குறைவு. 5 ஆக அதிகரித்தால்
ஆசிரியராகும் வாய்ப்பு பலருக்கு கிட்டும்,'' என்றார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்லூரிக் கனவு கையேடு
கல்லூரிக் கனவு கையேடு Kalloori Kanavu Guide - College Dream Guide >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...