கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாயமாகி போன மாணவர்களுக்கான "சிறப்பு' பஸ்கள் : மீண்டும் இயக்க தடை என்ன?

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இயக்கப்பட்ட, சிறப்பு பஸ்களை குறைத்ததே, மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கும்,அதனால் ஏற்படும் இறப்புகளுக்கும் காரணம் என்ற , குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை, பெருங்குடி கந்தன்சாவடியில், இம்மாதம், 10ம் தேதி, பஸ் மீது லாரி மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த, மாணவர்கள் நான்கு பேர் பலியாகினர். நகரின் பல பகுதிகளுக்கு, போதிய பஸ் சேவைகள் இல்லாததே, இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என, கூறப்படுகிறது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும், கூட்ட நெரிசலில், பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். படிக்கட்டு பயணமும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, நெரிசல் நேரங்களில், மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு எளிதாக சென்று வர, முதல் கட்டமாக, 12 வழித்தடங்களில், காலையில் இரண்டு நடை, மாலையில் இரண்டு நடை செல்லும் சிறப்பு பஸ்கள், 2010ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அயனாவரம், பெசன்ட்நகர், பெரம்பூர், பிராட்வே, கே.கே.நகர் மேற்கு, வள்ளலார் நகர், திரு.வி.க.நகர், விவேகானந்தர் இல்லம், பட்டினப்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, வில்லிவாக்கம், தி.நகர், மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து, இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.தொடர்ந்து, சிறப்பு பஸ்களின் நடைகள், 12லிருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது, இந்த சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை, 12 நடைகளுக்கு குறைவாக இயக்கப்படுகிறது.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் நெரிசலில், பள்ளி மாணவர்கள் எளிதாக சென்று வர, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் சேவை துவக்கப்பட்ட சில மாதங்களிலேயே, அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் வசதிக்காக தான், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன; சிறப்பு பஸ்களால் வருவாய் இழப்பு மட்டுமில்லாமல், பஸ்சும் சேதமடைகிறது. இதன் காரணமாக, பஸ்சின், எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில், மாநகர போக்குவரத்து கழகம் தள்ளப்பட்டது.மாநகரில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், ஊழியர்கள் பற்றாக்குறை உட்பட பல பிரச்னைகள் உள்ளன. இதை அரசு சரிசெய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...