கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>124 மாணவர்களை பேருந்தில் ஏற்றி வந்த தனியார் பள்ளிக்கு அபராதம்

பழநியில் 124 மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்தை பறிமுதல் செய்து,  போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மாலை 5.40 மணிக்கு இடும்பன்கோயில் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த, பள்ளி பேருந்தில் ஏராளமான மாணவர்கள் இருப்பதை கண்டு நிறுத்தினர்.
சோதனையில் 60 மாணவர்கள் ஏற்ற வேண்டிய பேருந்தில், இரு மடங்காக 124 மாணவர்களை ஏற்றி வந்தது தெரிந்தது. பள்ளி பேருந்து மூலமே மாணவர்களை, போக்குவரத்து போலீசார் பாதுகாப்புடன் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பேருந்தை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினர்.
ஓட்டுனர் முத்தையாவை எச்சரிக்கை செய்து, ரூ. 2500 அபராதம் விதித்தனர். மீண்டும் இதுபோல் நடந்ததால் பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் கண்ணன் எச்சரித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்டம் வரியாக NMMS 2024-2025 தேர்வில் வெற்றி பெற்றோர் விவரம்

  NMMS Feb 2025 Selected Students - District wise Abstract  மாவட்டம் வரியாக NMMS 2024-2025 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை NMMS Sc...