மாநிலம் முழுவதும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான, போலியோ சொட்டு
மருந்து வழங்கும், சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 64 லட்சம்
குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. சென்னை உட்பட,
தமிழகம் முழுவதும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான, போலியோ சொட்டு
மருந்து வழங்கும் சிறப்பு முகாம், நேற்று நடந்தது. இந்த முகாமில், ஐந்து
வயதிற்குட்பட்ட, 70 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு
மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, அரசு மருத்துவமனைகள்,
ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட
இடங்களில், 40 ஆயிரம் சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டன.
மேலும், பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக, முக்கிய பேருந்து, ரயில் மற்றும்
விமான நிலையங்களில், 1,013 நகரும் மையங்களும்; தொலைதூரம் மற்றும் எளிதில்
செல்ல முடியாத, பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக, 771 நடமாடும்
குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன. நேற்று காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00
மணி வரை நடந்த முகாமில், மாநிலம் முழுவதும், 64 லட்சம் குழந்தைகளுக்கு,
சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கடந்தாண்டு, 68 லட்சத்திற்கும் மேற்பட்ட
குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் விடுபட்ட
குழந்தைகளுக்கு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, வீடு களுக்கே சென்று,
சொட்டு மருந்து வழங்கப்படும்; இரண்டாவது தவணை போலியோ சொட்டு மருந்து,
பிப்., 24ம் தேதி, வழங்கப்படும் என்றும், சுகாதார துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...
Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்... *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...