வாழ்க்கையில் எல்லாமே ஒரு கணக்கு தான். இசை கூட ஒரு கணக்கின்
அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆனால் இந்த கணக்கு பாடம் மட்டும்
பெரும்பாலோருக்கு கசக்கும் மருந்தாகி விடுகிறதே ஏன்?
இன்றைய கணித பாட திட்டங்கள் எல்லாமே தலையைச் சுற்றி மூக்கை தொடுவதாக உள்ளன. கற்பிக்க கூடிய விதத்தில் கற்பித்தால், கணிதமும் இனிக்கும்' என்கிறார், கணித பேராசிரியர் சிவராமன்.
அவரோடு உரையாடியதில் இருந்து...
கணித பாடத்தை எளிமைப்படுத்துவது எப்படி?
முறையான கற்பித்தல் இல்லாததால், பல மாணவர்களுக்கு கணிதம் கசக்கத்தான் செய்கிறது. கணிதத்தை காட்சிப்படுத்தி புரிய வைக்க வேண்டும். சாதாரண பெருக்கல், கூட்டல், கழித்தல் தெரியாமல், பல அரசு பள்ளி மாணவர்கள் ஆரம்ப பள்ளியை, முடித்துவிடுகின்றனர். காரணம், மனப்பாடம் செய்யும் முறை தான். இரண்டு எண்களை பெருக்க, ஒரே வழியை தான் மாணவர்களுக்கு கற்று தருகிறோம். உதாரணமாக 2*2=4. இதை தவிர ஆறு முறைகளில் எளிய பெருக்கலை கற்று கொடுக்க முடியும். மேலும், கணிதத்தை மாதிரிகள் கொண்டு, வடிவங்களை உருவாக்குதல் முறை மூலமாக, விளையாட்டு ரீதியில் கற்று கொடுத்தால், எந்த எண்ணை பெருக்கவும் மாணவர்கள் சிரமப்பட மாட்டார்கள்.
ஆனால், கணிதத்தின் சூத்திரங்களை, அதே முறையில் கற்று கொடுக்க முடியுமா?
கணித பாடத்திற்கு இதுவரை, 60 வகையான மாதிரிகளை, செய்து வைத்திருக்கிறேன். அதை மாநகராட்சி பள்ளிகளிலும், கற்று கொடுத்திருக்கிறேன். கணிதத்தின் மீது கொண்ட, அளவற்ற ஈடுபாட்டால், "கணித மன்றத்தை' 2007 ஆம் ஆண்டு துவங்கினோம். இந்த கணித மன்றத்தில், தமிழகம் முழுவதும், 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் உதவியோடு, இயல் கணிதம், வடிவியல் உள்ளிட்ட பல்வேறு கணித பிரிவுகளுக்கு மாதிரிகளை உருவாக்கி வருகிறோம். இந்த மாதிரிகள் உதவியோடு, அடிப்படை கூறுகளை கற்று கொடுத்தால், கடினமான கணிதத்திற்கும் விடை கிடைத்துவிடும்.
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் ஈடுபாடு எப்படி?
சென்னையில், இதுவரை 100 பள்ளிகளில் கணித ஆய்வு கூடம் அமைத்து, மாதிரிகள் கொண்டு விளக்கி உள்ளோம். மாணவர்களுக்கு அடிப்படை விஷயங்களை புரிய வைப்பதன் மூலம், ஆர்வத்துடன் கற்று கொள்கின்றனர்.ஒரு குச்சியை நகர்த்தும் போது, விழும் நிழல் மூலம், "சைன், காஸ் தீட்டாக்களின்' மதிப்புகளை எளிதில் கற்பிக்க முடியும். இதன்மூலம், பொதுத்தேர்வில் மாணவர்கள் எளிதில், 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற முடியும்.
அரசு பள்ளிகளில் இதற்கான சூழல் இருக்கின்றனவா?
பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், பாடத்தை நடத்துவதில் மட்டுமே, அக்கறை காட்டுகின்றனர். மற்ற பாடங்களை போல, கணிதத்தில் புதுப்புது தகவல்களை, ஆண்டுதோறும் அறிஞர்கள் கண்டுபிடிக்கின்றனர். ஆனால், பல ஆசிரியர்களுக்கே, அதை பற்றிய அறிதல் இல்லை. அரசு பணியில் சேர்ந்தவுடன், பொது அறிவை வளர்த்து கொள்வதில்லை. இதனால், மாணவர்களுக்கு, கணிதத்தை எளிய முறையில் கற்பிக்க தெரிவதில்லை. கணிதம் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளேன். அவற்றில், மாணவர்களுக்கு பலவழிகளில், ஒரே கணித கேள்விக்கு எப்படி விடைகாண்பது என்பது குறித்து, விளக்கம் அளித்துள்ளேன்.
எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள்?
எண்களின் அன்பர், எண்களின் எண்ணங்கள், நட்சத்திர கணித மேதை உள்ளிட்ட ஐந்து புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். மேலும், கணித சூத்திரங்களை எளிமைப்படுத்துவது குறித்து, ஆய்வுகளும் செய்து வருகிறேன். மாணவர்கள் பாடப்புத்தகங்களில், படிக்கும் கணித முறை, தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்று, பல்வேறு படிகளை கொண்டது. ஆனால், இதை எளிமையாக்கினால், கணிதம் கசக்காது; இனிக்கும்.