🌹ஓர் இடத்தில் உங்களுடைய வார்த்தைகளும், பாசமும் அலட்சியமாக தெரிந்தால் அந்த இடத்தில் இருந்து விலகியே நில்லுங்கள்.
இல்லையெனில் மேலும் மேலும் உங்களுடைய வார்த்தைகளும் பாசமும் அலட்சியப்படுத்தப்படும்.!
🌹🌹வாழப் பொருள் வேண்டும்.
வாழ்வதிலும் பொருள் வேண்டும்.!!
🌹🌹🌹ஒருவன் மண் பானையிடம் கேட்டான்
இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும்,புறமும் ஜில்லென்று இருக்கிறாய்.?
அதற்கு மண்பானை சொன்னது
எனது ஆரம்பமும் முடிவும் மண்தான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
யார் ஒருவர் தன் தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக்கிறாரோ
அவர் ஏன் சூடாகப்போகிறார்
குளிர்ந்தே இருப்பார் என்றது.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⚫⚫மேனாள் அமைச்சர் தங்கபாண்டியன் அவர்களின் மனைவியும்,மேனாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயாருமான திருமதி.ராஜாமணி தங்கபாண்டியன் அவர்கள் நேற்று காலமானார்.
⛑⛑அரசு உதவி பெறும் பள்ளி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க கோரிய வழக்கு - பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு.
⛑⛑மாற்றுத்திறனாளி சேவர்கள் விருது - அக்டோபர் 20 க்குள் விண்ணப்பிக்கலாம்.
⛑⛑மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி - விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி நாள்.
⛑⛑இணைய வழிக் கல்விக்கு நாக்(NAAC) அங்கீகாரம் கட்டாயம் - யுஜிசி வழிகாட்டுதல்கள் வெளியீடு.
⛑⛑ஒப்புதலுக்கு காத்திருக்கும் அண்ணா பல்கலை பிரிப்பு சட்டம் - ஆளுநரிடம் நேரில் விளக்க தமிழக அரசு முடிவு.
⛑⛑முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.50,000/- நிதியுதவி பெற ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுகுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
⛑⛑பொறியியல் பட்டம் பட்டம் படித்தவர்களுக்கு பொதுப்பணித் துறையில் பயிற்சி நவம்பர் 15 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
⛑⛑கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு காப்புரிமையில் இருந்து விலக்கு வேண்டும்: உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா, தெ.ஆப்பிரிக்கா கோரிக்கை.
⛑⛑சென்னையில் 33 சதவீதம் பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது - இந்திய மருத்துவக் கவுன்சில் தகவல்.
⛑⛑பள்ளி மாணவர்கள் பற்றிய விவரங்களை "எமிஸ்" இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை...
⛑⛑ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான குடிமைப் பணி முதல் நிலை தேர்வு நேற்று நடைபெற்றது.
⛑⛑இந்திய-சீனா கார்ப்ஸ் கமாண்டர் நிலை 7வது சுற்றுப் பேச்சுவார்த்தை வரும் அக்டோபர் 12ல் நடைபெற உள்ளது.
லடாக் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
⛑⛑ஆர்மீனியா-அஜர்பைஜான் இடையிலான மோதல் பல எல்லை பகுதிகளுக்கு பரவுவதால் ஈரானும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
முன்னெச்சரிக்கையாக எல்லைப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம்
- ஈரான் அரசு
⛑⛑என்றைக்கு நடிகர் ரஜினி வேரு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என்றாரோ அன்றைக்கே அவரிடம் எங்களுக்குள்ள முரண்பாடு நீங்கியது.
- சீமான்
⛑⛑ரயில் பயணிகள் டிக்கெட்டுகள் பதிவு செய்யும் பொழுது ஹிந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு தயாநிதி மாறன் கண்டனம்
⛑⛑ஹத்ராஸில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று காலை மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்
⛑⛑ஐபிஎல் 2020 : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
⛑⛑வரும் ஜூலை மாத வாக்கில் சுமார் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தயாரானவுடன் அது அனைவருக்கும் கிடைக்கும் வகையில், சமமான, நியாயமான நடவடிக்கைகளை மேற்கோள்ள மத்திய அரசு இரவுபகலாக உழைத்து வருவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிகளின் அனைத்து அம்சங்களையும், அரசு ஏற்படுத்தி உள்ள உயர்நிலைக் குழு ஆராயும் என ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
⛑⛑டெங்கு பரவலைத் தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்க்கொண்டார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
👉டெல்லியில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் வீட்டில் தேங்கிய தண்ணீரை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அகற்றிய படக்காட்சி வெளியாகியுள்ளது.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதற்காக 10 வாரங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10 மணிக்குப் பத்து நிமிடங்கள் ஒதுக்கித் தேங்கிய நீரை அகற்ற வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.
அதன்படி அவர் வீட்டில் பூஞ்சாடியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை வாளியில் கவிழ்த்துவிட்டுப் புதிதாகத் தண்ணீர் ஊற்றி வைத்த காட்சியைச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
⛑⛑அதிபர் ஆட்சி முறையை நோக்கி இந்தியா செல்கிறது-
மம்தா பானர்ஜி விமர்சனம்
⛑⛑மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - ஆளுநர் ஒப்புதளிக்க தாமதம்
👉நீட் தேர்வு காரணமாக, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வது சவாலானதாக உள்ளது. எனவே, நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இந்த சட்டத்துக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இன்று மாலை ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடுத்துரைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
⛑⛑சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு - சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து
⛑⛑பள்ளிகள், கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம். அக்டோபர் 15-க்குப் பிறகு, கட்டம் கட்டமாக பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
⛑⛑இணையவழிக் கல்வியை மேற்கொள்ளும் உயா் கல்வி நிறுவனங்களுக்கு ‘நாக்’ அங்கீகாரம் கட்டாயம் என யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது
⛑⛑இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்கில், கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவு குறித்த வழிமுறைகளை, உயர் கல்வித் துறை வெளியிட்டது.
⛑⛑தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி- 2017-2018, 2018- 2019ஆம் கல்வி ஆண்டுகளில் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள்- 09.02.2020 மற்றும் 10.02.2020 ஆகிய நாட்களில் நடைபெற்ற பணிஒதுக்கீட்டு கலந்தாய்வு- பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளமை- ஆசிரியர் தேர்வு வாரியப் தெரிவுப் பட்டியலுடன் சரிபார்த்தல்- உரிய ஆவணங்கள் நேரில் ஒப்படைக்கத் தெரிவித்தல்- திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
⛑⛑அரியர் வழக்கு தொடர்பாக முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926