கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 26.12.2020 (சனி)...

🌹மீண்டும் ஒருமுறை முகம் பார்த்து பேச வேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்துக்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன.!

🌹🌹பணம் படைத்தவன்  மரணத்திற்கு பின் மறைகிறான்.

குணம் படைத்தவன் மரணத்திற்கு பின்னும் வாழ்கிறான்.!!

🌹🌹🌹செய்த புண்ணியம் கூட பலன் தராமல் போகலாம்.

ஆனால் செய்த பாவங்கள் ஒருபோதும் தண்டனை தராமல் போகாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

🎀🎀பொது தேர்வு பாடத்திட்டம் விரைவில் அறிவிக்கப்படுமா? மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை

🎀🎀தனியார் மருத்துவ கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 4 இடம் காலியாக வைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

🎀🎀கல்லூரிகளில் நேரடி வகுப்பு: அதிகாரிகள் ஆலோசனை

🎀🎀மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 2வது கலந்தாய்வு விரைவில் துவங்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

🎀🎀தெலுங்கானாவில் இந்த கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படாது.

🎀🎀"திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்!" - உதயநிதி ஸ்டாலின்

🎀🎀பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவு

🎀🎀ஜனவரி ஒன்று முதல் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்! - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவிப்பு

🎀🎀தொழிலாளர் நலநிதி செலுத்த ஜனவரி 31-ந்தேதி கடைசிநாள் - வாரிய செயலாளர் அறிவிப்பு

🎀🎀கமலிடம் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்க கேட்டேன், அதற்கு மறுத்தார். விவசாயிகளுக்கு விரோதமான போராட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆதலால் பாஜகவில் தொண்டனாக என்னை இணைத்து கொண்டேன்! 

- மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பாஜகவில் இணைந்த அருணாச்சலம் பேட்டி.

🎀🎀குடும்பத்தை கட்சியோடு இணைத்து பாடுபடுகிறேன்.

நேரடியாக அரசியலுக்கு வரவில்லை. சிறுவயதிலிருந்து கட்சி உணர்வோடு கட்சி வழியாக பதவிக்கு வந்தேன்.

- குடும்பக்கட்சி என்ற புகாருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.

🎀🎀விஜய் ரசிகர்கள் கோபப்பட்டு என்னவாக போகிறது?

குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும். மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும்.

விஜயை தொடக்க காலத்தில தற்காத்தவன் நான் 

- சீமான்

🎀🎀அதிமுக பாஜவுடன் சேர்ந்தால் தலைவர்களுக்கு மகிழ்ச்சி; சேராவிட்டால் அதிமுக தொண்டர்களுக்கு மிக்க மகிழ்ச்சி 

-அன்வர் ராஜா அதிமுக முன்னாள் எம்.பி

🎀🎀முந்தைய அரசின் வேளாண் கொள்கையால் ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறினர்.இதை மாற்றுவது முக்கியம்.

- பிரதமர் மோடி.

🎀🎀இந்தியாவின் இளம் மேயர் என்ற வரலாற்றை படைத்திருக்கிறார் 21 வயதான ஆர்யா ராஜேந்திரன். 

திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் தேர்வு.

🎀🎀மத்திய அரசின் வேளாண் நலத்திட்டங்களை  அனுமதிக்காத ஒரே மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது.

மம்தா பேனர்ஜியின் கொள்கை, சித்தாந்தங்கள் மேற்கு வங்கத்தை அழிக்கிறது.

- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

🎀🎀நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

-தமிழக  சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

🎀🎀திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி- சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி.

🎀🎀2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஹெச்.ராஜாவை அமைச்சராக்க உள்ளோம். 

-பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை

🎀🎀234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் மதசார்பற்ற திமுக கூட்டணியின் இலக்கு: 

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

🎀🎀ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் நலம் விசாரித்தார். ரத்த அழுத மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

🎀🎀பழனி முருகன் கோயிலில் டிசம்பர் 28ம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படவுள்ளது.

காலை 7 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ரோப் கார் சேவை இயக்கப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎀🎀டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை யாரும் நீக்க முடியாது. விவசாயிகளின் நிலங்களை அவர்களிடம் இருந்து யாரும் தட்டிப் பறிக்கவும் முடியாது என மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.

🎀🎀திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்களுக்கு கூட்டம் கூடுவதை முதல்வர் எடப்பாடியால் பொறுக்க முடியவில்லை என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டங்களில் விதிகளை மீறவில்லை. மக்கள் கிராம சபை என்று பெயர் மாற்றம் செய்திருப்பதை கூடுதல் தலைமை செயலாளரிடம் தெரிவித்துள்ளோம். திட்டமிட்டபடி மக்கள் கிராம சபை என்ற பெயரில் தொடர்ந்து நடைபெறும் என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.

🎀🎀கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முன்னோட்ட நடவடிக்கைகள் நடைபெறும். கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்வதற்கான வழிமுறைகள், தடுப்பூசி போடும் பணிகள் குறித்த ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

🎀🎀தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

2,500 பேர் தேர்வு எழுதிய நிலையில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளது நீதித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🎀🎀கிராமசபை கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது எடப்பாடி அரசின் எதேச்சதிகாரம் என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்கள் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை செய்துள்ளது. தமிழக அரசின் நிர்வாக அலட்சியத்தால் ஊராட்சி பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டு அடிப்படை தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராமசபை கூட்டங்கள் நடப்பதை தடுக்க அதிமுக அரசு போடும் தடைகள் நொறுங்கும் என்று வைகோ கூறியுள்ளார். சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டிய மத்திய அரசின் நிதியை தமிழக அரசு பெற்று தரவில்லை என்றும் வைகோ புகார் கூறியுள்ளார்.

🎀🎀நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்கும் அதிகாரிகளின் ஐஏஎஸ் பதவியை பறிக்க வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.

ஓய்வூதியத்தில் மாதம் ரூ.200 பிடித்தம் செய்யும் உத்தரவை எதிர்த்து முன்னாள் நகராட்சி ஆணையர் வழக்கு.

முன்னாள் நகராட்சி ஆணையரின் ஓய்வூதியத்தில் ரூ.200 பிடித்தம் செய்யும் உத்தரவு ரத்து

நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்படியாமல் இருப்பது, கடமையை தவறுவதற்கு சமம் - நீதிபதி கண்டனம்.

🎀🎀கைரேகை வைக்காமல் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவு.

நியாயவிலைக் கடையில் கைரேகை வைத்து பொருள் வழங்குவதில் சர்வர் குறைபாடு இருக்கிறது

அமைச்சர் செல்லூர் ராஜூ.

🎀🎀திமுக-வின் கிராம சபைக் கூட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி தூக்கமிழந்து தவிக்கிறார் 

கிராமசபைக் கூட்டத்திற்கு ஆட்சியரை நாம் அழைக்கவில்லை, தற்போது நான்தான் உங்களின் ஆட்சியர். 2.50 கோடி பேரைக் கடந்து கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது 

மோடியே வந்தாலும் கிராமசபைக் கூட்டத்தை தடுக்க முடியாது 

மரக்காணத்தில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

🎀🎀M.Phil , PH.d - ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நிதி பெறுவதற்கான தகுதிகளில் மாற்றம்: யுஜிசி அறிவிப்பு.

🎀🎀அரசு ஊழியர்களிடம் பிடித்த புதிய பென்சன் திட்ட தொகை ரூ.20 ஆயிரம் கோடியை தமிழக அரசு செலவுசெய்து விட்டது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் குற்றச்சாட்டு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...