கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 17.03.2021 (புதன்)...

 


🌹நம்ம மனசுக்கு பிடிச்சவங்களால மட்டுமே தான் நம்மல சந்தோஷமாக பார்த்துக்க முடியும்.

அதே சமயம் அவங்களால மட்டுமே தான் நம்மல காயப்படுத்தவும் முடியும்.!

🌹🌹தவறே என்றாலும் நேர்பட கூறிவிடுவது நல்லது.

அதைவிடுத்து புறங்கூறுதல் நம்பிக்கை துரோகத்தின் முதற்கட்டம் ஆகும்.!!

🌹🌹🌹கண்களில் தென்பட்ட அனைத்துமே இதயத்தில் இடம் பிடிப்பதில்லை. 

இதயத்தில் இடம்பெற்ற அனைத்துமே அருகில் இருப்பதில்லை அதுதான் வாழ்க்கை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈24-01-2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வில் (TRUST - 2021) வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம் மாவட்ட வாரியாக வெளியீடு

🌈🌈சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 -10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் (விடுபட்டவர்கள்) விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கடிதம்.

🌈🌈புதிய பென்ஷன் திட்டம் - தனியார் துறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அமல் மத்திய அரசு முடிவு.

🌈🌈பள்ளிக் கல்வி -  சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2020-21 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிப் படிப்பை தொடராத 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு

🌈🌈ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள் இடமாற்றம்: கோரிக்கையை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

🌈🌈பoழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 5000 கோடி நிதிச் சுமை ஏற்படும் . 

இச் செலவினத்தை புதிய தொழில் முனையங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டும்,  கனிம வளத்துறை வாரியத்தின் மூலம் அரசு ஒழுங்குமுறை விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியில் இருந்தும் இச்செலவினம் ஈடு கட்டப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

🌈🌈கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு கடந்த திங்கட்கிழமையுடன் ஓராண்டு நிறைவுபெற்று விட்டது. இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஆன்லைன் வழிக்கல்வி, கல்வி தொலைக்காட்சி வழிக்கல்வி  மாணவர்களுக்கு கைகொடுத்ததா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது - நாளிதழ் செய்தி

🌈🌈கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியா் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

🌈🌈தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 152 துறை தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டன. அதற்கான விடைக்குறிப்புகள் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.

🌈🌈12 ஆம் வகுப்பு ஆசிரியர்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

🌈🌈மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் சுற்றறிக்கை!   

👉கொரோனா அறிகுறியுள்ள மாணவர்கள் வீட்டிலேயே இருக்கலாம்.

👉தினமும் வகுப்பறையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

👉மாஸ்க் சமூக இடைவெளியை தவறாது பின்பற்ற வேண்டும் - என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

🌈🌈சீனாவால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டால் மட்டுமே இந்தியர்களுக்கு விசா வழங்கப்படும்.

- சீன அரசு அதிரடி அறிவிப்பு.

🌈🌈இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

🌈🌈தமிழகத்தில் மீண்டும் கடுமையாக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்.

காய்ச்சல் முகாம்களை அதிகரித்து கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு உத்தரவு.

முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க தலைமை செயலாளர் உத்தரவு.

கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் 1.2% உயர்ந்துள்ளது.

பிரசாரங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

சென்னை மற்றும் கோவையில் கொரோனாவின் தாக்கம் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

- தமிழக அரசு.

🌈🌈சென்னையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

🌈🌈முன்னாள் காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ, கட்சித் தலைவர் சரத் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னாள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

🌈🌈எங்கள் ஆட்சியின் முதல் வேலையே ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடிப்பதுதான்

ஸ்டாலின் பேச்சு.

🌈🌈மார்ச் 18 முதல் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் மவுனம் காத்து வந்தார்.

🌈🌈முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அதிமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்றுள்ளது.

-கருணாஸ்                             சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை என  கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

234 தொகுதியிலும் அதிமுகவை தோற்கடிக்க கட்சியனர் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

🌈🌈அதிமுகவின் தேர்தல் அறிக்கை வில்லன் கூட கிடையாது; அது காமெடி வில்லன். 

திமுகவின் தேர்தல் அறிக்கையை எல்லாரும் கதாநாயகன் என்று சொல்கிறார்கள்; கதாநாயகியும் அதுதான் - சேலத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

🌈🌈சாதிமறுப்பு திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால், அவர்களைப் பாராட்டி ரூ. 3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

🌈🌈திமுக ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார்.

🌈🌈தமிழகத்தில் அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

🌈🌈சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து, ரூ.33,824-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,228-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

🌈🌈பட்டுக்கோட்டை நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ்.எல்.எஸ். சிவக்குமார், அதிமுகவில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவில் இணைந்தார்.

தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், பட்டுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

🌈🌈பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் பாமகவில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவில் இணைந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட பா.ம.க. செயலாளர் தரணி ரமேஷ், சிவகங்கை மாவட்ட பா.ம.க. செயலாளர் தை.ஆல்பர்ட் ராஜா மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தனர்.

🌈🌈மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியிருக்கிறது: மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை.

🌈🌈தமிழகத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை – கனிமொழி எம்.பி

🌈🌈நானும் ஒரு விவசாயி என்று தினசரி மார்தட்டிக் கொண்டிருந்த எடப்பாடி யாருக்கு விவசாய நிலமே இல்லையாம்

அப்படியானால் இவர் யார் நிலத்தைப் பயிர் செய்தார்?

முதலமைச்சராக இருக்கின்ற வரை உண்மை பேசுவதில்லை என்று முதலமைச்சர் முடிவெடுத்து விட்டாரா? யாமறியோம் பராபரமே!

-பீட்டர் அல்போன்ஸ்

🌈🌈"அரசுத்துறை வங்கிகளை மோடிக்கு ஆதரவான முதலாளிகளுக்கு மத்திய அரசு விற்பனை செய்கிறது"

ராகுல் காந்தி.

🌈🌈வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் போடப்படும் என்றும், நெல் மற்றும் கரும்புக்கு கூடுதல் தொகை வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

🌈🌈பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக மக்களவையில் விவாதிக்குமாறு தயாநிதிமாறன் எம்.பி  கோரிக்கை நோட்டீஸ்.

🌈🌈வாரிசு அரசியல் செய்வதாக மக்கள் நினைத்தால் என்னை தோற்கடிக்கட்டும்

-உதயநிதி                                                        

🌈🌈புதுச்சேரி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாராயணசாமிக்கு போட்டியிட இடம் ஒதுக்கவில்லை.

🌈🌈வெற்றிக் கூட்டணியான அதிமுக கூட்டணியை ஒருபோதும் அசைக்க முடியாது; தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.

🌈🌈திமுக ஆட்சிக்கு வந்த பின் மக்களிடம் பெற்ற மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை; திருவாரூர் பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி.

🌈🌈66 வயது ஆகிவிட்ட தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை.

🌈🌈திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவே தேர்தலில் களம் காண்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

🌈🌈சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 307 பதற்றமான வாக்குச்சாவடிகள்; மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்.

🌈🌈கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

🌈🌈நெதா்லாந்தில் பொதுமக்களுக்கு அஸ்டொஸெனகா தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் அச்சம் காரணமா பல நாடுகள் அதன் பயன்பாட்டை நிறுத்திவைத்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது நெதா்லாந்தும் இணைந்துள்ளது.

🌈🌈 'க்வாட்' உள்ளிட்ட பிரத்யேக குழுக்கள் வாயிலாக பிராந்திய நாடுகளுக்கிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.

🌈🌈முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பொய் சொல்கிறார்.  ஜெயலலிதாவின் மரணத்திற்கு கருணாநிதி & மு.க.ஸ்டாலின் காரணம் என்று அவர் கூறினார்.  அவரது மரணத்திற்கு நாங்கள் தான் காரணம் என்று நீங்கள் (முதல்வர்) கூறினால், என் மீது வழக்குத் தாக்கல் செய்யுங்கள்  நான் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன். 

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

🌈🌈அதிமுக தேர்தல் அறிக்கை திமுக தேர்தல் அறிக்கையின் நகலாகும். 

அனைவருக்கும் ஒரு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வழங்கப்படும் என்று கூட அவர்கள் அறிவிக்க முடியும். அவர்கள் தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால் அவர்கள் எதையும் சொல்ல முடியும். 

-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

🌈🌈பிரதமர் திறமையற்றவர், நாட்டை இயக்க முடியாதவர்.மத்தியில் ஒரு எதேச்சதிகார அரசாங்கம் நடத்தப்படுகிறது. 

-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

🌈🌈ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என தகவல் தவறானது. பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்

🌈🌈சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்க முடியாது. 

-தேர்தல் ஆணையம் தகவல்

🌈🌈அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

🌈🌈விழுப்புரத்தில் புதியதாக உதயமாகும் டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக் கழகத்திற்கு முதல் துணைவேந்தராக அன்பழகன் நியமனம் - அரசிதழில் வெளியீடு.

🌈🌈போபால் மற்றும் இந்தூரில் மார்ச் 17 முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.  அதேசமயம், ஜபல்பூர், குவாலியர், உஜ்ஜைன், ரத்லம், புர்ஹான்பூர், சிந்த்வாரா, பெத்துல், கார்கோன் ஆகிய 8 நகரங்களில் மார்ச் 17 முதல் இரவு 10 மணிக்கு மூடப்படும். இந்த நகரங்களில் ஊரடங்கு உத்தரவு இருக்காது. 

-மத்திய பிரதேச அரசு

🌈🌈நகர்ப்புறங்களில்  விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நிலத்திற்கு எந்தவொரு சொத்து வரியையும் விதிக்க வேண்டாம் என்று ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.

🌈🌈தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை அறிவிப்பு.

🌈🌈இன்று காலை 11மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேடு அலுவலகத்தில் சந்திக்கிறார் டிடிவி தினகரன்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...