கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளலாம் - அரசாணைகள்...

 


⭕அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.


⭕தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசின்  மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், அதை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் அறிவித்திருந்தார்.


⭕இந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழகத்தில்  அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.


⭕மேலும், கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


⭕இதற்காக  முதல் கட்டமாக 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.


⭕தமிழக அரசின் இந்த அறிவிப்பால்,  பல லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.



>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_441_Dated: 03-12-2020...


>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_279_Dated: 24-06-2020...


>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_280_Dated: 24-06-2020...


>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_281_Dated: 24-06-2020...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...