தனிநபர் மருத்துவ காப்பீட்டுக்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது...
>>> செய்தியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தனிநபர் மருத்துவ காப்பீட்டுக்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது...
>>> செய்தியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட் 19 சிகிச்சை - கட்டணம் மாற்றியமைத்து அரசாணை(நிலை) எண்: 347, நாள்: 09-08-2021 வெளியீடு...
>>> அரசாணை(நிலை) எண்: 347, நாள்: 09-08-2021....
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா(COVID 19) சிகிச்சைக்கு மாவட்ட வாரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியல்...
https://www.cmchistn.com/covidHospital.php
முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பும் கரோனா தொற்றாளர்கள், கொரோனா சிகிச்சைக்காக அரசு வழங்கியுள்ள பேக்கேஜுகள் குறித்த விவரங்களைக் காண:
https://www.cmchistn.com/covidPackage.php
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றி முழு விவரம் தெரிந்து கொள்வோம்...
மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது என்ன ?
பொருளாதார வசதி இல்லாத ஏழை மக்களுக்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவி களுக்கு தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் தனியார் மருத்துவமனைகள் மூலமாக இலவசமாக தமிழக மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது .ஆதலால் முன்னெச்சரிக்கையாக மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது.
மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெற தகுதிகள்
இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்
தேவையான ஆவணங்கள்
வருமானச் சான்றிதழ் குடும்ப அட்டையின் நகல் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல்
எங்கே விண்ணப்பிப்பது ?
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மையம் இயங்கி வருகிறது .அங்கு சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும் பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் இதன் பின்பு அலுவலகத்தில் அதிகாரி Acknowledgement Receipts தருவார்கள் பின் ஓரிரு நாட்களில் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
பயனை எப்படிப் பெறுவது
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும்.
மருத்துவ காப்பீட்டு அட்டை தொலைந்தால் என்ன செய்வது?
எதிர்பாராதவிதமாக நீங்கள் ஏற்கனவே எடுத்து காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது உடைந்து விட்டாலோ கவலை வேண்டாம் மிக எளிதாக காப்பீட்டு அடையாள அட்டையை இணையதளம் மூலமாக எடுக்கலாம் .முதலில் இந்த லிங்கை கிளிக் செய்து https://www.cmchistn.com உங்கள் குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்து search செய்தால் போதும் அதில் உங்கள் காப்பீட்டின் மற்றும் குடும்ப தலைவர் உறுப்பினர் பெயர்கள் இடம்பெறும். இதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்
மேலும் விபரங்களுக்கு
இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணிநேர தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
WEBSITE
https://www.cmchistn.com
⭕அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
⭕தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், அதை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
⭕இந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
⭕மேலும், கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
⭕இதற்காக முதல் கட்டமாக 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
⭕தமிழக அரசின் இந்த அறிவிப்பால், பல லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_441_Dated: 03-12-2020...
>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_279_Dated: 24-06-2020...
>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_280_Dated: 24-06-2020...
>>> CLICK HERE TO DOWNLOAD - G.O.Ms.No_281_Dated: 24-06-2020...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...