முதல்வர் அவர்களின் தனிப்பிரிவு முதன்மைச் செயலர் முனைவர். உதயச்சந்திரன் அவர்களை சந்தித்து முறையீடு
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் *டாக்டர் அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி மாநிலத்தலைவர் *திரு.சு. பக்தவச்சலம் அவர்கள்* சென்னை மாவட்ட தலைவர் *திரு. சாந்தகுமார் அவர்கள்* மாவட்ட செயலாளர் *திரு.சீனிவாசன் அவர்கள்* உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு முதன்மைச்செயலாளர் *மதிப்புமிகு.முனைவர் உதயசந்திரன் அவர்களை* சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.
*கோரிக்கைகள் விபரம்*
*1* . நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் *பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து* செய்து அதற்கு பதிலாக ஆணையர் என்ற பதவியை உருவாக்கி அதில் ஒரு *IAS அதிகாரியை* நியமித்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறோம்.
*2* .புதிய கல்விக் கொள்கையை புறக்கணித்து விட்டு *மாநில கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கு ஒரு ஆணையம்* அமைக்க வேண்டுகிறோம்
*3* .மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு *ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை இந்த மாதமே* பிடித்தம் செய்திட அரசாணை பிறப்பிக்க வேண்டுகிறோம்.
*4* கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த *ஜாக்டோ-ஜியோ* போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டும், பணி மாறுதல் பெற்றவர்களுக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்பட வில்லை எனவும் அதோடு *பணி மாறுதல் செய்யப்பட்டவர்களை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றம் செய்யவில்லை எனவும் கோரிக்கை* வைத்தோம்.அதனை ஏற்ற *மாண்புமிகு முதல்வரின் தனிப்பிரிவு முதன்மைச் செயலாளர் *மதிப்புமிகு. முனைவர். உதயசந்திரன் அவர்கள்* உடனடியாக பள்ளிக் கல்வி துறையிடம் தொடர்புகொண்டு விசாரித்தார். அவைகளை உடனடியாக சரி செய்வதாக நம்மிடம் தெரிவித்துள்ளார்
5. 2011க்கு பிறகு பணியில் நியமனம் செய்யப்பட்டு *TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு* பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உட்பட எந்த பலன்களும் பெறாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு *புதிய அரசு* விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதையும் விரைவில் செய்து தருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தகவல்
திண்டுக்கல் மு.முருகேசன்
மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்