கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு புதிய ஆளுநராக திரு.ஆர்.என்.ரவி அவர்கள் நியமனம்(Mr.R.N.Ravi appointed as Tamilnadu Governor by President of India)...






 தமிழ்நாடு புதிய ஆளுநராக திரு.ஆர்.என்.ரவி அவர்கள் நியமனம்...


ஆர்.என்.ரவி தற்போது நாகலாந்து ஆளுநராக உள்ளார்.


பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்...


தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் - குடியரசுத்தலைவர்.


நாகாலாந்தின் ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருக்கிறார். 


தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பஞ்சாபின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்துவரும் நிலையில், அவர் இனிமேல் பஞ்சாபின் ஆளுநராக நீடிப்பார் என அறிவிப்பு. 


அசாமின் ஆளுநரான பேராசிரியர் ஜகதீஷ் முகி, நாகாலாந்தின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார். ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மித் சிங் உத்தராகண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 


தமிழ்நாட்டின் புதிய ஆளுநரான ஆர்.என். ரவி, பிஹாரைச் சேர்ந்தவர். கேரள மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். 


2019ஆம் ஆண்டிலிருந்து இவர் நாகாலாந்தின் ஆளுநராக இருந்து வருகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 02.12.2025 ) விடுமுறை அறிவிப்பு

    கனமழை - 4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 02.12.2025 ) விடுமுறை அறிவிப்பு கனமழை காரணமாக  💦💦💦💦💦💦💦 * காஞ்சிபுரம்  * செங்கல்பட்...