கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-12-2021 - வெள்ளி - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.12.21

திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்: அமைச்சியல்


அதிகாரம்: அவை அஞ்சாமை


குறள் எண்: 727


குறள்:

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்

தஞ்சு மவன்கற்ற நூல்.


பொருள்:

அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.


பழமொழி :

Cast no dirt into the well that gives  you water



 உண்ட  வீட்டிற்கு  இரண்டகம் பண்ணாதே.



இரண்டொழுக்க பண்புகள் :


1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.


2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.


பொன்மொழி :


நடைமுறைக்கு ஒத்து வராத விஷயத்தை ஞானம் என்று சொல்வது பிழை.

பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் பெருகி விட்டால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை குறையும்.



பாரதியார்



பொது அறிவு :


1. தோரியம் அதிகமாக கிடைக்கும் மாநிலம் எது? 


ஆந்திர பிரதேசம். 


2. ரப்பர் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது? 


இந்தியா.


English words & meanings :


Ahead of the curve - forming new ideas before others, அடுத்தவர்களுக்கு முன்பாக புது கருத்துக்கள் உருவாக்குவது,

 Around the clock - at all time, எல்லா நேரமும் 



ஆரோக்ய வாழ்வு :


குப்பைமேனி : - குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.


கணினி யுகம் :


Left ALT+left SHIFT+NUM LOCK -  (Switch the MouseKeys either on or off)


SHIFT five times -  (Switch the StickyKeys either on or off)



டிசம்பர் 17


ஓய்வூதியர் நாள்


ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[1]


நீதிக்கதை

கழியை விட்டதால் இறந்த ஆமை


ஓர் அழகிய குளம் ஒன்றில் இரண்டு அன்னப் பறவைகள் வாழ்ந்து வந்தன. ஒன்றின் பெயர் விகடம். மற்றொன்றின் பெயர் சங்கடம். அதே குளத்தில் கம்புக்கிரீவன் என்ற ஆமையும் வாழ்ந்து வந்தது. 


விகடம், சங்கடம், கம்புக்கிரீவன் ஆகிய மூவரும் நல்ல நண்பர்கள். காலப்போக்கில் மழைப்பொழிவு குறைந்ததால், குளத்தின் நீரளவு குறையத் தொடங்கியது. 


இதனைக் கவனித்த அன்னப் பறவைகள், இனியும் இந்தக் குளத்தை நம்பி வாழ்வது பயனற்றது. இனி நாம் வேறொரு குளத்திற்குச் செல்வோம் என்று முடிவு செய்தன. தங்களின் இந்த முடிவைத் தங்கள் நண்பனான ஆமையிடமும் கூறின. 


நண்பர்களே! நீங்கள் பறந்துசென்று வேறு ஒரு குளத்தினை அடைந்துவிடுவீர்கள். நான் எப்படி வேறு குளத்திற்குச் செல்வது? எனக்கும் ஏதாவது வழி சொல்லுங்களேன்! என்றது ஆமை. 


அன்னப் பறவை விகடன், ஆமையிடம் நண்பா! நாங்கள் ஒரு நீண்ட கழியினைக் கொண்டு வருகிறோம். அதன் ஒரு முனைப் பகுதியை நானும் மற்றொரு முனைப் பகுதியை சங்கடகனும் வாயால் கவ்விப் பிடித்துக் கொள்வோம். நீ அந்தக் கழியின் நடுப்பகுதியில் உன் வாயால் கவ்விக் கொள்ள வேண்டும். நாங்கள் இருவரும் கழியால் உன்னைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்று வேறு ஒரு குளத்தினை அடைவோம் என்று தங்கள் திட்டத்தினைக் கூறியது. 


நண்பா! இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பறந்து செல்லும் போது நீ எதுவும் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நீ கீழே விழுந்துவிடுவாய். பிறகு உன்னை எங்களால் காப்பாற்ற முடியாது என்று சங்கடகன் கூறியது. 


நண்பர்களே! கவலை வேண்டாம். நான் பேசவே மாட்டேன் என்று உறுதியளித்தது ஆமை. 


விகடன் கூறியது போலவே கழியில் ஆமையைத் தூக்கிக் கொண்டு அன்னப் பறவைகள் பறக்கத் தொடங்கின. 


ஓர் ஊரின் வழியாகப் பறந்து செல்லும் போது, ஊர் மக்கள் இந்த அதிசயமான காட்சியைப் பார்த்து வியந்தனர். அவர்கள் கூவி ஒலியெழுப்பினர். எங்கிருந்து இந்த சப்தம் வருகின்றது? என்று நினைத்த ஆமை, அன்னப் பறவைகளிடம் கேட்க நினைத்துத் தன் வாயைத் திறந்தது. உடனே, ஆமையின் பிடி கழியிலிருந்து நழுவியது. ஆமை கீழே விழுந்து இறந்தது. 


நீதி :

நமக்கு நன்மை செய்கின்றவர்களின் பேச்சை நாம் மதிக்கவேண்டும் என்று பெண் பறவை, ஆண் பறவைக்குக் கூறியது.


இன்றைய செய்திகள்


17.12.21


◆வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயப் பரப்பளவைக் குறைக்கும் முடிவு வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு.


◆உடன்குடியில் கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டால் தமிழக அரசின் நிதி நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


◆ஆதிதிராவிட மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையானது மத்திய அரசு வழங்கும் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


◆34 வெளிநாடுகளின் 342 செயற்கைக்கோள்களை ஏவியதால் இந்தியாவிற்கு 35 மில்லியன் டாலர், 10 மில்லியன் யூரோ வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


◆ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை இணைப்பது, ஆண்டுக்கு 4 முறை புதிய வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட 4 தேர்தல் சீர்திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


◆பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


◆கரோனா, டெல்டா வைரஸைவிட உருமாறிய ஒமைக்ரான் 70 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது. ஆனால், நோய் பாதிப்பு குறைவே என்று ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.


◆உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பிவி சிந்து கால் இறுதிக்கு முன்னேறினார்.


◆ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு முதல் வெற்றி.



Today's Headlines


 🌸 Decision to reduce the area of ​​Vedanthangal Bird Sanctuary withdrawn: Government of Tamil Nadu Announced.


 🌸A study by the Climate Risk Horizons Organization has revealed that the financial position of the Government of Tamil Nadu could worsen if the construction work of thermal power plants being constructed in Udankudi continues.


🌸 It has been announced that the Special Post Matriculation Scholarship provided by the Government of Tamil Nadu to Adi Dravida students will be increased in line with the amount provided by the Central Government.


 🌸Minister Jitendra Singh has said that India has earned $ 35 million and 10 million euros by launching 342 foreign satellites.


 🌸 The Union Cabinet has approved the Election Commission's recommendation of four electoral reforms, including the merger of Aadhar and voter cards, and the addition of new voters to the list four times per year.


 🌸Recommendation to raise the age of marriage for women to 21 is approved by Union Cabinet.


 🌸 Mutated omicron is 70 times faster than the corona, delta virus.  However, a study by the University of Hong Kong found that the effect of the disease was low.



 🌸 P V Sindhu advanced to the quarterfinals of the World Badminton Championships.


 🌸 Asian Champions Trophy Hockey: First victory for the Indian team in the 2nd league match.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...