கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: குடி செயல் வகை


குறள் : 1022


ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.


பொருள்:

ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்


பழமொழி :

In the end things will mend.


போகப் போக எல்லாம் சரியாகும்


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன். 


2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன். 


பொன்மொழி :


தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.


-ஒரிசன் ஸ்வெட் மார்டென்



பொது அறிவு :


1.திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது எது ? 


 பெட்ரோலியம். 


 2.மேட்டூர் அணையின் வேறு பெயர் என்ன? 


 ஸ்டான்லி அணை.


English words & meanings :


Ob-lig-a-to-ry - mandatory, compulsory, Adjective, கண்டிப்பாக தேவை, அத்தியாவசியம், பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு :


100 கிராம் கறிவேப்பிலையில் 108 கலோரி அளவிற்கு ஆற்றல் காணப்படுகிறது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.


NMMS Q 38:


ஆடைகளில் படிந்துள்ள கறைகளை போக்க உதவுவது எது? 


 விடை - சோடியம் ஹைட்ராக்ஸைடு


ஆகஸ்ட்  10


வைணு பாப்பு   அவர்களின் பிறந்தநாள்


மணாலி கல்லாட் வைணு பாப்பு (Manali Kallat Vainu Bappu, ஆகஸ்ட் 10, 1927 - ஆகஸ்ட் 19, 1982) நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம்-வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். தமிழ்நாட்டின் காவலூரில் அமைக்கப்பட்டுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தை நிருவுவதற்கு முக்கிய காரணமாவார்.


நீதிக்கதை


காக்கா ஏன் கறுப்பாச்சு?


ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சாம். அப்ப எல்லா காக்காவும் ரொம்ப தூரமா சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம். 


சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வராம பெரியவங்களாகி வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அற்புதா. 


அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். இரண்டுபேரும் எப்பயும் பேசிட்டே இருபாங்கலாம், ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம். 


சூரியன் கிட்ட வரைக்கும் பறக்கிற காக்காவை கூப்பிட்டு பையில சந்தனம், வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசி கிட்ட கொடுக்க சொல்லுச்சாம். 


காக்கா அந்த பைய தூக்கிக்கிட்டு இளவரசி இருந்த அரண்மனையை நோக்கி பறந்து போகும் வழியில் திருமண ஊர்வலம் போயிட்டு இருந்தது. அதில் நிறைய பழங்கள், உணவுப்பொருட்கள் எடுத்துக்கிட்டு போனாங்க. காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசைப்பட்டு, பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். 


மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் பையப் பார்த்து மரத்துல ஏறி பைக்குள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பார்த்து சொக்கி போயிட்டானாம். உடனே எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான். 


காக்கா நல்லா சாப்பிட்டு வந்து, பைய எடுத்துக்கிட்டு இளவரசி கிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்புனு சொல்லிட்டு பைய தூக்கிப்போட்டுச்சாம். 


மறுநாள் காலை, சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியன் அந்த பை கீழ கிடந்ததைப் பார்த்து ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம். பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனுக்கும் கோபம் வந்து பூமி மேல தூரமா போயிடுச்சாம். 


நீதி :

கொடுக்கும் வேலையை சரியாக செய்தல் வேண்டும்.


இன்றைய செய்திகள்


10.08.22


* செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் டிரம்ஸ், வீணை, கீ போர்டு, புல்லாங்குழல் ஆகிய நான்கு கருவிகளில் இருந்து ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடல் இசைக்கப்பட்டது.


* ரூ.55.34 கோடியில் கடப்பாக்கம் ஏரி சீரமைப்பு: உலக சுற்றுச்சூழல் நிறுவனம் நிதியுதவி.


* காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் இணைந்து செயல்பட உலக வள நிறுவனத்துக்கும் சென்னை மாநகராட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


* ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணியின்போது தங்க நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. வெண்கல, இரும்பு பொருட்களும் கிடைத்துள்ளன.


* தமிழகத்தில் நீர் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், மின் தேவையும் குறைந்ததால், ஒட்டுமொத்த அனல் மின் நிலையங்களிலும் நேற்று 90 சதவீதத்திற்கு மேல் இயக்கம் நிறுத்தப்பட்டது.  அனல் மின் நிலைய வரலாற்றில் இது அரிய நிகழ்வாகும்.


* மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.


* போர் ஒத்திகை மூலம் படையெடுப்புக்கு சீனா தயாராகி வருவதாக தைவான் வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


* காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள்  கடைசி நாளில் 4 தங்கப் பதக்கங்களை வென்றனர். இதன்மூலம் பதக்கப் பட்டியலில்  22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது.


* செஸ் ஒலிம்பியாட்: தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கப் பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.


* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Today's Headlines


 * At the closing ceremony of the Chess Olympiad, the song 'Semmozhiyana Tamil Mozhiyam' was played from four instruments namely Drums, Veena, Keyboard and Flute.


 * Renovation of Kadapakkam Lake at Rs.55.34 crore: Funded by World Environment Agency.


 * A Memorandum of Understanding has been signed between the World Resources Institute and the Chennai Municipal Corporation to collaborate on climate change related activities.


 * During the excavation work at Adichanallur, a golden forehead ornament was found.  Bronze and iron objects have also been found.


 * In Tamil Nadu, more than 90 percent of the thermal power plants stopped operating yesterday due to the increase in power generation in hydropower plants and wind farms, as the power demand also decreased.  This is a rare event in the history of thermal power plants.


*  Population Control Act: Supreme Court Notice to Central Govt.


 * Taiwan's foreign minister has accused China of preparing for an invasion through war rehearsals.


 * Indian sportsmen and women won 4 gold medals on the last day of the Commonwealth Games.  With this, India stood 4th in the medal list with a total of 61 medals including 22 gold, 16 silver and 23 bronze.


*  Chess Olympiad: Tamil Nadu player Gukesh won gold medal and Pragnananda won bronze medal in individual category.


 * India won the last T20 against West Indies by 88 runs.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...