கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.04.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.04.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: புறங்கூறாமை


குறள் : 190

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னு முயிர்க்கு.


பொருள்:

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்


பழமொழி :

Constant change is a sign of progress.

தொடர்ந்த மாற்றம், முன்னேற்றத்திற்கான அறிகுறி.


இரண்டொழுக்க பண்புகள் :


1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 


2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்


பொன்மொழி :


உண்மைகள் உறங்கலாம் ஆனால் ஊமையாகாது


பொது அறிவு :


1. சுதந்திர இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார் ? 


ராஜாஜி .


 2.அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்? 


ஜார்ஜ் வாஷிங்டன்.


English words & meanings :


Reel - a round object where we can store the wire or film role, கம்பி, சினிமா பட சுருள் ஆகியவற்றை சுற்றி வைக்க பயன்படும் வட்ட வடிவ பொருள். 


Rift - a crack in the rock, பாறையில் ஏற்படும் பிளவு 

ஆரோக்ய வாழ்வு :


ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் C அதிகம் உள்ளது. உடலில் கொலாஜன் உற்பத்தி செய்ய வைட்டமின் C மிகவும் முக்கியம். கொலாஜன்கள் சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் விரிவு தன்மைக்கு மிகவும் அவசியம். முதுமையான தோற்றத்திற்கும், சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவதற்கும் முக்கியமான காரணம் குறைந்த அளவிலான கொலாஜன்கள் ஆகும். ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பதால் நம் சருமத்திற்கு முதுமை அகற்றும் தன்மை உண்டாகும்.


கணினி யுகம்


Windows key + H : Open the Share charm.

Windows key + I : Open Settings.



ஏப்ரல் 28


தொழிலாளர் நினைவு நாள் (Workers' Memorial Day,)






தொழிலாளர் நினைவு நாள் (Workers' Memorial Day, International Workers' Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day (ICD) for Dead and Injured) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் நாள் உலகெங்கும் தமது பணியின் போது கொல்லப்பட்டு, காயமடைந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர்.[1]


இது வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் என்பவற்றின் விளைவுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்; தொழில்சார்ந்த பாதுகாப்பு, நலம் ஆகியவை தொடர்பான விடயங்களை நாடுகள் மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் செயல்திட்டங்களில் இடம்பெறச் செய்வதற்காகவும்; தொழில்சார் பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுவதற்குமே இந்நாள் அறிவிக்கப்பட்டது.


நீதிக்கதை


சுயநலம்


ஒரு ஊரில் ராமசாமி என்ற ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சுயநலமானவர். அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். அந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். 


சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியினுடையதாக இருக்கலாம் எனக்கருதி, அதை குரு அவரிடம் கொடுத்தார். 


குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார். 


குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். 


நண்பர்கள் இருவரும் ஊரில் உள்ள தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய்? என்று கேட்டார். அதற்கு அவர் 50 தங்க நாணயங்கள் என்றார். குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தாய்?என்று கேட்டார். அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார். 


ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, நீ தொலைத் திருப்பதோ 50 தங்க நாணயங்கள். ஆனால் குரு கண்டறிந்திருப்பதோ வெறும் 40 தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்காது. இனிமேல் வேறுயாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீ கிளம்பலாம் என்றார். 


தலைவர் குருவைப்பார்த்து நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள் என்றார். 



தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார்.


இன்றைய செய்திகள்


28.04. 2023


*தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சிறப்பு தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


* சூடான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வரும் பணிக்காக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலத் துறை ஆணையரகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.


*13 லட்சம் தொழிலாளர்களுக்கு காப்பீடு, இலவச பேருந்து வசதி - விரைந்து அமல்படுத்த உத்தரவிட்ட டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்.


*நாடு முழுவதும் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


*ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்: 4-வது இடத்தில் இந்தியா.


*பெடரேஷன் கோப்பை கைப்பந்து: ராஜஸ்தான், ரெயில்வே அணி 'சாம்பியன்'.


*கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மே மாதம் 1-ந் தேதி தொடங்குகிறது.


*ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines


*Minister M. Subramanian has said that the incidence of Corona is gradually decreasing in Tamil Nadu.


 *The Tamil Nadu government has allocated Rs 80 crore for special dredging work in the Cauvery Delta districts this year.


* Control rooms have been set up at the Tamil Nadu House in Delhi and the Tamil Nadu Welfare Department Commissionerate in Chennai for the rescue of Tamilan s who were ​​trapped in Sudan.


 *Delhi CM Kejriwal ordered to speed up the implementation of insurance, and free bus facilities for 13 lakh workers.


* The Union Cabinet has approved the setting up of 157 new nursing colleges at a cost of Rs 1,570 crore near the existing medical colleges across the country.


 *List of countries that spend the most on the military: India at 4th place.


* Federation Cup Volleyball: Rajasthan, Railway Team Got 'Championship'


 *The summer free volleyball training camp will start on May 1st at the Mayor Radhakrishnan Stadium in Egmore, Chennai.


 *Asian Badminton Championship: India's Trisha Jolly-Gayatri Gopichand pair advance to the next round.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...