கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.11.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.11.2023 - School Morning Prayer Activities...

 


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வெகுளாமை


குறள்:305


தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.


விளக்கம்:


ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.


பழமொழி :

Good clothes open all door


ஆடை இல்லாதவன் அரை மனிதன்.


இரண்டொழுக்க பண்புகள் :


1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :


உன் இலக்கை

அடையும் வரை..

வெற்றியோ..

தோல்வியோ.. எதையும்

எதிர்பார்க்காமல்

ஓடிக் கொண்டே இரு.


பொது அறிவு :


1. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?


விடை: 20 வருடங்கள்


2. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?


விடை: மலேசியா


English words & meanings :


 breeches (noun) ப்ரீச்சிஸ்- short trousers அரைக்கால் சட்டை. 

bribery (noun) ப்ரைபெரி- act of giving or taking bribes லஞ்ச ஊழல்


ஆரோக்ய வாழ்வு : 


செம்பருத்தி பூ : செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 


நவம்பர் 24


அருந்ததி ராய்  அவர்களின் பிறந்தநாள்


சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.


இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (en:Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். 

1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர்[7] என்பது குறிப்பிடத்தக்கது.

2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்[8].

மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.[9]

2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார்.



நீதிக்கதை


 பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.


ஊர்மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல்நின்று கொண்டு தங்கநாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்தமக்கள் வீது அள்ளி வீசினான்.அங்கு நின்று கொண்டு இருந்தகடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும்வரை வீசி கொண்டே இருந்தான். அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.


மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார், மன்னர் ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார்,என்று சொன்னபோது மன்னன் குறுக்கிட்டு சொன்னான், இல்லை இல்லை எனக்கு ஆண் குழந்தை பிறந்ததற்காக நான் தங்ககாசு கொடுக்கவில்லை எனக்கு பாடம் நடத்தி என்னை புத்தி சாலியாக ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான்.


அவர் என் மகனை மிக பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற சந்தோசத்தில் தான் இந்த பொற் காசுகளை அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளி தூவினான். மன்னன் சொன்னபடி பிற்காலத்தில் மிக பெரும் அறிவாளியாக உருவெடுத்து வந்தவன் தான் பின்னாளில் பார் போற்றிய  மாவீரன் அலெக்சாண்டர்


ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிக சிறந்த மனிதனாக மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான்.ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் அவன் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் அவன் நம்பிக்கையை காப்பாற்றினார். AlwaysTeachers are Wondeful in the world. குரு அறிவுரை கேட்டு நடத்தும் வாழ்க்கை ராஜ வாழ்க்கையே........


இன்றைய செய்திகள்


24.11.2023


*தமிழகத்திற்கு டிசம்பர் இறுதி வரை தினமும் 2700 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்; காவிரி ஒழுங்காற்று குழு.


* நீலகிரிக்கு வராதீங்க சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்.


* தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்.


* ஐ ஆர் சி டி சி இணையதளம் நேற்று காலை 11 மணியிலிருந்து செயல்படவில்லை- பயணிகள் பாதிப்பு. 


*கோயம்பேடு மார்க்கெட்டில் குளிர் பதன கிடங்கை நவீனப்படுத்த திட்டம்.


*சர்வதேச பீடே செஸ் போட்டி தமிழக வீரர் ஆயூஸ் ரவிக்குமார் சாம்பியன்.


Today's Headlines


* 2700 cubic feet of water should be released daily till the end of December to Tamil Nadu;  Cauvery Management Committee.


 * Collector requests tourists not to visit Nilgiris.


 * Former Tamil Nadu Governor Fatima Bivi passed away.


 * The IRCTC website was down since 11 am yesterday - passengers affected.


 *Project for Modernization of Cold Storage in Koyambedu Market.


 * Tamil Nadu player Ayus Ravikumar is the champion of the International Pede Chess Tournament.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...