கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2024...

  

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.


குறள் 394:


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.


விளக்கம் :

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.



பழமொழி : 


Birds of the same feather flock together.


இனம் இனத்தைச் சேரும்.



பொன்மொழி:


Attitude is a little thing that makes a big difference. - Winston Churchill


மனநிலை என்பது மிகவும் சிறியதுதான். அதனால் ஏற்படும் மாற்றம் மிகப் பெரியது - வின்ஸ்டன் சர்ச்சில் 


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்

கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்

தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து

அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Ask - கேள்

Assemble - சேர் 

Assurance - நிச்சயம்

Astringency - துவர்ப்பு


ஆரோக்கியம்


அவகேடோ


நவீன வாழ்வியல் முறையில் உடலில் உள்ள கொழுப்புகளை நீக்க நிறையப் பேர் மேற்கொள்வது உடற்பயிற்சிகள். எடையைக் குறைப்பது மட்டுமே கொழுப்பைக் குறைப்பதாகாது உண்மையில் நம் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புகளும் தேவை. அவகேடோ நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பைத் தரக்கூடியது. இது நம் மனநிலையை மேம்படுத்தவும் உதவும். அவகேடோவில் இருப்பது, ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு (Monounsaturated fat), நல்ல கொழுப்பை மேம்படுத்தவும் ரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகள் (கொழுப்பு) குறைவாகச் சுரக்கவும் உதவும். இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கான அபாயத்திலிருந்து காக்கும். `ஃபுட் கிரேவிங்ஸ்' எனப்படும் அதீதமாகச் சாப்பிடும் எண்ணத்தைப் போக்க உதவும்.



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 9

நிகழ்வுகள்

1915 – மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த இந்நாள் வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.


1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.


1951 – ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.


2007 – ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் ஐ-போனை சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தினார்.



1927 – சுந்தர்லால் பகுகுணா, இந்திய சூழலியலாளர் - பிறந்த நாள் இன்று...



ஜனவரி 8 - சிறப்பு நாட்கள் :


வெளிநாடுவாழ் இந்தியர் நாள் 



நீதிக்கதை


அறிவே ஆயுதம்


சிங்கம் ஒரு காட்டு மிருகம். அதை மிருகங்களின் இராஜா என்றும் கூறுவர்.


அது தாவர உணவு உண்ணும், மான், மரை, முயல் போன்ற சாதுவான மிருகங்களை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும்.


ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை வேட்டையாடி தின்று வந்தது.


இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.


சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.


சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும்.


அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.


எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன.


அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது.


அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது,

ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.


அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.


சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.


அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சுவாமி” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.


என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.


அதற்கு “ஆம் சுவாமி” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.


அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.


பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது.


இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது.


சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.


முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.


 

இன்றைய முக்கிய செய்திகள் 


09-01-2024 


சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியத்துவமாக உள்ளது” என்றார்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மத்திய அரசின் குழு ஜனவரி 11 முதல் 14 வரை ஆய்வு...


வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை நாளான ஜனவரி 16-ம் தேதி திறந்திருக்கும்...


எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயுக்கசிவு - அறிக்கை தாக்கல் செய்ய கடல்சார் வாரியம் மற்றும் தொழில் பாதுகாப்புத்துறைக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு...


ஜனவரி 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா பயணம் செய்ய உள்ளார்...


பொங்கல் பண்டிகை; 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்...


உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்களை மாநில அரசே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது...



Today's Headlines:


Speaking at the World Investor Conference held in Chennai, industrialist Anand Mahendra said, "Tamil Nadu is important in the development of India." 


The central government team will inspect the flood-affected southern districts from January 11 to 14... 


Vandalur Zoo will be open on 16th January holiday...


Ammonia gas leak from Ennoore Coromandel factory - Southern National Green Tribunal directs Maritime Board and Industrial Safety Department to submit report... 


On January 28, Chief Minister M.K.Stalin is going to visit Spain and Australia... 


Pongal festival; 19,484 special buses will be operated - Minister Sivashankar...


The Supreme Court dismissed the petitions seeking 10% reservation for the upper caste poor (EWS) in the states of Tamil Nadu and Karnataka saying that the state government should decide on the matter...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...