கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.


குறள் 395:


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்.



விளக்கம்:


செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.




பழமொழி : 


Blood is thicker than water.


தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.



பொன்மொழி:


Life isn't about finding yourself. Life is about creating yourself. - George Bernard Shaw 


வாழ்க்கை என்பது உங்களைக் கண்டறிவதல்ல, உங்களை உருவாக்கிக்கொள்வது - ஜார்ஜ் பெர்னாட் ஷா 


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்

40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்

100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி

100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.

பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Attempt - முயற்சி

 Attention - கவனம்

Await - எதிர்பார் 

Awake - விழி 


ஆரோக்கியம்


தினை


சிறுதானிய உணவுகளில் அதிகப் புரதச்சத்துள்ள உணவு தினை மட்டுமே. இது அனைவருக்கும், குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கான முக்கியமான தகவல். இதில் பழுப்பு அரிசியைவிட அதிக நார்ச்சத்தும் இரு மடங்கு புரதச்சத்தும் இருக்கின்றன. தினையை அரிசியைப் போலவே பல்வேறுவிதமாகச் சமைக்கலாம். இதில் இருக்கும் முழுமையான ஆரோக்கிய சத்துக்களான நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். உடலின் எடையைக் குறைக்கும்; ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


இன்றைய சிறப்புகள்


ஜனவரி 10


நிகழ்வுகள்

1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர தாஷ்கந்து உடன்பாட்டில் லால் பகதூர் சாஸ்திரி, அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.



நீதிக்கதை


ஆராய்ந்து நட்பு கொள்


ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது.


அக்காட்டின் ஒரு பகுதில் பெரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றில் எப்போதுமே நீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் செழிப்பாகக் காணப்பட்டதால் அங்கு போய் பார்க்க வேண்டும் என்று குரங்கிற்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த ஆற்றைக் கடந்து போக பயமாக இருந்தது.


ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து ‘நாவல் பழம் மிகவும் ருசியாக உள்ளதா?’ எனக் கேட்டது.


குரங்கும்..”முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்” என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது. முதலையும் பழத்தை ருசித்து சாப்பிட்டது. அவற்றைச் சாப்பிட்ட முதலை இந்த சுவையான பழங்களை உண்ணும் முதலையின் ஈரன் மிகவும் ருசியாக இருக்கும் என எண்ணியது. அதனால் முதலை குரங்குடன் நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண திட்டம் போட்டது


குரங்காரே நீர் எனக்கு நல்லபழங்களை தந்து என் பசியை தீர்த்தீர் உமக்கு நான் ஏதும் உபகாரம் செய்யலாம் என்று யோசிக்கின்றேன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் மற்றக் கரையில் நல்ல பழ மரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு சென்றால் அப் பழங்களை நீயும் உண்டு எனக்கும் தரலாம் அல்லவா என்றது.



அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்டைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசை இருக்கு ஆனால் எனக்கு இந்த ஆற்றைக் கடந்து போகதான் பயமாக இருக்கிறது என்றது.


அதனைக் கேட்ட முதலை நான் இருக்கும் போது நீ ஏன் பயப்பட வேண்டும். இப்பவே எனது முதுகில் ஏறி இரு நான் உன்னை அக்கரையில் சேர்த்து விடுகின்றேன் என்றது.


வஞ்ச எண்ணம் கொண்ட முதலையின் அன்பு வார்த்தையை நம்பிய குரங்கும் முதலையின் முதுகின் மீது தாவி ஏறி உட்காந்தது.


தனது ஆசையை நிறைவேற்ற இதுதான் தருணம் என்று எணிய முதலை குரங்கை நடு ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கே குரங்கின் ஈரலை சாப்பிட இருக்கும் தனது ஆசையைச் குரங்கிற்கு சொன்னது. அப்போது குரங்கு பதட்டமடையாது.


அப்படியா! நீ அதை முதலில் சொல்லவில்லையே என்று கூறி நீரில் நனைந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது ஈரலை எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறி; என்னை திரும்ப மரத்தடிக்கு கொண்டு செல் நான் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருகிறேன் என்று சமயோசிதமாக கூறியது.


முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது


வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..’முட்டாள் முதலையே. ஈரலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.


முதலையும் ஏமாந்து திரும்பியது.


நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.

 

இன்றைய முக்கிய செய்திகள் 


09-01-2024 


அரசுப் பள்ளிகளில் சமூக நீதி பாடல்; அமைச்சர் உதயநிதி கோரிக்கை...


போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மின்வாரிய தொழிலாளர்கள் ஆதரவு...


அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: முதல்வர் அறிவிப்பு...


மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஒன்றான  வேர்ட்பேட்  (WordPad) செயலியை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக விண்டோஸ் 11 ஓ.எஸ் முதல் வேர்ட்பேட் செயலி வழங்கப்படாது எனக் கூறியுள்ளது...


கிராண்ட் மாஸ்டர் வைஷாலி; கிரிக்கெட் வீரர் ஷமிக்கு அர்ஜுனா விருது: ஜனாதிபதி வழங்கினார்...



Today's Headlines:


Social Justice Song in Government Schools; Minister Udayanidhi's request...


 Transport workers strike: TANGEDCO workers support...


 Pongal gift of Rs.1000 to all family card holders: CM announces...


Microsoft has announced that it is discontinuing one of its products, WordPad. Especially since Windows 11 OS has said that WordPad app will not be provided...


  Arjuna award to Grand Master Vaishali & cricketer Shami: President presents...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...