கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.01.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.


குறள் 396:


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.


விளக்கம்:

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.




பழமொழி : 


Calm before the strom. stoop to conqer.


புலி பதுங்குவது பாய்வதற்கு அடையாளம்.



பொன்மொழி:


Life is really simple, but we insist on making it complicated. - Confucius 


வாழ்க்கை மிகவும் எளியது. நாம்தான் அதை சிக்கலாக்கிக் கொள்கிறோம் - கன்பூசியஸ் 



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்

எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்

செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்

கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்

மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Bear - கரடி

Beard - தாடி

Beatel leaf - வெற்றிலை 

Beautiful - அழகான 


ஆரோக்கியம்


ஆப்பிள்


அமெரிக்காவில் மற்ற பழங்களைவிட ஆப்பிள் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். காரணம், இதில் அதிக அளவில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ். ஆப்பிளின் தோலில்தான் அற்புதமான ஆன்டிஆக்ஸிடன்ஸ் நிறைந்துள்ளன. அதனால் தோலுடன் கூடிய ஆப்பிளைச் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆப்பிளில் நார்ச்சத்து சுமாரான அளவிலேயே இருந்தாலும், அதில் பழப்பசை சத்து (Pectin) நிறைவாக இருக்கிறது. இது, நம் உடலுக்கு சக்தியைத் தரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போதுமானது. இதய ஆரோக்கியம், சர்க்கரைநோய், புற்றுநோய், பக்கவாதம், மூளை வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஆற்றல் ஆப்பிளுக்கு உண்டு.


இன்றைய சிறப்புகள்


ஜனவரி 11


நிகழ்வுகள்

1972 – கிழக்குப் பாக்கித்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


பிறந்த நாள் 

1973 – ராகுல் திராவிட், இந்திய கிரிக்கெட் வீரர்


நினைவு நாள் 

1932 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)

1966 – லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் 2வது பிரதமர்


சிறப்பு நாட்கள்

குழந்தைகள் நாள் (தூனிசியா)

குடியரசு நாள் (அல்பேனியா)



நீதிக்கதை


ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது


பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.


அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது.


அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது.


உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை.


கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது.


கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது.


உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.


எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.



 

இன்றைய முக்கிய செய்திகள் 


11-01-2024 


6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது...


பஸ் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்; பணிக்கு திரும்புவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதி...


சென்னையில் இருந்து சென்ற சார்மினார் ரயில் ஹைதரபாத் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம் புரண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்...


ட்ரோன் டெக்னீஷியன் பயிற்சி; விண்ணப்பிக்க புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ அழைப்பு...


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு...



Today's Headlines:

11-01-2024


The 6th Khelo India Youth Games will be held from January 19th to 31st in 4 cities in Tamil Nadu namely Chennai, Coimbatore, Trichy and Madurai... 


Bus strike temporarily called off; Transport workers assured to return to work...


Charminar train from Chennai derailed at Hyderabad Nampalli station, injuring more than 10 passengers... 


Drone Technician Training; Puducherry Government ITI Invitation to Apply... 


Teacher's Recruitment Board Annual Exam Schedule Released...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...