கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரூப் 2 பணியிடங்கள் 6,151 ஆக அதிகரிப்பு...

 Group 2 பணியிடங்கள் 6,151 ஆக அதிகரிப்பு...








குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


 தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அப்போது, இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 தேர்வு ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அப்போது, இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 5413 காலி இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



 அனைத்து பதவிகளுக்காமான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியிடப்பட்டது.



முதல்நிலைத் தேர்வையடுத்து, முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய 2 தாள்களுக்குமான தேர்வு கடந்த பிப்.25-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.



 இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்கின்ற தகவலை டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 24ம் தேதி குரூப் 2/2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 6033 ஆக அதிகரிக்கபட்டது



 இந்நிலையில், தற்போது மேலும் 118 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 6151 ஆக உள்ளன.     திருத்தியமைக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்த இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Final Answer Key

  NMMS 2024-2025 Final Key Answer Released by DGE >>> Click Here to Download...