கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.02.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 419:


நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராதல் அரிது.


விளக்கம்:

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.



பழமொழி : 


First deserve, then desire.


முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?


பொன்மொழி:


Opportunities are usually disguised by hard work, so most people don't recognize them.


வாய்ப்புகள் பொதுவாக கடின உழைப்பு என்னும் மாறுவேடமிட்டுத்தான் வருகின்றன. ஆகவே பல மக்களுக்கு அதை அடையாளம் கண்டுகொள்ளத் தெரிவதில்லை.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை

விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா

ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்

அடர்த்தி குறைவான பொருள் - வாயு

கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Convict - குற்றம் சுமத்தப்பட்டவர்

Cook - சமைத்தல் 

Copper - செம்பு 

Coral - பவளம் 

Coriander - கொத்தமல்லி 

Corn - சோளம் 


ஆரோக்கியம்


உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் அத்திப் பழத்தை உலர வைத்தும் பயன்படுத்தலாம். மாங்கனீசு, புரதம், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை அத்திப் பழத்தில் அதிக அளவில் இருக்கிறது. மற்ற பழங்களில் இருப்பதைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களும் அத்திப் பழத்தில் இருக்கிறது.


இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 06


1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.



பிறந்த நாள் 

1975 – ஆர்க்குட் புயுக்கோக்டன், ஆர்க்குட் சமூக வலையமைப்பைக் கண்டுபிடித்த துருக்கியர்



நினைவு நாள் 

2022 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி (பி. 1929)



சிறப்பு நாட்கள்


நியூசிலாந்து நிறுவிய நாள், 1840




நீதிக்கதை



பணிவு வேண்டும் 


மௌரிய வம்சத்தின் தலைசிறந்த மன்னர் அசோகர். கலிங்கப்போரே இவர் செய்த கடைசி போர். அந்தப் போரில் வீரர்கள் பட்ட வேதனைகளை கண்டு மனம் மாறி, இனி தான் போரே செய்வதில்லை என்று முடிவெடுத்து நாட்டு நலப் பணிகளில் கவனம் செலுத்தி தலைசிறந்தவராக விளங்கினார்.


புத்த மதத்தை உலகமெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டு அதில் தம் மகளையும் மகனையும் ஈடுபட செய்த பெருமைக்குரியவர் அவர்.


இத்தகைய பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான மாமன்னர் அசோகர். ஒருநாள் தனது ஆலோசகர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் முனிவர் ஒருவர் வந்தார்.


மாமன்னர் அசோகர் அந்த முனிவரை பார்த்ததும் ஓடிப்போய் காலில் விழுந்து வணங்கினார். இச்செயல், அருகில் இருந்த அமைச்சருக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது.



அமைச்சர் அசோகரை பார்த்து, “மாமன்னரே மிகப்பெரிய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய உங்கள் தலையானது சாதாரண ஒரு முனிவரின் காலில் படுவதா?” என்று கேட்டார்.


அதற்கு பேரரசர் அசோகர் எந்த பதிலும் கூறாமல் லேசாக சிரித்தபடியே சென்று விட்டார்.


பிறகு ஒரு நாள் அமைச்சரை கூப்பிட்டு, “அமைச்சரே, எனக்கு ஒரு ஆட்டின் தலை, அடுத்ததாக ஒரு புலியின் தலை, மூன்றாவதாக ஒரு மனிதனின் தலை என மூன்று தலைகள் வேண்டும்” என்றார்.


அமைச்சர் மிகவும் சிரமப்பட்டு மூன்று தலைகளையும் எடுத்துக்கொண்டு அரசரின் முன் வந்தார்.



அவற்றை பார்த்த மாமன்னர் அசோகர், “மிகவும் நல்லது. இப்பொழுது இந்த மூன்று தலைகளையும் எடுத்துக்கொண்டு போய் சந்தையில் விற்றுவிட்டு வாருங்கள்” என்றார்.


சந்தையில் ஆட்டின் தலையை சிறந்த விலைக்கு ஒருவர் வாங்கிக் கொண்டு போய்விட்டார். 


புலி தலையை வீட்டில் மாட்டிக் வைக்கலாம் என்று எண்ணி ஒருவர் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். 


அந்த சந்தையில் மனித தலையை மட்டும் வாங்க ஒருவருமே முன்வரவில்லை.


அமைச்சர் அரசரிடம் திரும்பி வந்து, “மாமன்னரே, ஆட்டுத்தலையையும் புலி தலையையும் மக்கள் வாங்கி சென்று விட்டனர். ஆனால், மனித தலையை மட்டும் எவருமே விலை கொடுத்து வாங்க முன் வரவில்லை” என்றார்.


அதற்கு அரசர் அமைச்சரை பார்த்து, “அமைச்சரே, மனித தலையை இலவசமாகவே கொடுத்து விடுங்கள்” என்றார்.


“சரி”, என்று சொல்லிவிட்டு சென்றார் அமைச்சர். மனித தலையை இனாமாக கொடுக்க முன் வந்தும் யாரும் அதனை வாங்க முன்வரவில்லை.


மறுபடியும் அமைச்சர் மன்னரை சந்தித்தார்.


இப்பொழுது அசோகர் அமைச்சரை பார்த்து, “அமைச்சரே, பேரரசனாக இருக்கும் என் தலைக்கும் இது பொருந்தும். உயிர் இருக்கும் வரையில்தான் இந்த மனித தலைக்கு மதிப்பு. உயிர் போன பிறகு அதன் மதிப்பும் போய்விடுகிறது. எனவே, மதிப்பு இருக்கும்போதே தலையால் பெரியோர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி அந்த புனிதத்தைப் பெற்றுக் கொள்வது நல்லது. அதுவே பணிவு இந்த பணிவு அனைவருக்கும் வேண்டும்” என்றார்.


 நீதி : பெரியோர்களிடம் பணிந்து நடக்க வேண்டும். பணிந்து நடப்பவர்களை தான் அனைவரும் விரும்புவார்கள்.




இன்றைய முக்கிய செய்திகள் 


06-02-2024 


குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேச்சு...


மதுரை கொடிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மேலும் 91 சென்ட் நிலம் வழங்கினார் பூரணம்மாள்...


ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி…


இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி...


மக்களவை தேர்தலில் கட்சிகள், வேட்பாளர்கள் குழந்தைகளை பரப்புரை, பேரணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் : தலைமை தேர்தல் ஆணையம்...




Today's Headlines:

06-02-2024


Prime Minister Modi's speech in the debate on the resolution of thanks to the President's address... 


Pooranammal gave another 91 cents of land to Kodikulam Government High School, Madurai... 


Sambhai Soren government wins in confidence vote in Jharkhand Assembly...


India won the 2nd Test against England by 106 runs... 


Parties and candidates should avoid involving children in lobbying and rallies in Lok Sabha elections: Chief Election Commission...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...