கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2024...

 

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 420:


செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்.


விளக்கம்:

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.



பழமொழி : 


Good Homer sometimes nods.


ஆனைக்கும் அடி சறுக்கும்.


பொன்மொழி:


When you think big, your results are big.


நீங்கள் பெரிதாக எண்ணினால் உங்களுக்குக் கிடைப்பதும் பெரிதாகவே இருக்கும்.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்

தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ

மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்

எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்

பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்

கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Convict - குற்றம் சுமத்தப்பட்டவர்

Cook - சமைத்தல் 

Copper - செம்பு 

Coral - பவளம் 

Coriander - கொத்தமல்லி 

Corn - சோளம் 


ஆரோக்கியம்


குறைவான ஆனால் சமச்சீரான உணவை சாப்பிடுங்கள். இந்திய மக்களுக்கு ஊட்டச்சத்து குறைவு பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இதனால் ரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.


பழைய உணவுகளை சாப்பிடாதீர்கள். எவ்வளவு சத்தான உணவாக இருந்தாலும், சமைத்த சில பல மணி நேரங்களில் அதன் சத்து குறைந்துவிடும். பசிக்காகவும் சாப்பிடலாம், ருசிக்காகவும் சாப்பிடலாம், ஆனால் உண்ணும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருந்தால் ஆரோக்கியம் உங்கள் கையில்.


இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 07


1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.


1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரெனடா விடுதலை பெற்றது.


1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.


1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.



பிறந்த நாள் 

1902 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)



நினைவு நாள் 

-



சிறப்பு நாட்கள்


விடுதலை நாள் (கிரெனடா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1974)




நீதிக்கதை


முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவமாட்டார் 


பூஞ்சோலை என்பது ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமத்தில் எங்குப் பார்த்தாலும் ‘பச்சைப் பசேல்’ என்று பயிர்கள் வளர்ந்து, காண்போர் கண்களுக்கு விருந்தளித்தன . அவ்வூரில் மணிவண்ணன் எனபவன் வாழ்ந்து வந்தான்.


அவன் நல்லவன்தான். எனினும், எந்த ஒரு பிரச்சினையிலும் முயற்சி செய்யாமல் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார், என்றே எண்ணுவான் . தனக்குத்தானே எவன் ஒருவன் உதவி செய்து கொள்கிறானோ அவனுக்குத்தான் இறைவனும் உதவுவார் என்ற கருத்து அவனது நெஞ்சில் பதியாமல் போனது.


அவனுடைய நெருங்கிய உறவினர் திருமணம் பூஞ்சோலைக் கிராமத்திற்கு அடுத்ததாக இருந்த கிளியனூரில் நடைபெறுவதாக இருந்தது . மணிவண்ணனும் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகத் தனது மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தான். கிளியனூரை அடைகின்ற வேளையில் ஒரு பெரிய பள்ளத்தில் வண்டிச் சக்கரங்கள் புதைந்து விட்டன. மாடுகளும் சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முடியாமல் தவித்தன.


மணிவண்ணன் மிகவும் பயந்து விட்டான். சேற்றில் சிக்கிக்கொண்ட வண்டியின் சக்கரங்களையும், மாடுகளையும் எப்படி மீட்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. மாடுகளாவது சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. ஆனால், மணிவண்ணனோ எவ்விதச் சிறு முயற்சியையும் செய்யாமல் விழித்துக்கொண்டிருந்தான் .



உடனே அவன் “கடவுளே …. என்னை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்று” என்று வேண்டினான். உடனே வானிலிருந்து ஒரு குரல் கேட்டது. “மனிதனே, நீ, சேற்றில் சிக்கிய உன் மாடுகளையும், வண்டியின் சக்கரங்களையும் மீட்பதற்கு சிறிதளவு கூட முயற்சியே செய்யவில்லை. வெறுமனே என்னை அழைப்பதில் எந்தப் பயனும் இல்லை. முதலில் தன்னால் ஆன முயற்சியைச் செய்பவர்களுக்குத்தான் நான் உதவுவேன். முதலில் உனது தோள் வலிமையால் சேற்றில் சிக்கிய சக்கரங்களை வெளியே எடுக்க முயற்சி செய். பிறகு மாடுகளை அதட்டி ஒட்டு. இந்த வேலைகளெல்லாம் உன்னால் செய்ய முடிந்தவைகள் தாம். அதற்குப் பின் என்னை உதவிக்கு அழை. நான் வருவேன். முயற்சி செய்யாதவர்களுக்கு நான் நிச்சயம் உதவ மாட்டேன்” என்று கூறியது.


உடனே மணிவண்ணன் தனது தோள்பலத்தால் சக்கரத்தில் முட்டுக்கொடுத்து வண்டியை தூக்கி நிறுத்தி மாடுகளை அதட்டி ஓட்டினான். இப்பொழுது வண்டி சேற்றிலிருந்து மீண்டது. மணிவண்ணன் முயற்சியின் சிறப்பை அறிந்து கொண்டான். 


கடவுள் வானிலிருந்து அவனை ஆசிர்வதித்தார். 


நீதி : முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவ மாட்டார். எனவே, நாம் வெற்றி பெற, நம்மாலான முயற்சியைச் செய்ய வேண்டும். இறைவன் அருள் நமக்குத் தானாகவே கிடைக்கும்.





இன்றைய முக்கிய செய்திகள் 


07-02-2024 


26 ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: தமிழ்நாடு அரசு உத்தரவு...


தமிழ்நாடு முழுவதும் ரூ.2544.19 கோடி மதிப்பீட்டில் 23259 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்...


விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி செயல்பட அனுமதிக்க முடியாது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி...


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மீண்டும் 7.5% அதிகரித்துள்ளது: கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு...


கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்: உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்...



Today's Headlines:

07-02-2024


Release of 12 life convicts serving more than 26 years in prisons: Tamilnadu government order... 


23259 new flats have been constructed and opened across Tamil Nadu at a cost of Rs.2544.19 crore: Minister Udayanidhi Stalin informed... 


Companies that don't follow rules will no longer be allowed to operate: Tamil Nadu Pollution Control Board assures...


India's GDP grows again at 7.5%: Prime Minister Narendra Modi's speech in Goa... 


Plan to conduct college semester exams early: Higher Education Minister Rajakannappan...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...