கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14-02-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 424:


எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.


விளக்கம்:


நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.



பழமொழி : 


Look before you leap


ஆழமறியாமல் காலை விடாதே.


பொன்மொழி:


Great works are performed not by strength, but perseverance.  


மிகப் பெரிய வேலைகள் விடாமுயற்சியால்தான் சாதிக்கப்படுகின்றன. அவரது வலிமையால் அல்ல.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 திட்ட அலகு என்பது - SI முறை

அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை

நிலவு இல்லாத கோள் - வெள்ளி

கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு

பில்லியன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்

உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Daily - தினமும்

Decrease - குறை 

Dark - இருட்டு 

Deaf - காது கேட்காமை 

Debt - கடன் 


ஆரோக்கியம்


செயற்கையான சுவையூட்டிகளில் சேர்க்கப்படும் சர்க்கரை, காஃபீன் ஆபத்தானதா?


செயற்கையான சர்க்கரை, காஃபீன் போன்றவற்றைச் சத்துணவுகளில் சேர்ப்பது பெரும் ஆபத்தாக முடியும். இவை உடல் செயல்பாடுகளை, பல்வேறு வகைகளில் பாதிக்கின்றன. குறிப்பாகச் செயற்கை சர்க்கரையைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பயன்படுத்தும்போது புற்றுநோய் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதீதச் சர்க்கரை உடல்பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றையும், காஃபீன் பக்கவாதம், வலிப்பு சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.


இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 14


1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.


1949 – இசுரேலிய நாடாளுமன்றம் முதற்தடவையாகக் கூடியது.


1961 – 103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


1990 – வொயேஜர் 1 விண்கலம் பூமியின் படம் ஒன்றை எடுத்தது. இப்படம் பின்னர் வெளிர் நீலப் புள்ளி எனப் பெயர்பெற்றது.


2000 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.


2005 – கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் முதன் முதலில் வெளியிடப்பட்டது.



பிறந்த நாள் 

1483 – பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)


நினைவு நாள் 

269 – புனித வேலண்டைன், ரோம கத்தோலிக்க ஆயர், புனிதர் (பி. 176)


1995 – யு நூ, பர்மாவின் 1வது பிரதமர் (பி. 1907)


சிறப்பு நாட்கள்

வேலன்டைன் நாள்



நீதிக்கதை



ஆணவத்தின் முடிவு அவமானம் 


ஒரு காலத்தில் வடக்கிலிருந்து வீசும் வாடைக் காற்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வருடத்துக் குளிர் காலம் நீண்டதாகவும் அதிக குளிருடனும் இருந்ததால் வாடைக்காற்று மிக கர்வம் அடைந்தது. ‘உலகம் முழுவதையும் என்னால் கடும் குளிரில் உறைய வைக்க முடிந்தது. பூமியிலேயே மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக நான் விளங்குகிறேன். என்னை விட வலிமையானவர் யாரும் இல்லை, என்று காற்று, அதிகமாக பெருமைப்பட்டுக் கொண்டது.


அதிக நேரமாக இதனுடைய பேச்சை கேட்ட பிறகு சூரியனுக்கு அலுத்துவிட்டது. மேகங்களுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த சூரியன், வாடைக்காற்றை கூப்பிட்டது. “வலிமையும் பலமும் பொருந்திய இயற்கை சக்தியான நீ இவ்வாறு பெருமைப்பட்டுக் கொள்வது நல்லதன்று. நம் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலை உண்டு,” என்று சூரியன் கூறியது.


ஆனால், வாடைக்காற்று மிக மிக அதிகமாக தன் வலிமையை நினைத்து கர்வப்பட்டு கொண்டிருந்ததால் சூரியன் கூறியது எதையும் கேட்பதாக அது இல்லை.


“என்னளவு பலம் உனக்கு இல்லாததால், நீ இவ்வாறு என்னிடம் சொல்கிறாய். இந்த பூமியில் எதை வேண்டுமானாலும் சாதிக்க என்னால் முடியும்,” என்று மிக அலட்சியமாக பதில் கூறியது வாடைக்காற்று.


இதை கேட்டதும் சூரியனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது


” உனக்கு ரொம்ப வலிமை இருப்பதாகவும் இந்த பூமியில் உன்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னால் சிலவற்றை தான் செய்ய முடியும்,” என்று சூரியன் சொன்னது.


இதை கேட்டு சிரித்த காற்று, “என்னால் செய்ய முடியாதது என்ற ஒரு விஷயத்தை நீ கூறு, பார்க்கலாம்,” என்று சவால்விட்டது.


சூரியன் கீழே குனிந்து பார்த்தது. பூமியில் ஒரு மனிதன் சாலையில் போய்க்கொண்டிருந்தான். மிகவும் குளிராக இருந்ததால் அவன் தன்  மேலங்கியை கழட்டி தன்னை சுற்றி இறுக்கி போர்திக் கொண்டான்.



சூரியனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, வாடைக்காற்றிடம் சொல்லிற்று, “கீழே சாலையில் நடந்து செல்லும் அந்த மனிதனைப் பார். அங்கு நீ மிகவும்  குளிர்ச்சியாக செய்திருப்பதால் அவன் தன்னுடைய மேலங்கியை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறான். உன்னுடைய வலிமையை நீ உபயோகி; மேலங்கியை அவன் எடுத்து விட்டால் நீ தான் மிகவும் வலிமையானவன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றது.


இது மிகவும் எளிமையான பணி என்று வாடைக்காற்று எண்ணியதால் சவாலை ஏற்றுக் கொண்டது. காற்று வேகமாக வீசிற்று. சாலையில் அந்த மனிதன் இருந்த இடத்தில் இன்னும் அதிகவேகமாக வீசிற்று. மேலங்கியை அவன் கழற்றவில்லை.


ஆனால், காற்று வேகமாக, வலுவாக வீச, வீச, குளிர் தாங்காமல் அந்த மனிதன் தன் மேலங்கியை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான். வாடைக் காற்றால் சவாலில் வெற்றி பெற முடியவில்லை. சூரியனை முயற்சி செய்யுமாறு காற்று கேட்டுக் கொண்டது.


சூரியன் மிகவும் பிரகாசமாக வெளிவந்தது, திடீரென்று வெப்பமாக இருப்பதை உணர்ந்த அந்த மனிதன், “என்ன வேடிக்கை! சற்று முன் கடுங்குளிராக இருந்தது; இப்போது வெப்பமாக இருக்கிறதே,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். சூரியன் மேலும் வெப்பத்தை அதிகரித்தது. அவன், மேலும் வெப்பம் பரவுவதை உணர்ந்தான்.


சகிக்க முடியாத வெப்பத்தால் தன் மேலங்கியை கழற்றினான்; தலையை மூடிக் கொண்டான். இன்னமும் வெப்பம் அதிகரிக்கவே, தன்னுடைய மேலங்கியை எடுத்துவிட்டு அங்கிருந்த குளத்திற்குள் குதித்து விட்டான்.


இவற்றையெல்லாம் பார்த்த காற்று  அவமானமடைந்தது; தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. அதன் பிறகு  வாடைக்காற்று கர்வத்தை விட்டொழித்தது; தன்னுடைய கடமையை தவறாமல் செய்து வந்தது.


 நீதி : தற்பெருமை அவமானத்தை ஏற்படுத்தும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


14-02-2024 


தலைநகர் டெல்லியை லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகை : டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு; 3 மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கானோர் கைது; 144 தடை; துணை ராணுவம் குவிப்பு; தேர்தல் நெருங்கும் நேரத்தில் போராட்டம் வலுப்பதால் மத்திய அரசு கலக்கம்...


ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...


அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை...


பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் இறப்பு: மேலும் 60க்கும் மேற்பட்டோர் நிலை தெரியவில்லை...


தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற தமிழரசிக்கு உயர் ரக தரத்திலான சைக்கிள் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...


எக்ஸ்போசாட் செயற்கைக்கோளில் உள்ள கருவி, விண்மீன் மண்டலத்தில் தரவுகளை சேகரித்துள்ளது: இஸ்ரோ பெருமிதம்...




Today's Headlines:

14-02-2024


Lakhs of farmers besiege the capital Delhi: Tear gas fired by drones; Thousands arrested at 3 state borders; 144 Prohibition; Paramilitary buildup; The central government is in turmoil as the protests intensify as the elections approach... 


Chief Minister Stalin brings a separate resolution in the assembly against one country one election... 


The Tamil Nadu government has requested to call off the strike announced by the government employees and teachers unions...


68 killed in Philippines landslides: More than 60 missing...


Minister Udayanidhi Stalin presented a high-quality bicycle to a Tamil woman who won medals at the national level... 


Instrument on Exposat satellite collects data on galaxy: ISRO...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...