கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20-02-2024 - School Morning Prayer Activities...

  

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 428:


அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.


விளக்கம்:


அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.



பழமொழி : 


psrevention is better than cure.


வெள்ளம் வருமுன்னே அணைபோட வேண்டும்



பொன்மொழி:


Life without risk is not worth living.


ஆபத்தில்லாமல் வாழ்ந்த வாழ்க்கை மதிப்பில்லாதது.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை

பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்

விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)

தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்

வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star டிங்க்ராம்

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் -டாக்டர்  அம்பேத்கார்

12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 – 2010



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Disperse - கலைதல் 

Dispute - தகராறு

Disturbance - தொந்தரவு

Displeased - சலித்துக்கொள்

Distance - தொலைவு

Do - செய் 


ஆரோக்கியம்


சத்துணவில் பழங்கள் மற்றும் பழச்சாறின் பங்கு என்ன?


எளிமையாக ஜீரணமாகும் பானங்களில் பழச்சாறு முதன்மையானது. ஒரு டம்ளர் பழச்சாறு அருந்தும்போது, ஒரு பழத்தைச் சாப்பிடும்போது கிடைக்கும் சத்து கிடைக்கும். ஒரு நாளைக்கான வைட்டமின் 'சி' தேவையை இது நிறைவேற்றும். பழச்சாறைக் குடிக்கும்போது நார்ச்சத்தும் கிடைக்கிறது. பழச்சாறில் இருக்கும் சர்க்கரை, வைட்டமின்கள், புரதம், தாதுகள் ஆகியவை உடனடியாக ரத்தத்தின் செல்களில் கலக்கும். மலச்சிக்கலைப் போக்குவதற்கும் இது பயன்படுகிறது.




இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 20


1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.


பிறந்த நாள் 

1951 - கார்டன் பிரவுன் - ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


சமூக நீதிக்கான உலக நாள்



நீதிக்கதை



சிறுவன் மற்றும் புலி 


ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் நிறைய ஆடுகள் இருந்தன அந்த ஆடுகளை அவர் மேய்ச்சலுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்வார், அந்திப்பொழுது ஆன பின்பு அந்த ஆடுகளை அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்ப கொண்டு வருவார்.


ஒரு நாள் அந்த விவசாயியின் மகன்,”அப்பா நானும் உங்களுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வருகிறேன்” என்றான். ஆனால் தந்தையோ, “இல்லை,வேண்டாம் அங்கு உனக்கு சலிப்பாக இருக்கும் எனவே நீ வீட்டில் இருந்துக்கொள் என்றார்”. ஆனால் அந்த மகனோ இல்லை நான் நிச்சயமாக வருவேன் என்று அடம் பிடித்தான். 


எனவே அவரும் மகனை கூட்டிக்கொண்டு ஆடுகளுடன் மேய்ச்சலுக்கு சென்றார். அந்த சிறுவனுக்கு ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடம் மிகவும் பிடித்தது. அங்கே அவன் விளையாடிக் கொண்டு இருந்தான். சிறிது நேரம் ஆன பிறகு அவனுக்கு சலிப்பு உண்டாக ஆரம்பித்தது.



என்ன செய்வதென்று தெரியவில்லை, திடீரென்று அவன் “புலி காப்பாற்றுங்கள்! புலி காப்பாற்றுங்கள்!” என்று கத்த ஆரம்பித்தான். அவனுடைய குரலை கேட்டு அந்த விவசாயி மற்றும் வேறு சிலர் ஓடி வந்தனர், ஆனால் அங்கே வந்து பார்த்தபோது புலி எதுவும் இல்லை. அந்த சிறுவன் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். 



மீண்டும் அந்த விவசாயிகள் திரும்ப தங்கள் வேலைக்கு சென்றனர். ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த சிறுவன், புலி காப்பாற்றுங்கள்! புலி காப்பாற்றுங்கள்! என்று கத்த ஆரம்பித்தான். திரும்பவும் அந்த விவசாயிகள் ஓடி வந்தார்கள். ஆனால் அங்கே புலி இல்லை, அப்போது அந்த சிறுவனின் தந்தை அவனிடம் சொன்னார், “இனி நீ இப்படி பொய் கூறினால் நிச்சயமாக உனக்கு தண்டனை உண்டு எனவே சத்தம் போடாமல் அமைதியாக விளையாடு” என்று கூறிக்கொண்டு அந்த விவசாயி மீண்டும் தன் வேலைக்கு சென்றார்.


அந்த சிறுவனும் தன் தந்தை கூறியதை எண்ணி பயந்து இனிமேல் சத்தம் போட மாட்டேன் என்று அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று உண்மையாகவே ஒரு புலி அங்கே வந்தது. புலியை பார்த்த அந்த சிறுவன் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தான். அவன் கத்தினான்,”அப்பா புலி, என்னை காப்பாற்றுங்கள்” என்று கத்தினான்.


ஆனால் மற்ற விவசாயிகள் இந்த சிறுவன் மீண்டும் நம்மிடம் விளையாடிக் கொண்டிருக்கிறான், நாம் நமது வேலையை பார்ப்போம் என்று யாரும் அவன் கத்தும் குரலுக்கு செவி கொடுக்காமல் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டே இருந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் இந்த சிறுவன் அருகில் இருந்த மரத்தின்  மேல் ஏறினான். அந்த புலி அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுகுட்டியை பிடித்து சாப்பிட்டது. அதை பார்த்து அவன் பயத்தில் அப்படியே அமர்ந்திருந்தான்.


அந்திப்பொழுது ஆன பிறகு அந்த விவசாயி தன்னுடைய ஆடுகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என்று வந்தபோது, இந்த சிறுவனை காணவில்லை அப்போது அவன் மரத்தின் மேலிருந்து, “அப்பா நான் இங்கே இருக்கிறேன்” என்று கூறினான். அந்த விவசாயி அவனிடம், “மரத்தின் மேல் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், நான் இவ்வளவு சத்தமாக கத்தியும் நீங்கள் ஏன் வரவில்லை? உண்மையாகவே ஒரு புலி வந்தது. அங்கு பாருங்கள் ஒரு ஆட்டுக்குட்டியை கடித்து அது சாப்பிட்டு விட்டு மீதியை போட்டுக்கொண்டு சென்றது என்றான்.



அதைப் பார்த்தபோதுதான் அவருக்கு புரிந்தது நிஜமாகவே அங்கே ஒரு புலி வந்ததென்று. அப்போது அந்த விவசாயி சொன்னார், “நீ  இரண்டு முறை புலி வந்ததாக பொய் சொல்லி தானே கத்தினாய் அதனால் தான் மூன்றாவது முறை நீ கத்தியும் நாங்கள் யாரும் வரவில்லை”. இனிமேல் இப்படி பொய் சொல்லாதே, மீறினால் நிச்சயமாக நீ உண்மையை சொல்லும்போது உன் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள் என்றார். அவனும் தன் தவறை புரிந்து கொண்டான்.




இன்றைய முக்கிய செய்திகள் 


20-02-2024 


ஜம்முவில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...


அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு...


அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல், பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை : உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை...


நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு! அது நாளை முதல் நனவாக வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...




Today's Headlines:

20-02-2024


Prime Minister Modi will inaugurate projects worth Rs.32,000 crore in Jammu today... 


Rs.1000 per month for students studying in government schools and joining colleges: Tamil Nadu budget announcement... 


Legal action against those involved / complicit in smuggling, hoarding of essential commodities: Food Safety Department warns... 


The financial statement filed by the finance minister is our government's dream! It should be realized from tomorrow: Chief Minister M.K.Stalin...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...