கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் :அறிவு உடைமை

குறள் எண்:423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பொருள்: எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்)
அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.


பழமொழி :
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

Great engines turn on small pivots


இரண்டொழுக்க பண்புகள் :

*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன்.

*மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.


பொன்மொழி :

பகை, பொறாமை, கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்தினால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே வந்து சேரும் ------விவேகானந்தர்


பொது அறிவு :

1. ISI என்பதன் விரிவாக்கம்?

விடை: Indian Standard Institute

2. யானையின் துதிக்கையில் எத்தனை தசைகள் உள்ளன?

விடை: 40 ஆயிரம்


English words & meanings :

Utter- பூரணமான,

Complete- நிறைவான


வேளாண்மையும் வாழ்வும் :

கருப்பு கவுனியில் உள்ளநார்சத்து(Fiber) மற்றும் ஆன்டி ஆக்சிடன்ஸ் (anti – oxidants) புற்று நோய், சர்க்கரை குறைபாடு நோய்களின் தாக்கத்தைக் குறைக்கின்றது, மேலும் கல்லீரலில் உள்ள பாதிப்புகளை குறைக்கின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம், அதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழ சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுணி சாதம் உடன் காய்கறிகள் சாம்பார்/குழம்பு வகைகள் சாப்பிடலாம்.


ஜூலை 22

டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் நினைவுநாள்

முத்துலட்சுமி  (Muthulakshmi )(சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.


நீதிக்கதை

ஆண்டவனிடம் பெற்ற அறிவு

பீர்பாலின் மீது அரசர் அளவு கடந்த  அன்பும், மரியாதையும் வைத்திருப்பதை அறிந்த அவையில் இருந்த சில அமைச்சர்களுக்கு பொறாமையாக இருந்தது.

அறிவுமிக்க பீர்பாலை மட்டம் தட்ட முடியாத ஒரு அமைச்சர் அவரின் மாநிறமான தோற்றத்தை கொண்டு மட்டம் தட்ட நினைத்தார். அதனால் அரசவையில் அமர்ந்திருந்த பீர்பாலை பார்த்து அந்த அமைச்சர் ஏளனமாக சிரித்தார்.

இதனை கவனித்துவிட்ட அரசர் அக்பருக்கு கோபம் ஏற்பட்டு "அமைச்சரே! பீர்பாலை பார்த்து எதற்காக ஏளனமாக சிரித்தீர்கள்?" என்று கேட்டார்.

"மதிப்பிற்குரிய மன்னர் பெருமானே!  கோபப்பட வேண்டாம். எனக்கு அவரைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் சிரித்தேன்" என்றார் அமைச்சர்.

"என்ன சந்தேகம்?" என்று வினவினார் மன்னர்.

"மன்னர் பெருமானே! தாங்கள் ஜொலிக்கும் தங்கம் போன்ற மேனியை பெற்றுள்ளீர்கள்.

அமைச்சர்களாக உள்ள நாங்களும் நல்ல சிவந்த மேனியுடன் உள்ளோம். ஆனால் நமது பீர்பால் மட்டும் நிறத்தில் சற்று கருத்து காணப்படுகின்றார்.

ஆகையினால், நம்மோடு அமர்ந்திருப்பதினால்,மன்னரின் நிறம் பிரகாசமாகவும், பீர்பாலின் நிறம் கருத்தும் இருப்பதினால் நிழலின் அருமை வெயிலில் தெரிவது போல் உள்ளதோ என்று சந்தேகமாக இருந்தது. அதனால் சிரித்தேன்" என்றார்.

அமைச்சர் இது போன்று கூறியதும் மன்னருக்கு அமைச்சரின் மதிகெட்ட பேச்சு புரிந்தது. அதனை வெளிக்காட்டு கொள்ளாமல் "பீர்பால் அவர்களே! அமைச்சர் கூறியதற்கு  சரியான விளக்கம் அளியுங்கள். மேலும் இது போன்ற கேள்வி எப்போதும்  கேட்க இயலாத அளவுக்கு பதில் இருக்க வேண்டும்"என்றார் அக்பர்.

மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி, " "மாமன்னர் அவர்களே! வணக்கம். இறைவன் அன்பானவன் எல்லோரையும் சமமாக பாவித்து அருள் பாலிப்பவன். ஒவ்வொருவரையும் படைக்கும் போது அவரவர் விருப்பப்படி அவரவருக்கு என்ன தேவையோ அதன்படி படைத்துவிட்டார்.அதன்படி

அமைச்சர்கள் விருப்பப்படி அவர்களுக்கு நல்ல நிறத்தையும், எனது விருப்பப்படி எனக்கு நல்ல அறிவையும் கொண்டு கடவுள் படைத்துவிட்டார்"என்றார் பீர்பால்.

பீர்பாலின் பதிலைக் கேட்டு, அமைச்சர்  வெட்கி தலை குனிந்தார்.


இன்றைய செய்திகள்

22.07.2024

¶ அரசுப் பள்ளிகளில் உள்ள 5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

¶ தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரைவு திட்ட அறிக்கை மீது இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

¶ இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழகம் தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

¶ புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

¶ இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பில் அதி நவீன போர்க்கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்துக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது.

¶ மண்டல பள்ளி ஹாக்கி லீக் போட்டி: சென்னை அணி சாம்பியன்.

¶ தமிழக வீராங்கனை இந்துமதிக்கு இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

¶ ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரபேல் நடால்.


Today's Headlines

🌸The School Education Department has issued an order to make 5,146 temporary teaching posts in government schools permanent.

🌸A consultation meeting is being held today on the new draft plan report regarding the operation of private mini buses in Tamil Nadu.

🌸The Tamil Nadu government has said that the Niti Aayog report has proved that Tamil Nadu is the top leading state in India in poverty alleviation.

🌸Copper nails have been found in the 2nd phase of excavation in Polpanaikottai, Pudukottai district.

🌸The Ministry of Defense is soon going to give its approval to the Indian Navy's Rs.70,000-crore domestic production of state-of-the-art warships.

🌸Zone School Hockey League Tournament: Chennai Team Champion.

🌸Tamil Nadu player Indumati has been awarded the best female footballer of India award.

🌸Swedish Open Tennis: Rafael Nadal advanced to the final.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...