மத்திய அரசு நிதிநிலை அறிக்கை - Union Budget 2024-25 முக்கிய அம்சங்கள் : தனிநபர் வருமான வரியில் மாற்றம்; நிரந்தர கழிவு ரூ.75,000 ஆக உயர்வு... ரூ.17,500 மிச்சம்..
மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி அரசு அமைத்துள்ள நிலையில், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. `அமிர்த காலத்துக்கு இதுவொரு முக்கியமான பட்ஜெட்' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்செக்ஸ் 700 புள்ளிகளும் நிஃப்டி 300 புள்ளிகளும் சரிவு
ரூ.3 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை
புதிய வரி முறையில் புதிய வரி வரம்புகள்:
0-3 லட்சம் - 0%
3-7 லட்சம் 5%
7-10லட்சம் 10%
10-12லட்சம் 15%
12-15லட்சம் 20%
15 லட்சத்துக்கு மேல் - 30%
இந்தப் புதிய வரம்புகள் மூலம் தனிநபர் வருமான வரியில் ரூ. 17,500 மிச்சமாகும்.
பழைய வருமான வரி செலுத்தும் முறையில் எந்தவித மாற்றமும் இல்லை. அப்படியே தொடரும். புதிய வருமான வரி முறையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய வருமான வரி முறையில் ரூ.2.5 லட்சம் வரை வரி கிடையாது. புதிய வருமான வரி முறையில் ரூ.3 லட்சம் வரை வரி கிடையாது.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
'வருமான வரி தாக்கல் செய்வது தாமதம் ஆனால், அது குற்றமல்ல'
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கான 'ஏஞ்சல் வரி' ரத்து.
குறிப்பிட்ட முதலீடுகளுக்கு 20% குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25% ஆகக் குறைப்பு
தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000-ஆக அதிகரிப்பு.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அரசு செலவினங்கள் 2024-25 நிதி ஆண்டில் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு ஏற்கெனவே இருந்த 15% வரியை 6%-ஆக குறைத்துத மத்திய பட்ஜெட் 2024-25-ல் அறிவிப்பு.
பிளாட்டினத்திற்கு 12%-லிருந்து 6.4%-ஆக குறைப்பு.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024-25-ல் அறிவித்துள்ள நிலையில். தங்கம், வெள்ளி நகைகளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன் உதிரிபாகங்களின் விலை குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024-25-ல் அறிவித்துள்ள நிலையில். செல்போன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
அரசின் வருவாய் 2024-25 நிதி ஆண்டில் ரூ.32.07 லட்சம் கோடியாக இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது. கடன்கள் ரூ. 25.07 லட்சம் கோடியாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளார் நிதியமைச்சர்
நகர்புறங்களில் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அறிவிப்பு.
நாடுமுழுவது மேலும் 3 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதி.
பீகாரில் உள்ள நாளந்தா பகுதியை சுற்றுலாதளமாக மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு.
பீகாரில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.11,000 கோடி ஒதுக்கீடு.
கூட்டணி ஆளும் பீகாருக்கு அதிக திட்டங்கள், அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யும் அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிடும்போது அமைச்சரவையில் சலசலப்பு.
பத்திரப் பதிவு கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்
அதிக பத்திரப் பதிவு கட்டணங்கள் வசூலிக்கும் மாநிலங்கள் கட்டணங்களைக் குறைப்பதற்கு ஊக்குவிக்கப்படும். மேலும் பெண்கள் வாங்கும் சொத்துகளூக்குக் கூடுதல் கட்டணக் குறைப்பு திட்டங்களும் வகுக்கப்படும்.
- நிர்மலா சீதாராமன்.
பீகாரில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மாசு ஏற்படுத்தாத எரிபொருள்களை பயன்படுத்துவர் ஊக்குவிக்கப்படுவர்.
1 கோடி வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சார வசதி அமைக்கப்படும்.
கம்பெனிகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த வழக்குகளை கையாள புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.
12 தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
IBC என்ற திவால் சட்டத்தின் கீழ் 1000க்கும் மேலான நிறுவனங்களின் வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. மட்டுமல்லாமல் ரூ. 3.3 லட்சம் கோடி அளவிலான கடன் மீட்கப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பீகாரின் கயா முதல் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார வளர்ச்சி மையம் உருவாக்கப்படும்.
8. புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி
9. அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள்
கடுகு, எள், சூரிய காந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துது பயிர்களின் சாகுபடி ஊக்குவிக்கப்படும்.
காய்கறி விற்பனை தொடர் சங்கிலி உருவாக்கப்படும்.
வேளாண் துறையில் டிஜிட்டல் முறை புகுத்தப்படும்
ரூ.1.52 லட்சம் கோடி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு.
டிஜிட்டல் பயிர் சாகுபடி முறை பின்பற்றப்படும்.
டிஜிட்டல் முறையில் கரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் சர்வே செய்யப்படும்.
1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்க மாற்றப்படுவார்கள்.
கல்வி, தொழில்திறன் மேம்பாட்டுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு
- நிர்மலா சீதாராமன்
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பொருளாதாரம் சவால்களைச் சந்தித்தாலும் வலுவான நிர்வாகம், செயல் திறன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துவருகிறது.
நம் நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது.
4.1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்புக்காக 5 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதற்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தனது 7-வது பட்ஜெட் உரையை வாசிக்க ஆரம்பித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வாசிக்கப்படும் முதல் முழுமையான பட்ஜெட் இது.
1959-ம் ஆண்டு முதல் 1964 வரையில் நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அதிகபட்சம் தொடர்ந்து ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார். தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து, முந்தைய தேசாய் சாதனையை முறியடித்துள்ளார்.
தொடர்ந்து ஏழு முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற புதிய சாதனையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படைத்துள்ளார். முழுநேர நிதியமைச்சராக இருந்த ஒரே நிதியமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.