கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் - மத்திய அரசு...



 பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் - மத்திய அரசு...


பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்; பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுவதாக 15.03.2024ல் தமிழ்நாடு உறுதி அளித்திருந்தது.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்.


தமிழ்நாடு பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனையை தேசிய கல்விக் கொள்கை ஆதரிக்கிறது.


அரசியல் வேறுபாடுகளைக் காட்டிலும் குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு முன்னுரிமை தருக.


- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்...


"பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்கான வரையறையில் கையெழுத்திடவில்லை" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...


சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என இரண்டு நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.


இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.


அந்த கடிதத்தில், "மத்திய அரசு மாணவர்கள் தாய்மொழி உட்படப் பல மொழிகளைக் கற்க வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020, மாணவர்களுக்குத் தமிழ் மொழி பயிற்றுவிப்பதை முழுமையாக ஆதரிக்கிறது. நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள குழந்தைகளும் புதிய கல்விக் கொள்கையின் நன்மைகள் சென்றுசேர வேண்டும் என உறுதியாக இருக்கிறது." என எழுதியுள்ளார்.


மேலும், தமிழ்நாடு தொடக்கத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதித்ததாகவும், பின்னர் தமிழ்நாடு சார்பிலான வரையறை, தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்துவதற்காக முக்கிய கடைமைகளைத் தவிர்த்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


"பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்கான வரையறையில் கையெழுத்திடவில்லை" எனவும் எழுதியுள்ளார்.


தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் தேசியக் கல்விக் கொள்கையின் பகுதி என்றும் தமிழ்நாடு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அழுத்தமாக தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இரு மொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழக அரசின் கொள்கைகளை தேசியக் கல்விக் கொள்கை கேள்விக்குட்படுத்துவதால் அதனை உறுதியாக எதிர்த்து வருகிறது தமிழ்நாடு அரசு.


 செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, தர்மேந்திர பிரதானின் கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில், "தமிழக முதல்வர் ஒரு குழுவை அமைத்து தமிழ்நாடு கல்விக் கொள்கை என்ற கொள்கையை உருவாக்கியிருக்கிறார். அதை நிச்சயமாகப் பயன்படுத்துவோம்." எனப் பேசினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.6 - Updated on 08-01-2026

    தற்போது TNSED Schools  App-ல்  Noonmeal bug fixes and enhancements added   புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: ...