“வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” Anna Award for act of bravery - அரசாணை மற்றும் நிபந்தனைகள்...
அண்ணா பதக்கம்
Award for act of bravery
அரசாணை (நிலை) எண். 333, நாள் : 12-02-1980...
...
அண்ணா பதக்கம்
1. G.O.MS.NO. 333, Dated 12-02-1980...
>>> அரசாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அண்ணா பதக்கம்
i. இவ்விருது பதக்க வடிவில் இருக்கவேண்டும். “வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” என பெயரிடப்பட்டிருக்க வேண்டும்.
ii. இப்பதக்கம் வட்ட வடிவத்தில் தங்க முலாம் பூசிய வெள்ளியால் (3/3 விட்ட அளவில்) தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பதக்கத்திற்கான செலவு ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) ஆக இருக்க வேண்டும்.
iii. இப்பதக்கத்துடன் கூடுதலாக ரூ.1.00 லட்சத்திற்கான (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் விருதாளருக்கு வழங்கப்படவேண்டும்.
iv. இப்பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும் வயதினை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் அவர் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழக்கப்படவேண்டும்.
v. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பரிந்துரைகள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும். பரிந்துரைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
பொது மக்கள் பிரிவில் மூவருக்கும், அரசு ஊழியர்கள் பிரிவில் மூவருக்கும் என ஆறு நபர்களுக்கு இப்பதக்கம் வழங்கலாம் என்பதற்கு அரசாணை (நிலை) எண்.734, பொது (பொது-1)த் துறை, நாள் 01.04.1986- ல் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவின் போது வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.