கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Award லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Award லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆளுநர் விருதுகள் Governor Awards 2024 : விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம் - தலா ரூ.5 இலட்சம் பரிசுத்தொகை...



ஆளுநர் விருதுகள்  Governor Awards 2024 : விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம் - தலா ரூ. 5 இலட்சம் பரிசுத்தொகை...


'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


Applications invited for Tamil Nadu Governor Awards 2024 - Each Rs. 5 Lakhs Cash Award...


தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக "ஆளுநர் விருதுகள் 2024"-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அறிமுகப்படுத்திய இந்த விருதுகள், 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 09, 2024 மாலை 05:00 மணி.


'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நிறுவனங்கள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் தொண்டு நிறுவனத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கப் பரிசும், விருதும் மற்றும் தனிநபர் பிரிவில் தேர்தெடுக்கப்படும் நபருக்கு ரூபாய் இரண்டு இலட்சம் ரொக்கப் பரிசும், விருதும் தமிழ்நாடு ஆளுநரால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26, 2025) வழங்கப்படும்.



தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சுயமாக பரிந்துரைக்கலாம். ஓய்வு பெற்ற இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள், அரசு செயலாளர்கள், அரசு இணை செயலாளர்கள், இந்திய அரசு, தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இரு பிரிவுகளில் சிறந்த வகையில் பணியாற்றிய தகுதியான தனிநபர்கள் / நிறுவனங்களை பரிந்துரைக்கலாம். விண்ணப்பதாரர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்கள் அந்தந்தத் துறையில் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10 வருட காலத்திற்கு சிறப்பான சேவையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.



விண்ணப்பங்களை, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இணையதளத்தில் (https://tnrajbhavan.gov.in/) வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து, awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அனுப்பிவைக்க வேண்டும்.



மேலும், விண்ணப்பத்துடன் துணை ஆவணங்களை இணைத்து, "ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கணக்காயர், ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை - 600 000'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:


“வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” Anna Award for act of bravery - அரசாணை மற்றும் நிபந்தனைகள் G.O.MS.NO. 333, Dated 12-02-1980...

 


“வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” Anna Award for act of bravery - அரசாணை மற்றும் நிபந்தனைகள்...


அண்ணா பதக்கம் 

Award for act of bravery


அரசாணை (நிலை) எண். 333, நாள் : 12-02-1980...

...

அண்ணா பதக்கம்

1.  G.O.MS.NO. 333,  Dated 12-02-1980...


>>> அரசாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அண்ணா பதக்கம்

i. இவ்விருது பதக்க வடிவில் இருக்கவேண்டும். “வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம்” என பெயரிடப்பட்டிருக்க வேண்டும்.


ii. இப்பதக்கம் வட்ட வடிவத்தில் தங்க முலாம் பூசிய வெள்ளியால் (3/3 விட்ட அளவில்) தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பதக்கத்திற்கான செலவு ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) ஆக இருக்க வேண்டும்.


iii. இப்பதக்கத்துடன் கூடுதலாக ரூ.1.00 லட்சத்திற்கான (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் விருதாளருக்கு வழங்கப்படவேண்டும்.


iv. இப்பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும் வயதினை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் அவர் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழக்கப்படவேண்டும்.


v. மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பரிந்துரைகள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும். பரிந்துரைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் அரசுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.


பொது மக்கள் பிரிவில் மூவருக்கும், அரசு ஊழியர்கள் பிரிவில் மூவருக்கும் என ஆறு நபர்களுக்கு இப்பதக்கம் வழங்கலாம் என்பதற்கு அரசாணை (நிலை) எண்.734, பொது (பொது-1)த் துறை, நாள் 01.04.1986- ல் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவின் போது வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” விருதாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.


தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் National Teachers' Award 2024 வெளியீடு...

 

50 பேர் கொண்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் National Teachers' Award 2024 வெளியீடு...


தமிழ்நாட்டில் இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர், ராஜாகுப்பம் கோபிநாத் அவர்கள், மதுரை முரளி அவர்கள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு "ஹெலன் கெல்லர் விருது" - அரசாணை (நிலை) எண் : 07, நாள்: 31-07-2024 வெளியீடு...



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு 10கிராம் தங்கப் பதக்கத்துடன் "ஹெலன் கெல்லர் விருது" - அரசாணை (நிலை) எண் : 07, நாள்: 31-07-2024 வெளியீடு...



"Helen Keller Award" for Outstanding Teachers of Education of Students with Disabilities - Ordinance G.O. Ms. No : 07, Dated: 31-07-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறை - உலக மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தன்று, பார்வை மற்றும்‌ செவித்திறன்‌ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும்‌ சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும்‌ மாநில விருது 'ஹெலன்‌ கெல்லர்‌ விருது' என்ற பெயரில்‌ வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது.


மாற்றுத்திறனாளிகள்‌ நல (மாதிந-2)த்‌ துறை

அரசாணை (நிலை) எண்‌. 07 நாள்‌: 31.07.2024,

குரோதி, ஆடி-15,

திருவள்ளுவர்‌ ஆண்டு, 2055.


படிக்க :

1. அரசாணை (நிலை) எண்‌.47, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ (மாதிந.2) துறை, நாள்‌.19.10.2015.


2. அரசாணை (பை) எண்‌.01, மாற்றுத்திறனாளிகள்‌ நல (மாதிந-2)த்‌ துறை, நாள்‌ 29.07.2022.


3. அரசாணை (2ப) எண்‌.07, மாற்றுத்திறனாளிகள்‌ நல (மாதிந-2)த்‌ துறை, நாள்‌ 28.11.2019.


4. அரசாணை (நிலை) எண்‌.17, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறை, நாள்‌ 04.07.2022.


5. மாற்றுத்திறனாளிகள்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ கடிதம் ந.க.எண்‌.2429/உ.உ.பிரிவு/2024, நாள்‌.25.06.2024.


ஆணை:


மேலே முதலாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, உலக மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தன்று வழங்கப்படும்‌ விருதாளர்களை தேர்ந்தேடுப்பதற்கான வரையறைகள்‌ வெளிடப்பட்டுள்ளன.


2. மேலே இரண்டாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, 

மாற்றுத்திறனாளிகளின்‌ நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள்‌ 7 நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்‌ சுதந்திர தின விழா (ஆகஸ்ட்‌-15) மற்றும்‌ சர்வதேச மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தன்று (டி சம்பர்‌-3) வழங்கப்படும்‌ மாநில விருதுகளுக்கான விருதாளர்களை தேர்வு செய்யும்‌ மாநில அளவிலான தேர்வுக்‌ குழு மாற்றியமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


3. மேலே மூன்றாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, 2019-ஆம்‌ ஆண்டு முதல்‌ சர்வதேச மாற்றுத்திறனாளிகள்‌ தின விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களில்‌ சிறந்த பணியாளர்களுக்கான மாநில விருதினை 5-லிருந்து 10-ஆக உயர்த்தியும்‌ தொழு நோயிலிருந்து குணமடைந்த பணியாளர்‌ பிரிவினை, நடமாட இயலாதோருக்கான விருது பிரிவுடன்‌ சேர்த்தும்‌ மற்றும்‌ 5 கூடுதல்‌ விருதுகள்‌ வழங்கிட ஏதுவாக தலா 10 கிராம்‌ எடையுள்ள 5 எண்ணிக்கையிலான 22 கேரட் தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்க நிதி ஒதுக்கீடு...



2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - தேர்வு பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது...

 


2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - தேர்வு பெற்றவர்களுக்கு  ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது...


மாணாக்கர்களின் அறிவை வடிவமைப்பதிலும் , அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும் , உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை தேர்ந்தெடுப்பதற்கும் மற்றும் அறிவியலாளர்களாக உருவாகுவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.



அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018-2019 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


2022-2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதை மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு ஆர்எஸ்ராஜகண்ணப்பன் அவர்கள் , உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் திரு ஆகார்த்திக் இஆப , மற்றும் அறிவியல் நகரம்  முதன்மைச் செயலர் துணைத் தலைவர் திரு. தேவ் ராஜ் தேவ் , இஆப ஆகியோர்களின் முன்னிலையில் இன்று ( 11.03.2024 ) சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார்கள்.


விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு

1. இயற்பியல் துறையில் திருமதி. ச.ர.பிந்துலேகா , முதுகலை ஆசிரியை அரசு மேல்நிலைப்பள்ளி , கொட்டாரம்- 629703. கன்னியாகுமரி மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது .


2. உயிரியல் துறையில் திருமதி சு.சங்கீதா , பட்டதாரி ஆசிரியை , அரசு மேல்நிலைப்பள்ளி சேடப்பட்டி -625 527 , மதுரை மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.



சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களால் தலா ரூ .25,000 / - (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.




தலா ரூ.10 இலட்சம் ஊக்கத்தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் - சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 100 தலைமை ஆசிரியர்கள் பட்டியல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024...



 பள்ளிக்கல்வி - அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 2023-2024 - மாநில தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2022-2023ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா நடைபெறுதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024...



 தலா ரூ.10 இலட்சம் ஊக்கத்தொகை, கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் - சிறந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள 100 தலைமை ஆசிரியர்கள் பட்டியல்...



>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 031660 / ஐ / இ1/ 2022, நாள்: 01-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது - 2023-2024 - தேர்வு செய்யப்பட்டுள்ள 76 பள்ளிகள் பட்டியல்...



 சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது - 2023-2024 - தேர்வு செய்யப்பட்டுள்ள 76 பள்ளிகள் பட்டியல்...



Perasiriyar Anbazhaganar Award for Best Schools - 2023-2024 - List of 76 Selected schools...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பசுமை சாம்பியன் விருது - 100 நபர்களுக்கு தலா ரூ.1,00,000/- பரிசு...



பசுமை சாம்பியன் விருது - 100 நபர்களுக்கு தலா ரூ.1,00,000/- பரிசு - Pasumai Champion Award - Rs.1,00,000/- prize to 100 individuals...


 மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் அவர்கள் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த, நிதியிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறவனங்களுக்கு “பசுமை சாம்பியன் விருது” வழங்கப்படும். 2021-2022 முதல் ரூ.1/- கோடி செலவில் விருது பெறுபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தனிநபர்கள் / அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்கப்படும்.


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) இந்த அறிவிப்பின்படி, 2023-24ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை வழங்க முன்மொழிந்துள்ள கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள் / கல்வி நிறுவனங்கள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனி நபர்கள் /உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.


1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி

2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

4. பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்

5. நிலைத்தகு வளர்ச்சி

6. திடக்கழிவு மேலாண்மை

7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு

8. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை

9. காற்று மாசு குறைத்தல்

10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை

11. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு

12. கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை

13. பிற பிளாஸ்டிக் கழிவு தொடர்பான திட்டங்கள்


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.



தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான அண்ணா தலைமைத்துவ விருதுகள் வழங்குதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண் : 031660/ ஐ/ இ 1/ 2022, நாள்: 27-12-2023 - இணைப்பு: அரசாணை (1டி) எண்: 45, நாள்: 17-04-2023, மதிப்பீட்டு நெறிமுறைகள் மற்றும் படிவம்...



தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான அண்ணா தலைமைத்துவ விருதுகள் வழங்குதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் ந.க.எண் : 031660/ ஐ/ இ 1/ 2022, நாள்: 27-12-2023 - இணைப்பு: அரசாணை (1டி) எண்: 45, நாள்: 17-04-2023, மதிப்பீட்டு நெறிமுறைகள் மற்றும் படிவம் - Anna Leadership Awards for the academic year 2023-2024 for the best school HeadMasters working in Elementary / Middle / High and Higher Secondary Schools - DSE & DEE Joint Proceedings Rc.No. : 031660/ I/ E 1/ 2022, Dated: 27-12-2023 - Annexure: Ordinance G.O.(1D) No: 45, Dated: 17-04-2023, Assessment Procedures and Form...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023ஆம் ஆண்டு க்கான தயான் சந்த் கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதுகள் அறிவிப்பு...



 விளையாட்டு துறையில் சாதனை: முகமது ஷமி, வைஷாலிக்கு “அர்ஜூனா விருது” அறிவிப்பு.


கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது.


கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு அர்ஜூனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் பெண் வீராங்கனை வைஷாலி.


கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜூனா விருது வென்ற நிலையில், இந்தாண்டு அவரது சகோதரிக்கு விருது.


விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா விருதுகளை அறிவித்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.


2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா விருதுகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் மொகமது ஷமி, தமிழக செஸ் ப்ளேயர் வைஷாலி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான்சந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலை தற்போது மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை

கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் ப்ளேயரான வைஷாலிக்கும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சாரியா விருதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 2023ஆம் ஆண்டு க்கான தயான் சந்த் கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதுகள் அறிவிப்பு...


தயான் சந்த் கேல் ரத்னா விருது - பேட்மிண்டன் வீர்ர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூனா விருது - வில்வித்தை வீராங்கனை அதிதி கோபிசந்த் சுவாமி, கிரிக்கெட் வீர்ர் முகமது ஷமி, தடகள வீரர் சங்கர், செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது - லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி. ரமேஷ் (செஸ்), மகாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), ஷிவேந்திர சிங் (ஹாக்கி), ஸ்ரீ கணேஷ் பிரபாகர் தேவ்ரூக்கர் (மல்லாகம்ப்) ஆகிய 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது: மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி).

விருது வழங்கும் விழா ஜனவரி 9-ம் தேதி காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கனவு ஆசிரியர் 2023 - விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு (Kanavu Aasiriyar 2023 – Awardee List Released)...


 கனவு ஆசிரியர் 2023 - விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு (Kanavu Aasiriyar 2023 – Awardee List Released)...



>>> கனவு ஆசிரியர் 2023 - விருது பெறுவோர் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> கனவு ஆசிரியர் 2023 - திட்டம் குறித்த அறிக்கை...





கனவு ஆசிரியர் 2023

மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கனவு ஆசிரியர் 2023 தெரிவானது பின்வரும் மூன்று படிநிலைகளில் நடத்தப்பெற்றது.

நிலை -1

இணையவழி MCQ  (Multiple choice questions) 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நிலை - 2

மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்பு.

நிலை 3

ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் - இரண்டாம்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு.

இத்தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள். பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.

மேற்கண்டுள்ள மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 % க்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தெரிவு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள். 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - 2023 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா - மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைகள் புரிந்த 3 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவர், அதிக அளவில் வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் அறிவிப்பு - அரசாணை (ப) எண்: 24, நாள்: 01-08-2023 வெளியீடு (Differently abled Persons Welfare Department - Independence Day Celebration 2023 - Tamil Nadu Government State Awards Announcement for 3 District Collectors, Doctor, Most Employing Private Company, Best Charity Organization, Best Social Worker & Best District Central Cooperative Bank for the Welfare of the Disabled - G.O. ( b) No: 24, Dated: 01-08-2023)...


>>> மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - 2023 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா - மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைகள் புரிந்த 3 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவர், அதிக அளவில் வேலைக்கு அமர்த்திய தனியார் நிறுவனம், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் அறிவிப்பு - அரசாணை (ப) எண்: 24, நாள்: 01-08-2023 வெளியீடு (Differently abled Persons Welfare Department - Independence Day Celebration 2023 - Tamil Nadu Government State Awards Announcement for 3 District Collectors, Doctor, Most Employing Private Company, Best Charity Organization, Best Social Worker & Best District Central Cooperative Bank for the Welfare of the Disabled - G.O. ( b) No: 24, Dated: 01-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கரூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள், கோவை காவல் கண்காணிப்பாளர், மின் ஆளுமை முகமை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான நல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு - அரசாணை (நிலை) எண்: 73, நாள்: 12-08-2023 வெளியீடு (Notification of Good Governance Awards for the year 2023 to Collectors of Karur and Cuddalore, Superintendent of Police, Coimbatore, E-Governance Agency and Principal of Madras Medical College - G.O. (Ms) No: 73, Dated: 12-08-2023 Issued)...


>>> கரூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள், கோவை காவல் கண்காணிப்பாளர், மின் ஆளுமை முகமை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதுகள் அறிவிப்பு - அரசாணை (நிலை) எண்: 73, நாள்: 12-08-2023 வெளியீடு (Notification of Good Governance Awards for the year 2023 to Collectors of Karur and Cuddalore, Superintendent of Police, Coimbatore, E-Governance Agency and Principal of Madras Medical College - G.O. (Ms) No: 73, Dated: 12-08-2023 Issued)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படவுள்ள சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருதுக்கான அடிப்படைகள் மற்றும் மதிப்பீடு (Criteria and Weightage for the Best School Management Committee Award to be presented by the District Collectors on 15th August 2023 Independence Day)...

 

 

 சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருது : 2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர்களால் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சிறந்த பள்ளி மேலாண்மை குழுவிற்கு பாராட்டு சான்று வழங்கப்பட இருக்கிறது. அதற்கான அடிப்படைகள் (Criteria) மற்றும் மதிப்பீடு (Weightage) - மொத்த மதிப்பீடு அளவு 100 மதிப்பெண்கள் (Best School Management Committee Award : On 15th August 2023 Independence Day, District Collectors will present a certificate of appreciation to the best performing school management committee at the district level. Criteria and Weightage - Total weightage is 100 marks)...


>>> 2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படவுள்ள சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருதுக்கான அடிப்படைகள் மற்றும் மதிப்பீடு (Criteria and Weightage for the Best School Management Committee Award to be presented by the District Collectors on 15th August 2023 Independence Day)...




புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (NILP) - 2022-2023ல் சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களுக்கு விருது வழங்குதல் - மாவட்ட வாரியாக ஒன்றிய வாரியாக பள்ளியில் பெயர் பட்டியல் வெளியீடு - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 871/ஆ2/2023, நாள்: 26/07/2023 (New India Literacy Program - Awarding of best performing learning centers in 2022-2023 - Publication of school name list in district wise Union wise - Proceedings of Director of Non-School and Adult Education NO: 871/A2/2023, Date: 26/07/ 2023)...

 

>>> புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (NILP) - 2022-2023ல் சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களுக்கு விருது வழங்குதல் - மாவட்ட வாரியாக ஒன்றிய வாரியாக பள்ளியில் பெயர் பட்டியல் வெளியீடு - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 871/ஆ2/2023, நாள்: 26/07/2023 (New India Literacy Program - Awarding of best performing learning centers in 2022-2023 - Publication of school name list in district wise Union wise - Proceedings of Director of Non-School and Adult Education NO: 871/A2/2023, Date: 26/07/ 2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன் இரண்டு நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 1381, நாள்: 13-07-2023 (Tamil Nadu Government Rural Innovator Award to two persons with a Cheque of Rupees One Lakh each - Government of Tamil Nadu Press Release No: 1381, Dated: 13-07-2023)...



>>> தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன் இரண்டு நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்: 1381, நாள்: 13-07-2023 (Tamil Nadu Government Rural Innovator Award to two persons with a Cheque of Rupees One Lakh each - Government of Tamil Nadu Press Release No: 1381, Dated: 13-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அரசு, அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு (Best Science Teacher Award - Science City invites applications from Science Teachers working in Government, Government Aided High / Higher Secondary Schools)...

 


>>> சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அரசு, அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு (Best Science Teacher Award - Science City invites applications from Science Teachers working in Government, Government Aided High / Higher Secondary Schools)...



>>> சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான முன்மொழிதல் தொடர்பாக உயர் கல்வித் துறையின் கடிதம் மற்றும் விண்ணப்பப் படிவம் (Letter and Application Form from the Department of Higher Education regarding the Nomination for the Best Science Teacher Award in the field of School Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘அன்பாசிரியர் 2022’ விருது - விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 02/06/2023 ('Anbaasiriyar 2022' Award by 'Hindu Tamil Thisai' Newspaper - Last Date to Apply: 02/06/2023)...



 ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘அன்பாசிரியர் 2022’ விருது - விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 02/06/2023 ('Anbaasiriyar 2022' Award by 'Hindu Tamil Thisai' Newspaper - Last Date to Apply: 02/06/2023)...

--------------------------------------


அ). அன்பாசிரியர் விருதின் தனித்துவம் யாது?


மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு, மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளை போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதே ‘அன்பாசிரியர்’ விருது.

'இந்து தமிழ் திசை' நாளிதழும், தமிழக பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களில், மாணவர்கள் மீது பேரன்பும், அவர்களின் வளர்ச்சி குறித்த அக்கறையும் கொண்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முதன்முதலில் 'அன்பாசிரியர்’ விருதை 2020-ல் வழங்கின.

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் 37 பேர், புதுச்சேரியும் சேர்த்து மொத்தம் 38 ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்-2020’ விருது வழங்கப்பட்டது. இதுதவிர ‘அன்பாசிரியர்’ நூல் வெளியீடும் நடைபெற்றது. இந்த நூலின் நாயகர்களான முன்னோடி அன்பாசிரியர்கள் 50 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, கரோனா பெருந்தொற்று காலத்திலும் தங்களது இடைவிடாத ஈடுபாட்டின் வழியாகக் மாணவர்களுக்கு அன்பும் அறிவும் ஊட்டிய அர்ப்பணிப்பு மிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 45 ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்-2021’ விருது வழங்கப்பட்டது.

இவ்வாறு ‘இந்து தமிழ் திசை’யிடம் அன்பாசிரியர் விருது பெற்ற பலருக்கு தேசிய நல்லாசிரியர் விருதும் கடந்த ஆண்டுகளில் கிடைத்தது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தியாகும். 

அடுத்த கட்டமாக, ‘அன்பாசிரியர்-2022’ விருது வழங்க ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெருமையுடன் காத்திருக்கிறது.



ஆ). யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள். தொடர்ச்சியாகக் கற்பித்துவரும் தலைமை ஆசிரியர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ஏற்கெனவே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தயவுகூர்ந்து விண்ணப்பிக்க வேண்டாம்.



இ). இணைய வழியில் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?


பின் வரும் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதனுடன் சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும்.



ஈ). அன்பாசிரியர் தேர்வு முறை


விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தமிழக மாவட்டங்கள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள ‘இந்து தமிழ் திசை’ அலுவலத்தில் முதல்கட்ட நேர்காணல் விரைவில் நடைபெறும்.

ஆசிரியர்கள், அவர்களின் மண்டலத்துக்கு ஏற்றபடி மேற்கண்ட நான்கு நகரங்களில் ஒன்றுக்கு நேரில் வர வேண்டியிருக்கும்.

தங்களிடம் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களை நேர்காணலுக்கு ஆசிரியர்கள் எடுத்து வரவேண்டும்.

மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணல் நடத்தப்படும்.

மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் [ 38 + 1 ( புதுச்சேரி) ] 39 பேருக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படும்.



உ). விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 02/06/2023


கூடுதல் தகவல்களுக்கு: திரு. டி. ராஜ்குமார் - 98432 25389


>>> விண்ணப்பிக்க வலைதள முகவரி (Website Address)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...