பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-10-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்:பொருட்பால்
அதிகாரம் :நட்பு ஆராய்தல்
குறள் எண்:800
பொருள்:குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடவேண்டும்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.
* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.
பொன்மொழி :
செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்.
பொது அறிவு :
1. சிப்பியில் முத்து உருவாக்க சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்.
விடை: 15 ஆண்டுகள்
2. ”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?
விடை: பாரதிதாசன்
English words & meanings :
Cup-கோப்பை,
Glass-கண்ணாடி
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச் சென்று மடையைத் திறக்க கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.
அக்டோபர் 14
அக்டோபர் 14 - உலக தர நிர்ணய நாள் (World Standards Day)
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று, ISO (தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு), IEC (சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையம்) மற்றும் ITU (சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்) ஆகியவற்றின் உறுப்பினர்கள் உலக தர நிர்ணய தினத்தைக் கொண்டாடுகிறார்கள், இது சர்வதேச தரங்களாக வெளியிடப்படும் தன்னார்வ தொழில்நுட்ப ஒப்பந்தங்களை உருவாக்கும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் ஒரு தினமாக கொண்டாடப்படுகின்றது.
நீதிக்கதை
நீதி :நாமும் நம்முடைய வாழ்க்கை இலட்சியத்தை தினம் தினம் நம் மனதில் நினைத்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் நம்மால் வெற்றி பெற முடியும்.
இன்றைய செய்திகள்
14.10.2024
* வணிகவரி - பதிவு துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.9,085 கோடி கூடுதல் வருவாய் ஈட்டி சாதனை.
* தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* இஸ்ரேல் உளவுத் துறையின் சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு ரகசியங்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
* வூஹான் ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ஜெங் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
* ஆசிய டேபிள் டென்னிஸ்: வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய ஜோடி.
Today's Headlines
* Business Tax - Registration Department recorded an additional revenue of Rs 9,085 crore over last year.
* Heavy rain is likely to occur in Tamil Nadu from today to October 17. Also, a red alert was issued for 4 districts namely Chennai, Tiruvallur, Kanchipuram, and Chengalpattu on October 16.
* Iran's government operations were crippled by a cyber attack by Israel's intelligence agency. In particular, it has been reported that cyber attacks have been carried out on Iran's nuclear facilities and secrets have been stolen.
* Wuhan Open Tennis: Sabalenka, Zheng advanced to finals.
* Asian Table Tennis: The Indian pair won the bronze medal.
Prepared by
Covai women ICT_போதிமரம்