பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
"பால் :பொருட்பால்
அதிகாரம் :தீ நட்பு
குறள் எண்:816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்
ஏதின்மை கோடி உறும்.
பொருள்:
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின்
நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்."
பழமொழி :
கோனுக்கு அழகு செங்கோல் முறைமை.
A sceptre of justice is the beauty of royalty.
இரண்டொழுக்க பண்புகள் :
*என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.
*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.
பொன்மொழி :
தெரியாது என்பதை தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள் ... அதே நேரம் தெரியாததைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். -அப்துல் கலாம்.
பொது அறிவு :
1. பெட்ரோல் காரை கண்டுபிடித்தவர் யார் ?
கால் பென்ஸ், 1888 . (ஜெர்மனி).
2. நீராவியைக் கண்டுபிடித்தவர் யார் ?
நிகோலஸ் குறாட்,1769. (பிரான்ஸ்).
English words & meanings :
Anxiety- பதட்டம்,
Brave- துணிச்சல்
வேளாண்மையும் வாழ்வும் :
களைகள் மட்டும் அல்லாது நுண்ணுயிர்களும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றில் ஆதிரப்பொட்டுக்கள் அடங்கும் (உதாரணம்: புழு பூச்சிகள், மிகச் சிறு பூச்சிகள்) மற்றும் நூற்புழுக்கள் ஆகியவை. பூசணங்களும், நுண் கிருமிகளையும்நோயை உண்டாக்கும்.
நவம்பர் 19
இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.
உலகக் கழிவறை நாள்
உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே
நீதிக்கதை
கற்றல்
ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே சொல்லிக் கொடுத்த குருநாதர் மீது சீடனுக்கு கோபம். தன் நேரம் *வீணாவதாய்* வருந்தினான்.
அவனுக்கு விஷயங்களை புரிய வைக்க நினைத்த குரு,கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பத்து கோழிகளை திறந்து விடச் சொன்னார்.
சீடன் திறந்து விட்டான். இப்போது திறந்துவிட்ட 10 கோழிகளையும் பிடித்து வர சொன்னார்.பத்தும் பத்து திசையில் ஓடிவிட்டன. அதனை பிடிக்க ஓடி ஓடி களைத்துப் போனான் சீடன். இப்போது குரு கழுத்தில் சிவப்பு நாடா கட்டப்பட்டிருக்கும் கோழியை மட்டும் பிடித்து வருமாறு கூறினார். அந்த ஒரு கோழியை மட்டும் குறி வைத்து துரத்தினான்.சிறிது நேரத்தில் பிடித்தும் விட்டான்.
குரு,"ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று. பலவற்றைப் பிடிக்க நினைத்தால், எல்லாவற்றையும் இழந்து நிற்பாய். அதாவது ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே கற்றுக் கொள்வது நல்லது" என்பதை சீடனுக்கு விளக்கினார்.
இன்றைய செய்திகள்
19.11.2024
* குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நவம்பர் 27-ல் தமிழகம் வருகை.
* மாநில அரசுகளுக்கான 50% வரிப்பகிர்வை உறுதி செய்திட மத்திய நிதிக் குழுவிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
* பொதுமக்களின் குறை தீர்ப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 13 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
* ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையில் இதுவரை 659 குழந்தைகள் பலி, காயம் 1,747 என யுனிசெஃப் தகவல்.
* ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.
* ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார்.
Today's Headlines
* President Diroupadi Murmu will visit Tamil Nadu on November 27.
* Tamil Nadu Chief Minister Stalin urges Central Finance Committee to ensure 50% tax sharing for state governments.
* Union Minister of State for Employee Welfare, Public Grievances and Pensions Department Dr. Jitendra Singh said that the period for redressal of public grievances has been reduced from 30 days to 13 days.
*"6As the Russian-Ukrainian war reaches 1,000 days, 659 children have been killed and 1,747 injured, according to UNICEF.,
* Z Indian Team Announcement for Junior Asia Cup Hockey Series
* Men's Tennis Championship Final: Jannik Sinner of Italy wins the title.
Prepared by
Covai women ICT_போதிமரம்