கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

WhatsApp group in the name of religion - I.A.S. Officers suspended

 

மதத்தின் பெயரில் வாட்ஸ் அப் குழு - ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை நீக்கம் 



WhatsApp group in the name of religion - I.A.S. Officers suspended



 கேரளாவில் மதத்தின் பெயரில் வாட்ஸ்அப் குழு அமைத்த சர்ச்சை: 2 இ.ஆ.ப., அலுவலர்கள் சஸ்பெண்ட்


கேரள ஐஏஎஸ் அதிகாரிகளின் விவகாரம் பகிரங்கமாக வெளிவரும் நிலையில், சர்ச்சையின் மையமாக உள்ள 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



கேராளவில் சமீபகால சர்ச்சைக்கு மையமாக இருந்த கேரள தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் கே.கோபாலகிருஷ்ணன் மற்றும் வேளாண் துறை சிறப்பு செயலாளர் என்.பிரசாந்த் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளை கேரள அரசு திங்கள்கிழமை சஸ்பெண்ட் செய்தது.


'மலையாள  இந்து அதிகாரிகள்' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு தொடங்கி பல சமுதாயங்களை சேர்ந்த சக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இணைத்ததோடு மதம் சார்ந்த கருத்துகளை பதிவிட்ட புகாரில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கேரள அரசு சஸ்பெண்ட் செய்ததுள்ளது.


2013-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான கோபாலகிருஷ்ணன், இந்த மாதம் “மல்லு இந்து அதிகாரிகள்” (மலையாள  இந்து அதிகாரிகள்) என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார்.  


"மல்லு இந்து அதிகாரிகள்" குழு அக்டோபர் 30ஆம் தேதி உருவாக்கப்பட்டது, அதில் இந்து மதத்தை பின்பற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். பல அதிகாரிகள் இந்த குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த குழு  உருவாக்கப்பட்ட சில மணிநேரங்களில் டெலிட் செய்யப்பட்டது.


இதன்பின் ஓரிரு நாளில், கோபாலகிருஷ்ணன் தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு பின்னர் குழு உருவாக்கப்பட்டதாக போலீசில் புகார் கூறினார். இருப்பினும், கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவில்,  போலீஸ் விசாரணையில் அவர் கூறியது போல் போன் ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.


அந்த புகாரில், “நண்பர் ஒருவர் இதுதொடர்பாக என்னிடம் கூறியபின்பே இதுகுறித்து எனக்கு தெரியவந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக வாட்ஸ் - அப் நிறுவனத்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோபாலகிருஷ்ணனது செல்போன் ஹேக் செய்யப்படவில்லை என்பது நிரூபனமானது.


அதுமட்டுமின்றி அவரது செல்போன் மூன்று நான்குமுறை ரீ செட் செய்யப்பட்டுள்ளதும் அதன்பின்பே காவல்துறையினரிடம் ஒப்படைத்ததும் தெரியவந்தது. போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறும் கோபாலகிருஷ்ணன், ஏன் போன் ரீ செட் செய்யப்பட்டது என்பது தொடர்பாக எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வாட்ஸ் அப் குழு தொடர்பான செய்திகள் பொதுவெளியில் வந்து கவனம் பெற்ற பிறகே கோபால கிருஷ்ணன் இதுதொடர்பாக புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.


அதிகாரிகளின் கேடர் ஒற்றுமையை சீர்குலைக்கவும், வகுப்புவாத ஒற்றுமையை வளர்க்கவும் இந்த குழு உருவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்திய சேவை நடத்தை விதிகள் 1968ன் பல்வேறு பிரிவுகளை மீறுவதாகவும் கருதப்பட்டது. கோபாலகிருஷ்ணன் துறைசார்ந்த ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டார்.


இந்நிலையில் தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கோபாலகிருஷ்ணனை முதலமைச்சர் பினராயி விஜயன் இடைநீக்கம் செய்தார். 


வேளாண் துறை சிறப்பு செயலாளர் என். பிரசாந்த் என்ற ஐஏஎஸ் அதிகாரியும், கூடுதல் தலைமைச் செயலாளரான ஜெயதிலக்கிற்கு எதிராக பதிவுகளை பதிவிட்ட புகாரின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


2017-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான பிரசாந்த், கடந்த மூன்று நாட்களாக சக ஐஏஎஸ் அதிகாரியான கூடுதல் தலைமைச் செயலாளர் ஏ.ஜெயதிலக்கிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பல கருத்துகளை  வெளியிட்டு இவரும் சர்ச்சையில் சிக்கினார்.


தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரனின் அறிக்கையின் அடிப்படையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். முந்தைய நாள், வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன், “அதிகாரிகளை அவர்கள் நினைப்பது போல் செயல்பட அரசாங்கம் அனுமதிக்காது… அதிகாரிகள் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி செயல்பட வேண்டும்” என்று கூறினார்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...