கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Suspension லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Impersonation in Govt School - Suspension of Teacher

 

அரசுப் பள்ளியில் அரங்கேறிய ஆள்மாறாட்டம் - ஆசிரியர் பணியிடை நீக்கம்


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.


ஆசிரியர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.


பள்ளிக்கூடம் கல்வியை மட்டுமல்ல... நல் ஒழுக்கம், பண்பாடு, நீதிபோதனை போன்றவற்றை கற்றுத்தரும் இடம். அங்கு மாணவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உருவாக்கும் போற்றுதலுக்குரிய பணியை செய்து வருபவர்கள் ஆசிரியர்கள்.


எல்லோரும் அவ்வாறு ஆசிரியப்பணியை அறப்பணியாக செய்கிறார்களா என்றால் பதில் கேள்விக்குறிதான்.


எங்காவது ஒருவர் தங்களது பணிக்கு இழுக்கை தேடிக்கொண்டு விடுகிறார்கள். அப்படியொரு ஆசிரியர் செய்த காரியம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் முறையாக வகுப்புகளுக்கு வரவேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், காலை உணவுத்திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது? அவர்களுக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் எந்த அளவில் உள்ளது? மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியலையும் கல்வித் துறை வெளிப்படையாக வெளியிட்டது.



இந்த நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது கடந்த சில மாதங்களாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கற்பித்தல் பணிக்கு செல்லாமல் நீண்டநாட்கள் விடுப்பில் இருப்பது, பள்ளிக்கு வந்தது போல் கணக்கு காண்பிப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.


அந்த வரிசையில் தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட காரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.


அதன்படி, ஆசிரியர் பாலாஜி மீது தமிழ்நாடு அரசுப் பணி (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தமிழ்நாடு முழுவதும் பல அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிலைதான் நீடிக்கிறது எனவும், கல்வித்துறை சார்பில் ஆய்வு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது எனவும் கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.



அரசுப் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கண்காணிப்பை தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்


அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களுக்கும் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுதவிர முறையாக ஆய்வு செய்யாத அலுவலர்களின் பட்டியலையும் பொதுவெளியில் வெளியிட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளி ஆய்வின்போது கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  


மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளதாக துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பணி நிறைவு பெற 7 நாட்களே உள்ள நிலையில் ஆசிரியை பணியிடை நீக்கம்

 

பணி நிறைவு பெற 7 நாட்களே உள்ள நிலையில் ஆசிரியை பணியிடை நீக்கம்


கோவை: ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை பர்வதம்மாள் (60), பணி ஓய்வு பெற 7 நாட்களே உள்ள நிலையில் பணியிடை நீக்கம்


மாணவனை குச்சியால் தாக்கிய புகாரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்



இரு சக்கர வாகனங்களைக் கழுவிய மாணவர்கள் - 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்



Students wash two-wheelers - 4 teachers suspended


இரு சக்கர வாகனங்களைக் கழுவிய மாணவர்கள் - நான்கு ஆசிரியர்கள்  பணியிடை நீக்கம்


டூ-வீலர்களை கழுவிய மாணவர்கள் - ஆசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட்


பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 156 மாணவ, மாணவியருடன் எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


பள்ளிக்கு சென்றிருந்த மாணவர்கள் சிலரை, நேற்று முன்தினம் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூன்று பேர், தங்களது, டூ-வீலர்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வைத்தனர்.



இதை, அதே கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், தங்களது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, பரவ விட்டனர்.


இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் நான்கு பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என தகவல்.


Liquor bottles lying in schools - HeadMasters suspended...

 

 பள்ளிகளில் கிடந்த மதுபாட்டில்கள் - தலைமை ஆசிரியர்கள் சஸ்பென்ட்...


2 Schools Head Masters suspended after Selvaperunthagai inspection 



திருவாரூரில் ஆய்வு மேற்கொண்டபோது 2 பள்ளிகளில் மதுபாட்டில்கள் கிடந்ததால் தலைமை ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்யுமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் பொதுக் கணக்குக் குழு தலைவருமான செல்வப்பெருந்தகை பரிந்துரைக்க, மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



திருவாரூர் மாவட்டத்தில் இன்று சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அடங்கிய பொதுக்கணக்கு குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.


திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். மேலும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரிகள், பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, வேளாண்மை அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் பொதுக்கணக்குக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் கமலப்புரம் அருகே உள்ள வேளுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகளில் செல்வப்பெருந்தகை தலைமையில், பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது அந்த பள்ளிக்கூடத்தில் காலி மதுபாட்டில்கள் கிடந்துள்ளன. 



உடனடியாக இதுகுறித்து பொதுக் கணக்குக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆசிரியர்களை கண்டித்துள்ளனர். அதன் பிறகு பொதுக் கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து உடனடியாக இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



பள்ளியில் இல்லாத 220 மாணவர்கள் - தமிழ்நாட்டையே உலுக்கிய தலைமை ஆசிரியரின் திட்டம் - மிரண்ட பள்ளிக்கல்வித்துறை - அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உத்தரவு...

 


பள்ளியில் இல்லாத 220 மாணவர்கள் -  தமிழ்நாட்டையே உலுக்கிய தலைமை ஆசிரியரின் திட்டம் - மிரண்ட பள்ளிக்கல்வித்துறை - அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உத்தரவு...


திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையும், இதன் பின்னணியும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன செய்தார் அவர்? பார்க்கலாம் விரிவாக...


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியரால் அரங்கேற்றப்பட்டிருக்கும் மோசடிகளும், முறைகேடுகளும் தமிழக கல்வித்துறையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது...


திருவள்ளூர் மாவட்டம், பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் இந்த சம்பவம்..


தலைமை ஆசிரியரான லதா, மாணவர்களின் வருகை பதிவேட்டை திருத்தம் செய்து, 230 மாணவர்கள் படிக்க கூடிய பள்ளியில், 550 மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார்...


இதற்கு ஏற்றார் போல கூடுதல் ஆசிரியர்களை பெற்று, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அவர் நிரப்பியதும் அம்பலமாகி உள்ளது..


இதோடு இல்லாமல், 220 மாணவர்கள் பெயரில் பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு விலையில்லாத திட்டங்களையும், சத்துணவு பொருட்களையும் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது...


இதனால், அரசுக்கு மிகப்பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்..


இந்த  மோசடியும், முறைகேடும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்திருப்பதை கண்டு அதிர்ந்து போன தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் , இதனை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடிக்காத வட்டாரக் கல்வி அலுவலர் மேரி ஜோசப்பை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்..


தொடர்ந்து, தலைமையாசிரியர் லதா மீதும் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது...


இந்நிலையில், இதன் எதிரொலியாய்.. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு / அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க கல்வித் துறை முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..



>>> பணியிடை நீக்கம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

வருகைப் பதிவேட்டை திருத்தி, மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து தலைமை ஆசிரியர் செய்த மோசடியை தொடர்ந்து அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.பூ.அ.நரேஷ் அவர்கள் உத்தரவு - Proceedings of The Director of Elementary Education, R.C.No.019790/12/2024, Dated: 06.09.2024...

 

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகை பதிவேட்டை திருத்தி,  மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து தலைமை ஆசிரியர் செய்த  மோசடியை தொடர்ந்து  அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட்  செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.பூ.அ.நரேஷ் அவர்கள் அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளார்...



வருகைப் பதிவேட்டை திருத்தி,  மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து தலைமை ஆசிரியர் செய்த  மோசடியை தொடர்ந்து  அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம்  செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.பூ.அ.நரேஷ் அவர்கள் செயல்முறைகள் Proceedings of The Director of Elementary Education, R.C.No.019790/12/2024, Dated: 06.09.2024...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Proceedings of The Director of Elementary Education, Chennai -06.

Present: Dr.P.A.Naresh

R.C.No.019790/12/2024, Dated: 06.09.2024.

Sub:

Tamil Nadu Elementary Education Subordinate Service.Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block,Ponneri Educational District, Thiruvallur District - Placed under suspension-Orders issued-Reg.

Ref

Thiruvallur Chief Educational Officer letter R.C.No.4327/2024,

Dated.20.08.2024

WHEREAS Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block, Ponneri Educational District, Thiruvallur District, was not properly monitoring and inspecting the Panchayat Union Primary School, Pammadhukulam which involved in fabrication of students enrollment and wrong fixation of student teachers ratio, which causes huge monetary losses to the government.

WHEREAS an inquiry into grave charges against Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block, Ponneri Educational District, Thiruvallur District is contemplated.

AND WHEREAS in the circumstances of the case, it is necessary in the public interest to place the said Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block, Ponneri Educational District, Thiruvallur District under suspension from service.

NOW, THEREFORE, under sub-rule (e) of rule 17 of the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules, the said Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block,Ponneri Educational District, Thiruvallur District is with immediate effect placed under suspension from service, until further orders.

2. During the period of suspension, the said Tmt.J.Mary Josephine, Block Educational Officer,Villivakkam Block, Ponneri Educational District, Thiruvallur District will be paid subsistence allowance as admissible under rule 53(1) of Fundamental Rules.

3. The headquarters of the said Tmt.J.Mary Josephine, Block Educational Officer, Villivakkam Block, Ponneri Educational District, Thiruvallur District during the period of suspension shall be Villivakkam Block and the said Tmt.J.Mary Josephine shall not leave the headquarters without obtaining prior permission of the authority concerned.

Director of Elementary Education

Tmt.J.Mary Josephine,

Block Educational Officer,

Villivakkam Block, Thiruvallur District

(Through District Educational Officer (Elementary), Ponneri)

Copy to:

 The District Educational officer, (Elementary), Ponneri.

2 The Block Educational Officer, Villivakkam Block, Thiruvallur District.

3. Concerned Treasury Officer/Sub Treasury Officer.

4. The Accountant General, Chennai -18.


அரசு ஊழியர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்தல் - நடைமுறைகளும், அரசாணைகளும்...

 

அரசு ஊழியர்களை  பணியிடை நீக்கம் Suspension செய்வது என்றால் என்ன?


அரசு ஊழியர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்தல் - நடைமுறைகளும், அரசாணைகளும்...


அரசு பணியில் இருக்கும் போது தவறு செய்யும் ஒருவர் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது. தவறு செய்தவராக கருதப்படுபவரை அவர் செய்த தவறின் தன்மையை பொறுத்து தொடர்ந்து அரசுப்பணி புரிவது அரசுப்பணிக்கும், அலுவலக நடைமுறைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்று கருதும்பட்சத்தில் அரசுப்பணியிலிருந்து அவரை தற்காலிகமாக விலக்கி வைக்கும் நடைமுறையே தற்காலிக பணி நீக்கம் ஆகும்.


இந்த நடவடிக்கை மிகவும் விஸ்தாரமானது. நீதிமன்ற நடவடிக்கை போன்றது. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைக்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. நீதிமன்ற நடவடிக்கை சாட்சியங்களின் அடிப்படையில் இருக்கும். ஆனால் துறை ரீதியான நடவடிக்கையோ சாட்சியங்களின் உறுதித்தன்மையை மேம்போக்காக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்திருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டாலே அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை விதிக்க வழி செய்கிறது.


அரசின் நம்பகத்தன்மைக்கு எதிராக குற்றம் செய்திருப்பார் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து நீக்க முடியும். எனவே துறை ரீதியான விசாரணைக்கு குற்றம் செய்தவரை உட்படுத்தவும், விசாரணை முடியும் வரை அரசுப்பணியிலிருந்து ஒருவரை தற்காலிகமாக விலக்கி வைப்பதுமே தற்காலிக பணி நீக்கத்தின் நோக்கமாகும்.


தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கப்பட்டவர் விசாரணை முடித்து இறுதி உத்தரவு வழங்கப்படும் வரை அவர் அரசுப்பணியில் பணிபுரிபவராகவே கருதப்படுவார்.


Tamilnadu civil Services (Discipline & Appeal) Rule 17(e) ன்படி, ஒருவரை தகுதியான அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.


Removal, Dismissal போன்ற பெருந்தண்டனைகளை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றங்கள் புரிந்ததாக கருதப்படுபவரை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கலாம். அல்லது ஒருவர் தொடர்ந்து அரசுப்பணி புரிவது இந்திய இறையாண்மைக்கோ, பொதுநலனுக்கு குந்தகமோ, பாதகமோ ஏற்படும் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கலாம்.


இருப்பினும் தகுந்த காரணமும், முகாந்திரம் இன்றி ஒருவரை தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை முடிந்தவுடன் அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என விதி 17(e)(6) ல் கூறப்பட்டுள்ளது.


திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து 7 வருடங்களுக்குள் அரசு ஊழியர் ஒருவரின் மனைவி சந்தேக மரணம் அடைந்தால், காவல் நிலையத்திலிருந்து இதற்கான அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அரசு ஊழியரான கணவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என Govt. Lr. No - 95405/Per-87-2 P & A. R, Date - 23.3.1988 உள்ளது.


பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் ஒரு அரசு ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என தமிழக அரசு கீழ்கண்டவாறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.


G. O. Ms. No - 7681, P & A. R, date - 2.7.1979


Govt. Lr. No - 94184/Per-83-5 P&A. R, date - 1.7.1985


Govt. Lr. No - 20513/Per-N/89-1 P&A. R, date - 4.3.1989


G. O. Ms. No - 439, P&A. R, date - 27.7.1989


Govt. Lr. No - 75671/Per-N /92-1, P&A. R, date - 9.12.1992


G. O. Ms. No - 37, P&A. R, date - 3.2.1995


Govt. Lr. No - 97772/N/94-1/P&A.R, date - 24.3.1995


Govt. Lr. No - 73552/N/95-3/ P&A. ஏ, date - 9.11.1995


Govt. Lr. (Ms). No - 4/N/2000/P&A.R, date - 21.7.2000


Govt. Lr. No - 198 /P&A. R, date - 29.12.2005


G. O. Ms. No - 144, P&A. R, date - 8.6.2007


Govt. Lr. No - 70374/N/2007-2/P&A.R, date - 14.3.2008


இதில் 8.6.2007 ஆம் தேதியிட்ட G. O. Ms. No - 144 என்ற அரசாணையில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் போது என்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


பணி ஓய்வு பெறும் நாளன்று ஒருவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யக்கூடாது. தேவை இருந்தால் பணி ஓய்வு நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே நடவடிக்கையை துவக்க வேண்டும். அந்த மூன்று மாத காலத்திற்கு முன்பு எடுக்கும் நடவடிக்கை போர்கால அடிப்படையில் இருக்க வேண்டும்.


விடுப்பில் இருக்கும் அரசு ஊழியரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம். இதற்காக அவர் விடுப்பு முடிந்து பணி ஏற்ற பிறகு தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது இல்லை. தற்காலிக பணி நீக்கம் செய்வதால் அவர் அனுபவிக்காமல் எஞ்சியிருக்கிற விடுப்பை ரத்து செய்து அவர் எடுத்த விடுப்பை, இருப்புக் கணக்கில் சேர்க்க வேண்டும். இதற்கு உயர் அதிகாரிகளின் ஆணை தேவையில்லை.


ஒரு அரசு ஊழியர் 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டதாக எதிர்காலத்தில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால், அவரை சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் deemed suspension ல் வைக்க வேண்டும் (F. R. 54(B)


பொதுவாக பணி அமர்த்த அதிகாரம் பெற்ற அதிகாரிகள் மட்டுமே பணி நீக்கம் சம்மந்தப்பட்ட ஆணைகளை வழங்க வேண்டும். யாரெல்லாம் தற்காலிக பணி நீக்கம் செய்ய அதிகாரம் உடைய அதிகாரிகள் என விதி 13 மற்றும் 14(a)(1) ல் கூறப்பட்டுள்ளது.


இருந்தாலும் விதி 14(a)(1) ன்படி பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய பெருந்தண்டனை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றம் இருந்தால் immediate higher officer கூட தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.


தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட விவரத்தை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.


பணி ஓய்வுக்குப் பின்னர் ஒருவர் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்தில் இருக்க வேண்டிய தேவையிருந்தாலோ அல்லது பணி ஓய்வு பெறும் நாளன்று ஒருவரை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்க வேண்டியிருந்தாலோ "பணியமர்வு அதிகாரி" தவறு செய்தவரை தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்து ஆணை வழங்கி தற்காலிக பணி நீக்கத்திலேயே தொடர ஆணையிட வேண்டும். (F. R. 56(1)(c) மற்றும் G. O. Ms. No - 216, P&A. R, date - 1.9.1998)


அரசுப்பள்ளியில் மாணவியை அறைந்த ஆசிரியை பணியிடை நீக்கம்...

 

 ஜோலார்பேட்டை அருகே அரசுப்பள்ளியில் மாணவியை அறைந்த ஆசிரியை பணியிடை நீக்கம்...



சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பணியிடை நீக்கம்...

 நெல்லை வள்ளியூரில், சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட்...


குளச்சல் பணிமனை அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம்.


நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவு.


பொதுமக்கள் எச்சரித்தும், ஓட்டுநர் சென்றதால் தேங்கிய மழைநீரில் சிக்கிய அரசு பேருந்து.


மிகுந்த சிரமத்திற்கு இடையே பேருந்தில் இருந்த பயணிகள் மீட்பு.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிக்காட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்...

 

 சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிக்காட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்...


ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிகாட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம் :- Teacher Ms. Uma Maheshwari's explanation of sections on social media postings indicating 34 reasons for suspension



தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் - 1973


பிரிவுகள்:-

12(1) , 12

(1) (i) , 12(1) (ii)

20(1) , 20(2)

9(1)

15 , 16 , அடிப்படையில்


செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள் சமூகவலைதள பதிவுகளின் 34 காரணங்களை சுட்டிகாட்டி பணி இடை நீக்கம் செய்ததற்கான பிரிவுகளின் விளக்கம்:-


இவண்:-

மா.முருகேசன்,

அரசுப்பள்ளி ஆசிரியர்,

தூத்துக்குடி



சமூக வலைதளங்களில், தமிழ்நாடு அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் எதிராக கருத்துக்கள் தெரிவித்ததாக ஆசிரியர் உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம்...

 

 சமூக வலைதளங்களில், தமிழ்நாடு அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் எதிராக கருத்துக்கள் தெரிவித்ததாக ஆசிரியர் உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம்...



Teacher Umamaheswari who expressed comments against the Tamil Nadu government and the school education department on social media has been suspended...






நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான 34 காரணங்கள் - மீறப்பட்டுள்ள அரசு விதிகளின் விவரம் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களது கடிதம்...

 

 நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை உமாமகேஸ்வரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான 34 காரணங்களை  இயக்குநர் வெளியிட்டுள்ளார்...


34 Reasons for Suspension of Nellikuppam Government Higher Secondary School B.T. Assistant Umamaheswari - Details of Government Rules Violated - Director of School Education's Letter...


நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை உமாமகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான 34 காரணங்கள் - மீறப்பட்டுள்ள அரசு விதிகளின் விவரம் - பள்ளிக்கல்வி  இயக்குநர் அவர்களது கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


+2 பொதுத்தேர்வு பணியில் சுணக்கமாக இருந்ததாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபா பணியிடை நீக்கம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

 


+2 பொதுத்தேர்வு பணியில் சுணக்கமாக இருந்ததாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபா பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..


+2 பொதுத்தேர்வு பணியில் சுணக்கமாக இருந்ததாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன்பே, ஒரு மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவது முதல் முறை ஆகும்.




நிதி மோசடி வழக்கில் கைதான 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...


நிதி மோசடி வழக்கில் கைதான 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...



 ராமநாதபுரத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான 2 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்...



சென்னையைச் சேர்ந்த நீதிமணி, அவரது மனைவி மேனகா மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனந்த் ஆகியோர் `புல்லியன் பின்டெக்' என்ற நிதி நிறுவனம் நடத்தினர். இவர்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்களிடம் 9 சதவீத வட்டி தருவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு பெற்றனர்.



இந்நிலையில், 2020 மார்ச் முதல் முதலீட்டாளர்களிடம் வாங்கிய தொகைக்கு வட்டித் தொகை வழங்கவில்லையாம். இதையடுத்து, ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன், காரைக்குடி ஆசிரியை கற்பகலில்லி ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர்.



அதன்பேரில், ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, நீதிமணி, ஆனந்த் ஆகியோரைக் கைது செய்தனர். தற்போது இவர்கள் இருவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, ராமநாதபுரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்த வழக்கில் தலைமை முகவர்களாகச் செயல்பட்டு, பணமோசடியில் ஈடுபட்டதாக கும்பரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் எம்.ஆரோக்கிய ராஜ்குமார் (45), ராமநாதபுரம் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர் சி.முருகவேல் (42) ஆகியோரை கடந்த 17-ம் தேதி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.



மேலும், மதுரை தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, கடந்த 2 நாட்களாக காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இந்நிலையில், பண மோசடியில் ஈடுபட்டு கைதான ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமார், ஆசிரியப் பயிற்றுநர் முருகவேல் ஆகியோரை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார


அதிகாரிகளை அவதூறாக பேசியதாக புகார் - அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் (Complaint for defamation of officials - Suspension of government school teacher)...

 அதிகாரிகளை அவதூறாக பேசியதாக புகார் - அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் (Complaint for defamation of officials - Suspension of government school teacher)...



மாணவர்களுக்கு காலை உணவு தாமதமாக வழங்கியதால் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (HeadMaster Suspended for serving breakfast to students late)...




மாணவர்களுக்கு காலை உணவு தாமதமாக வழங்கியதால் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (HeadMaster Suspended for serving breakfast to students late)...


 மயிலாடுதுறை: திருஇந்தளூரில் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. கூறைநாடு கவிஞர் வேதநாயகம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் எம்பி. ராமலிங்கம், எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா எம் முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து மாணவ மாணவிகளுடன் உணவு அருந்தினர். 


தொடர்ந்து மயிலாடுதுறை திருஇந்தளூர் நகராட்சி பள்ளியில் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் அதிகாரிகள் திட்டத்தை துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் உணவு அருந்திவிட்டு, அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்த எம்எல்ஏ. ராஜகுமார் உள்ளிட்டோர் தாமதமாக திருஇந்தளூர் பள்ளிக்கு வந்தனர். 


அதுவரை ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறு குழந்தைகள் பசியில் காக்க வைக்கப்பட்டனர். அவர்களது பசி தெரியாமல் இருக்க சிறு சிறு விளையாட்டுகள் ஆசிரியர்கள் விளையாடச் சொல்லி நேரத்தை போக்கினர். தொடர்ந்து 9:45 நிமிடங்களுக்கு மிகவும் காலதாமதமாக உணவு பரிமாறப்பட்டது. இதனால் குழந்தைகள் பசியில் வாடினர். தொடர்ந்து பள்ளியும் தாமதமாக துவங்கப்பட்டது. இது குறித்த செய்தி தினமலர் வெப்சைட்டில் வெளியானது. 


இந்நிலையில் திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்ட தொடக்க விழாவில் அரசு நிர்ணயித்த கால அளவினை தாண்டி மாணவர்களுக்கு தாமதமாக உணவு வழங்கி சிரமப்படுத்தியதாலும், காலை 9.45 மணியளவில் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கி அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அவப்பெயர் ஏற்பட காரணமாக இருந்த திருஇந்தளூர் நகராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியை குருபிரபாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.





எஸ்.பி. வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்: முதல்வர் அலுவலகம் தலையிட்டு ரத்து (Policeman suspended for refusing to bathe S.P's pet dog: Chief Minister's office intervened and canceled)...



 எஸ்.பி. வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்: முதல்வர் அலுவலகம் தலையிட்டு ரத்து (Policeman suspended for refusing to bathe S.P's pet dog: Chief Minister's office intervened and canceled)...


திருவனந்தபுரத்தில் வீட்டு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை எஸ்பி சஸ்பெண்ட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல்வர் அலுவலகம் தலையிட்டதை தொடர்ந்து அவரது சஸ்பெண்ட் உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் போலீஸ் தொலை தொடர்பு எஸ்பியாக பணிபுரிந்து வருபவர் நவநீத் சர்மா. இவரது மனைவி ரயில்வேயில் உயரதிகாரியாக உள்ளார். இதனால் ரயில்வே குடியிருப்பில் தான் நவநீத் சர்மா மனைவியுடன் தங்கி உள்ளார். நவநீத் சர்மாவுக்கு 2 பாதுகாவலர்கள் உள்ளனர்.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது பாதுகாவலரான ஆகாஷ் என்பவரை அவரது வீட்டு வேலைக்காரர் அழைத்து நாயை குளிப்பாட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய வேலை அதுவல்ல என்று கூறி ஆகாஷ் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று டிவி பார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டு வேலைக்காரர், நவநீத் சர்மாவுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். இதில் கோபமடைந்த நவநீத் சர்மா, தொலைத்தொடர்பு சப் இன்ஸ்பெக்டரை அழைத்து, ஆகாஷ் தன்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து  பொருட்களை சேதப்படுத்தியதாக எப்ஐஆர் பதிவு செய்யுமாறு கூறியுள்ளார்.


வேறு வழியின்றி எஸ்பி கூறியபடி ஆகாஷ் மீது சப் இன்ஸ்பெக்டர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். இதன் பின் ஆகாஷை உடனடியாக சஸ்பெண்ட் செய்து நவநீத் சர்மா உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து ஆகாஷ் முதல்வர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய போலீஸ் தலைமையாக உதவி ஐஜிக்கு  முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆகாஷின் சஸ்பெண்ட் உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் எஸ்பி நவநீத் சர்மாவின் பாதுகாவலர் பணியிலிருந்து  ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.  இந்த சம்பவம் கேரள போலீசில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அழுகிய முட்டை - பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் - கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை (Rotten egg given to school students - School Headmaster, Noon Meal Organizer, Cook suspended - Karur District Collector action)...

 


பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அழுகிய முட்டை - பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் - கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை (Rotten egg given to school students - School Headmaster, Noon Meal Organizer, Cook suspended - Karur District Collector action)...


கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகனூரில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது.


 கெட்டுப்போன அழுகிய முட்டைகளைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்ததாக எழுந்த புகாரையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுசெய்து, தலைமை ஆசிரியை, சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்டோர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்.


இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. பிரபு சங்கர் அவர்கள்,


"நாகனூர் அரசு துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து முட்டைகளின் தரம் நன்றாக இருந்தது. சத்துணவு அமைப்பாளர் சென்ற வாரம் பெறப்பட்ட சில முட்டைகளை ஒரு வாரத்திற்கும் மேலாக காலம் கடந்தும்  அப்புறப்படுத்த தவறியதால் சில முட்டைகள் அழுகியது விசாரணையில் தெரிய வந்தது.


பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர்,  உதவியாளர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற தவறுகள் வரும் காலங்களில் தவிர்க்க, உரிய அறிவுரைகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்."


என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.







ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்த்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை (Proceedings of the Joint Director (Personnel) R.C.No.58764/A1/S4/2021, Dated: 15 .11.2021 & G.O.(Ms).No.: 111, Human Resources Management (N) Department, Dated 11.10.2021 - School Education - Government Servants - Avoidance of suspension on the last date of retirement - Announcement made by the Honble Chief Minister on the floor of Assembly under Rule 110 of the Tamil Nadu Legislative Assembly Rules-Orders issued)...



 ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை தவிர்த்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை (Proceedings of the Joint Director (Personnel)  R.C.No.58764/A1/S4/2021, Dated: 15 .11.2021 & G.O.(Ms).No.: 111, Human Resources Management (N) Department,  Dated 11.10.2021 -  School Education - Government Servants - Avoidance of suspension on the last date of retirement - Announcement made by the Honble Chief Minister on the floor of Assembly under Rule 110 of the Tamil Nadu Legislative Assembly Rules-Orders issued)...



>>> Click here to Download Proceedings of the Joint Director (Personnel)  R.C.No.58764/A1/S4/2021, Dated: 15 .11.2021 & G.O.(Ms).No.: 111, Human Resources Management (N) Department,  Dated 11.10.2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...