கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Guidelines for Approval of Appointment of Teacher Posts in Government Aided Elementary and Middle Schools - Government Secretary's Letter

 

அரசு நிதி உதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌  ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நியமன ஒப்புதல்‌ வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்‌ - பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர்‌ செயல்முறைகள் கடிதம், நாள்: 10-05-2024


Guidelines for Approval of Appointment of Teaching Posts in Government Aided Primary and Middle Schools - Education Department Government Secretary's Proceedings Letter, Dated: 10-05-2024


 அரசுக் கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024-ல் அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியமன ஒப்புதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வருத்து ஆணையிடப்பட்டுள்ளது. இதில், சிறுபான்மைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கும் பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறை

தலைமைச் செயலகம்

சென்னை 9


Efile கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024


அனுப்புநர்‌
திரு. ஜெ.குமரகுருபரன்‌, இ.ஆ.ப....
அரசு செயலாளர்‌.

பெறுநர்‌

தொடக்கக்கல்வி இயக்குநர்‌.
சென்னை -6.

அய்யா,

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - உதவி பெறும்‌ பள்ளிகள்‌ - அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள தலைமை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நியமன ஒப்புதல்‌ அளிக்க அறிவுரைகள்‌ வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய பிற ஆசிரியர்‌ நியமனங்களுக்கும்‌ - நியமன ஒப்புதல்‌ வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடுதல்‌ - தொடர்பாக.


பார்வை. 1. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு WA(MD)No.76 of 2019etc. batches. இடைக்கால தீர்ப்பாணை நாள்‌.09.04.20%9.

2. அரசாணை (நிலை) எண்‌ 185.பள்ளிக்‌ கல்வித்துறை, நாள்‌.17.09.2019

3. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளை வழக்கு, WA(MD)No.76 of 2019etc, batches, தீர்ப்பாணை நாள்‌.3103.2021.

4. மாண்பமை புதுதில்லி உச்சநீதிமன்ற சிறப்பு அனுமதி மனு SLP (c) No.15702of 2021, தீர்ப்பாணை நாள்‌.16.02.2024.

5. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகள்‌ WA(MD) Nos. 320 of 2023 and 689of 2022 தீர்ப்பாணை நாள்‌.20:11.2023.

6. பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌ ந.க. எண்‌. 34116/ டி1/ இ4/ 2013, நாள்‌.29-03-2023.

7. தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ கடித நக.எண்‌. 004126/எச்/ஜி/2024, நாள்‌ 08.05.2024.


பார்வை 7ல்‌ காணும்‌ கடிதத்தில்‌ தொடக்ககல்வி இயக்குநர்‌, தூத்துக்குடி மாவட்டம்‌, கோவில்பட்டி சரகம்‌, வெங்கடாசலபுரம்‌, புனித ஜார்ஜ்‌ இனிகோ தொடக்கப்பள்ளியின்‌ இடைநிலை ஆசிரியை திருமதி 1, இருதய அமலி என்பவரின்‌ நியமனம்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலரால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படாத நிலையில்‌, மேற்படி ஆசிரியர்‌ தணது. நியமனத்திற்கு ஒப்புதல்‌ கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட வழக்கு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையில்‌, கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> அரசுக் கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

USA - Wildfires in California & Los Angeles - Hundreds of homes in ashes

அமெரிக்கா - கலிபோர்னியா & லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ - சாம்பலான நூற்றுக்கணக்கான வீடுகள் - காணொளி USA - Wildfires in California & Lo...