கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Man survives by lying in the middle of the tracks when the train arrives - video goes viral



ரயில் வரும் பொழுது தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய நபர் - வைரலாகும் காணொளி


Man survives by lying in the middle of the tracks when the train arrives - video goes viral


கேரளா: கண்ணூர்,  சிராக்கல் பகுதியைச் சேர்ந்த நடுத்தர வயது நபர் ரயில் வரும் போது தண்டவாளத்தின் நடுவில் படுத்து ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார்.


 நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, ரயில் நெருங்கியபோது அவர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு எந்த காயமும் ஏற்படாமல் அவரை ரயில் கடந்து சென்ற பின் எழுந்து சென்றார்.


 இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஸ்ரீஜித் என்பவர் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  இந்தச் செயல் தற்செயலானதா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகள் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



Kerala Kannur Viral Video Latest News: 

பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினந்தினம் பல்வேறு வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்கள் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆகும். அதிர்ச்சியளிக்கும் வீடியோக்கள், விழிப்புணர்வு வீடியோக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களில் வீடியோக்கள், வினோதமான வீடியோக்கள் என பல்வேறு வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி மக்கள் மத்தியில் பேசுப்பொருளாக இருக்கும். 


தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போனில் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் பழக்கங்களும் அதிகரித்துவிட்டது. யூ-ட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வீடியோக்கள் பதிவிட்டு இன்டர்நெட் பிரபலமாகிவிட நினைக்கின்றனர். இதனால், எந்த இடமானாலும் சரி, எந்த நேரமானாலும் சரி ஸ்மார்ட்போனை வைத்து புகைப்படம், வீடியோ எடுப்பதை பலரும் ஒரு வேலையாகவே வைத்திருக்கின்றனர். தினமும் குறைந்தபட்சம் ஒரு வீடியோ அல்லது ஒரு புகைப்படத்தையாவது பதிவிட்டு தங்களின் இருப்பை இணையத்தில் பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.



வைரலாகும் கேரள வீடியோ

அப்படியிருக்க, உங்களின் கண் முன்னே எதாவது அசம்பாவிதம் நடந்தாலோ, குற்றச்செயல்கள் நடந்தாலோ அது தட்டிக்கேட்கிறார்களோ இல்லையோ தங்களின் ஸ்மார்ட்போனை வைத்து பதிவுசெய்துவிடுகின்றனர். இது ஒரு வகையில் நல்லதுதான், ஏனென்றால் அவை குற்றவாளிகளுக்கு எதிரான ஆதரமாகிவிடுகிறது. மறுபுறம் யாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களையும் இதேபோல் சில வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில், கேரளாவில் ஒருவர் தன் கண்முன் நடந்த ஒரு வியப்பான சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் உலாவாவிட்டார், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ எதை பற்றியது, எதனால் அது இவ்வளவு தூரம் வைரலானது ஏன் என்பது குறித்து இங்கு காணலாம். 


வைரல் வீடியோ: திக் திக் காட்சிகள்


ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடிப்பொழுத்தில் தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.


கண்ணுார் : ரயில் வருவது தெரியாமல், தண்டவாளத்தில் நடந்து சென்ற முதியவர் சிக்கி, காயமின்றி உயிர் தப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடியில், தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ நேற்று மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டது.


ரயில் வேகமாக சென்றுகொண்டிருக்க அதன் அடியில் ஒருவர் படுத்துக்கொண்டிருப்பதும், ரயில் கடந்து சென்ற பின்னர் அந்த நபர் எதுவும் நடக்காதது போல் சற்று தள்ளாடியபடியே தண்டவாளத்தை கடந்து செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. நல்லவேளையாக, அந்த நபருக்கு காயம் ஏதும் இல்லை என்பதையும் காண முடிந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


அந்த வீடியோவில் ரயில் அடியில் படுத்துக்கிடந்த நபர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. கண்ணூர் பன்னென்பாறை பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பது உறுதியாகி உள்ளது.




விபத்து குறித்து பவித்ரன் கூறுகையில், நான் மொபைல் போனை பார்த்துக்கொண்டே,தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, ரயில் வருவதைப் பார்த்தேன். என்னால் ஓட முடியவில்லை. அதனால் நான் தண்டவாளத்தில் அப்படியே படுத்துவிட்டேன். ரயில் கடந்து சென்றதும் நான் எழுந்து வந்துவிட்டேன்.


நான் பள்ளி வாகன கிளீனராக உள்ளேன்.அந்த சம்பவத்தின் போது, நான் மதுபானம் எதுவும் அருந்தவில்லை. அந்த வீடியோவை பார்த்ததும் உள்ளுக்குள் பயமாக இருந்தது. தான் தொடர்ந்து இவ்வழியே செல்வதாகவும், இதுதான் எனது முதல் அனுபவம்.


இவ்வாறு பவித்ரன் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...