கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

13-03-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-03-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்:பொருட்பால்.            

அதிகாரம்: சான்றாண்மை.   

குறள் எண்:988
இன்மை ஒருவற்கு இலிவுஅன்று சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

பொருள்:
நிறைகுணம் ஒருவனுக்கு உறுதியாகுமானால் வறுமை அவர்க்கு
இழிவாகாது.


பழமொழி :
Live with your means.

வரவுக்கேற்ற செலவு செய்.


இரண்டொழுக்க பண்புகள் :

*  பசியுடன் இருப்பவர்களின் வேதனையை அறிவேன். எனவே உணவை வீணாக்காமல் உண்பேன்.

* பசியோடு இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உணவு தருவேன்.


பொன்மொழி :

விடாமுயற்சி என்பது 19 முறை தோற்றாலும், 100 ஆவது முறை எழுந்து நிற்பது. - ஜுலி ஆண்ட்ரரூஸ்


பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் கதர் நகரம் என அழைக்கப்படுவது எது?  

விடை: திருப்பூர்.     

2. தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?

விடை:   முதலமைச்சர் 



English words & meanings :

Doctor.  -   மருத்துவர்

Driver.     -    ஓட்டுநர்


வேளாண்மையும் வாழ்வும் :

இன்று, உலக மக்கள் தொகையில் 40% பேர் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்


நீதிக்கதை

புறா சொல்லும் பாடம்

சில புறாக்கள் ஒரு கோயில் மாடத்தில் தங்கியிருந்தன.வயது முதிர்ந்த ஒரு புறாதான் தலைவர். தினமும் காலையில்  தலைவர் வழிகாட்டி அழைத்துக்கொண்டு செல்கிற இடத்துக்கு சென்று  இரை சாப்பிட்டுவிட்டு மாலையில தங்களோட இடத்துக்குத் திரும்பிவிடும்.

இதைக் கவனித்த  வேடன் ஒருநாள் இரவு கோயில் அருகிலேயே தரையில் நிறைய தானியங்களைத் தூவி , அதன் மேலே ஒரு வலையை அமைத்து நான்கு மூலையிலும் முளை குச்சி அடித்து வைத்துவிட்டு போனான்.

அதிகாலையில் எல்லா புறாவும் இரைதேடி கிளம்பும் போது கீழே கொட்டிக்கிடக்கும் அந்த தானியங்களைப் பார்த்தன. இங்கேயே நம் தேவைக்கும் அதிகமான தானியங்கள் சிதறிக் கிடக்கின்றன;அதனால்

நெடுந்தூரம் பறந்து போய் இரை தேட வேண்டாம்” என்று சில இளம் புறாக்கள் கூறின. அதற்கு தலைமைப் புறா,

” இத்தனை நாளில்லாமல் இன்றைக்கு இவ்வளவு தானியமா; எனக்கு இது சந்தேகமாக உள்ளது. மேலும்

நம் முயற்சி இல்லாமல் தானே எதுவும் கிடைத்தால் அதில் ஆபத்து இருக்கலாம்; நான் போய் இரைக்கான இடத்தை தேர்வு செய்து வருகிறேன் ” என்றது.

அதற்குள் இளம் வயது புறாக்கள் ஒன்றுகூடி, “சுலபமாக கிடைப்பதை தலைவர் தடுக்கப் பார்க்கிறார்; வாருங்கள் இந்த தானியங்களை சாப்பிடுவோம் ” என்று கூறி எல்லா புறாக்களையும் தானியங்கள் மீது இறங்கச் செய்தன.

அவ்வளவுதான், அடுத்த நொடி புறாக்களின் கால்கள் வலையில் சிக்கிக் கொண்டன. ஆபத்தை உணர்ந்த புறாக்கள் பொறுமையிழந்து சிறகுகளை அடித்தபடி ” ஆபத்து, காப்பாற்றுங்கள்”  கதறத் தொடங்கின.

அப்போது தலைமை புறா எல்லோரையும் அமைதிப்படுத்தியது.

மேலும்” நான் சொல்வதை இப்போதாவது கவனமாகக் கேளுங்கள், நாம் வேடன் கையில் சிக்காமல் தப்பிக்கலாம். எல்லாரும் இறந்தது போல நடியுங்கள். வேடன் வலையின் நான்கு மூலைகளிலும் அடித்து வைத்திருக்கும் முளைக்குச்சியை எடுத்ததும் நான் வேகமாகப் பறந்துவந்து வேடன் தலையில் கொத்துவேன்;அவன் வலிதாங்காது கத்துவான். அதை உங்களுக்கான எச்சரிக்கையாக கருதிஎல்லாரும் ஒற்றுமையாக சிறகடித்து வலையுடன் வானத்தில் பறக்க வேண்டும்” என்று திட்டம் கூறியது.

       சிறிது நேரத்தில் வந்து பார்த்த வேடன் தண்ணீரில்லாமல் புறாக்கள் இறந்துவிட்டதாக எண்ணினான். ” அடடா, இவை உயிருடன் இருந்தால் நல்ல விலைக்கு விற்பதால் நிறைய பணம் கிடைத்திருக்கும். பரவாயில்லை இதாவது கிடைத்ததே என்று வலையின் நாண்கு மூலைகளின் முளைக்குச்சிகளை அகற்றினான். தாமதமில்லாமல் தலைமைப்புறா பறந்து வந்து வேடன் தலையில் கொத்தியது . வேடன் வலியில்

” ஆ..அம்மா” என்று கத்தினான். இந்த ஒலியைக்கேட்ட மற்ற புறாக்கள் படபடவென சிறகடித்து வலையுடன் வானில் பறந்தன. அதன் கீழே வேடன் சிறிது தூரம்”ஐயோ..என் வலை.” என்று கத்திக் கொண்டே ஓடினான்.

பறந்த புறாக்கள் ஒரு மலையைக் கடந்து சென்றபோது தலைமைப்புறா கீழிறங்க ஆணையிட்டது. அந்த இடத்தில் ஒரு எலி வளை இருந்தது.

தலைமைப்புறா, “எலி நண்பா,நான்தான் உன் புறா நண்பன் வந்திருக்கிறேன். ஆபத்திலிருக்கும் எங்களைக் காப்பாற்று”  என்று வேண்டியது. 

நண்பனின் வேண்டுதலை மறுக்க முடியாத எலி வலையைக்கடித்து எல்லாரையும் விடுவித்தது.

விடுதலையடைந்த புறாக்கள் எலிக்கு நன்றி கூறிவிட்டு பறந்தன.

நீதி : உழைப்பில்லாமல் வருபவை ஆபத்து உள்ளவை.


இன்றைய செய்திகள்

13.03.2025

* மின் இணைப்புகளில் பொருத்துவதற்காக ரூ.20,000 கோடி செலவில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் டெண்டர் கோரி உள்ளது.

* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 13 முதல் மார்ச் 18 வரையிலான 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* இந்தியா - மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

* “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

* இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி; அமெரிக்காவின்கோகோ காப் 4-வது சுற்றுக்கு தகுதி.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா தகுதிபெறாததால் ரூ.38 கோடி வருவாய் இழப்பு.


Today's Headlines

1. Tamil Nadu Electricity Board tenders for 3.04 crore smart meters worth ₹20,000 crores.

2. Chennai Weather Research Centre predicts moderate rain in Tamil Nadu, Puducherry, and Karaikal from March 13 to 18.

3. India and Mauritius sign 8 Memoranda of Understanding .

4. US President Donald Trump says Ukraine is ready for a temporary ceasefire and hopes Russian President Putin will agree.

5. American tennis player Coco Gauff qualifies for the 4th round of the Indian Wells International Tennis Tournament.

6. India misses out on the World Test Championship, incurring a revenue loss of ₹38 crores.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. Ms. No. : 52, Dated : 14-10-2024 - Establishment of Anti-Drug Clubs & Volunteer Groups in Educational Institutions

கல்வி நிலையங்களில் போதை தடுப்பு மன்றம் (Anti - Drug Club) & தன்னார்வலர் குழுக்கள் அமைத்தல் - சிறந்த போதை தடுப்பு மன்றம் மற்றும் தன்னார்வ...