கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு

 


எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு


Restrictions on the use of Gas cylinders


ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர்கள் மட்டுமே


வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள், ஆண்டுக்கு 15 (14.20kg) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என இந்திய எண்ணெய் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


இந்தியாவிலுள்ள வீடுகளில் ஆண்டுக்கு 15 சமையல் கேஸ் சிலிண்டர் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப, அனுமதிக்கப்பட்ட அளவை கடந்தால், 'அன்புள்ள வாடிக்கையாளரே, ஆண்டு ஒதுக்கீடான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள். மேலும் பதிவு செய்ய முடியாது' என்ற SMS தகவல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.



ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் மட்டுமே முன்பதிவு


ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 


15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெறலாம்.


வீடுகளில் ஒரே இணைப்பு அல்லது இரட்டை இணைப்பு வழியாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இரட்டை இணைப்பு வைத்திருப்பவர்கள், முன்பதிவு செய்து சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரே இணைப்பு கொண்டவர்கள், சிலிண்டர் காலியான பிறகே புதியதை பெற முடியும். மத்திய அரசு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கும் நிலையில், இதற்கு மேல் சிலிண்டர் பெறுவோருக்கு மானியமின்றி வழங்கப்படும்.


இந்தியன் ஆயில் தரப்பில் இருந்து கூறப்பட்டது :

"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 15 சிலிண்டர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சிலிண்டர் தேவைப்படுவோருக்கு, அவர்கள் ஏஜென்சியில் முறையான காரணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகே கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்" எனத் தெரிவித்தனர்.



எனவே, 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள், அதற்கு மேல் பெற வேண்டும் என்றால், ஏஜென்சியில் காரணத்துடன் கடிதம் வழங்கி அனுமதி பெற வேண்டும். இது முறைகேடுகளை தடுக்கும் ஒரு நடவடிக்கையாகவும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-26ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கையை அதிகபடுத்திய Top 10 DEOs பெயர் பட்டியல்

   2025-26ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கையை அதிகபடுத்திய Top 10 மாவட்டக் கல்வி அலுவலர்களின் DEO பெயர்ப் பட்டியல் Top 10 DEOs name list f...