கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Gas Cylinder லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Gas Cylinder லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தயாரித்துள்ள Translucent Gas Cylinder



ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தயாரித்துள்ள Translucent Gas Cylinder 


பாரமான இரும்புச் சிலிண்டரை

ஆட்டிப் பார்த்து,

சமையல் முடியுமளவிற்கு

எரிவாயு இருக்கிறதா என்று

ஊகிக்கும் காலம் இனி இல்லை!


ஐக்கிய அரபு அமீரகம் (UAE),

வீட்டு உபயோக எரிவாயு பாதுகாப்பில்

ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.


Translucent Composite பொருளால்

உருவாக்கப்பட்ட நவீன சிலிண்டர்கள்

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


இந்தச் சிலிண்டர்களின் வழியாக

உள்ளே இருக்கும் LPG-யின் அளவை

வெளியில் இருந்தே

ஒரே பார்வையில் அறிந்துகொள்ள முடியும்.


இதனால்,

சமையலுக்கு நடுவில்

திடீரென எரிவாயு தீர்ந்துபோகும்

சிக்கலைத் தவிர்க்கலாம்.


மேலும், இவற்றின் சிறப்பான

கைப்பிடி அமைப்பும், குறைந்த எடையும்

பயன்பாட்டை மிகவும் எளிதாக்குகின்றன.


பழைய இரும்புச் சிலிண்டர்களைவிட

சுமார் 40% குறைந்த எடை கொண்டதால்,

வீட்டுக்குள் எடுத்துச் செல்வதும்,

வெளிப்புற முகாம்களுக்குக்

கொண்டு செல்வதும் எளிதாகிறது.


லேசான தோற்றத்திற்குப் பின்னால்

வியக்க வைக்கும் அறிவியல் உள்ளது.



வலிமையான Fiberglass அமைப்புகளும்,

நீடித்து உழைக்கும் Polymer அடுக்குகளும்

இவற்றின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன.


மேலும், தீப்பற்றும் நேரங்களில்

பழைய இரும்புச் சிலிண்டர்களைப் போல

சிதறித் துண்டுகளாக மாறாமல்,

அழுத்தத்தைப் பாதுகாப்பாகக் குறைக்கும் வகையில்

இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.


துருப்பிடித்தல்,

கடற்கரையோர உப்புக்காற்றால் ஏற்படும்

பாதிப்புகள் போன்றவற்றையும்

இவை எதிர்க்கும் தன்மை கொண்டவை.


ஒரு சிலிண்டரில்

எரிவாயு எவ்வளவு உள்ளது என்பதை

ஊகிக்க வேண்டிய நிலையை மாற்றி,

கண்களால் பார்த்தே அறிந்துகொள்ளும் வசதி!


பாதுகாப்பு,

எளிதான பயன்பாடு,

குறைந்த எடை,

நவீன வடிவமைப்பு…


இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும்

இந்த புதிய தலைமுறை சிலிண்டர்கள்,

அன்றாட வாழ்க்கையிலும்

எரிவாயு பாதுகாப்பிலும்

ஒரு புதிய பாதையைத் திறக்கின்றன. 🔥


கிராமப்புறங்களில் Gas Cylinder கட்டுப்பாட்டில் மாற்றம்



கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு தளர்வு.


கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடுகளை தளர்த்தி மத்திய அரசு உத்தரவு.


கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைப்பு.


- மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அறிவிப்பு.



கேஸ் சிலிண்டர் e-KYC : ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு



கேஸ் சிலிண்டர் e-KYC : ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு.


வீட்டு உபயோக LPG சிலிண்டர் வாடிக்கையாளர்கள் e-KYC செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டு, 2026 ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


முன்னதாக ஆகஸ்ட் 23 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் பலர் e-KYC செய்யாமல் இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 85% வாடிக்கையாளர்கள் e-KYC முடித்துள்ள நிலையில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் பதிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


* e-KYC எப்படி செய்வது?


உங்கள் LPG நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலம் ஆன்லைனில் செய்யலாம்.

ஆதார் அடிப்படையிலான Face Authentication மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.


ஆன்லைனில் சிரமம் இருந்தால் அருகிலுள்ள LPG விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்று e-KYC செய்யலாம்.

நேரில் செல்லும்போது ஆதார் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது.


ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் e-KYC-ஐ முடித்துக் கொள்ளுமாறு LPG வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆண்டுக்கு 3 சிலிண்டர்களுக்கான தொகை வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு



ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு


 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பை வெளியிட்டார் 


📌 மகளிருக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் - முதலமைச்சர் விஜய் 


📌 எரிவாயு சிலிண்டருக்காக கூடுதல் தொகையை மக்கள் செலவு செய்கிறார்கள் 


📌 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசு வழங்க முடிவு செய்துள்ளது 


📌 அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் - ஆண்டுக்கு 3 சிலிண்டர்களுக்கான தொகை வழங்கப்படும் 


📌 சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் 


📌 1.30 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் அறிவிப்பு 


📌 ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிலிண்டர்


📌 பொங்கல் திருநாள் தொடங்கி திட்டம் செயல்பாட்டிற்கு வரும் - முதலமைச்சர்


📌 ஆண்டுதோறும் ரூ.4,000 கோடி செலவில் இலவச சிலிண்டர் திட்டம்


சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-



நமது அரசின் பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு இதுவரை சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் நமது அரசு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினை முதன்மை நோக்கமாக கொண்டு வெற்றி தொலை நோக்கு திட்ட ஆவணத்தினை வெளியிட்டுள்ளது. அந்த திட்ட ஆவணத்தின் அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு திட்டங்கள், அடுத்து வருகின்ற முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.


இருப்பினும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து இவ்வரசு நிறைவேற்றும்.


கடந்த 4 மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்தி வருவதாலும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும் பொது மக்கள் தங்களது வருவாயில் இருந்து கூடுதலாக தொகையினை செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.


இதனை கருத்தில் கொண்டு நிதி நெருக்கடியான சூழலிலும் பொது மக்களிடம் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கிலும் எரிவாயு சிலிண்டருக்காக செலவழிக்கப்பட்டு வரும் தொகையினை அவர்களுக்கு வழங்க இவ்வரசு முடிவு செய்துள்ளது.


3 சிலிண்டர்

எனவே குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.


எரிவாயு சிலிண்டருக்கான விலை பயானிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்ட பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.


1 கோடியே 30 லட்சம் பேர்

இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.


ஜனவரி மாதம் முதல்

இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்துக்காக ஆண்டு தோறும் தோராயமாக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.




Car Mobile Phone Holder Stand for Dashboard & Windshield, 360° Rotational, Strong Suction Cup, Compatible with 4 to 6 inch Devices(Black)


https://link.amazon/B02IVyD5R


வீட்டு உபயோக LPG சிலிண்டருக்கான E-KYC காலக்கெடு நீட்டிப்பு



 வீட்டு உபயோக சிலிண்டருக்கான E-KYC எனப்படும் சுயவிவரத்தை பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு


வீட்டு உபயோக LPG சிலிண்டருக்கான E-KYC  காலக்கெடு நீட்டிப்பு



வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி (e-KYC) செய்யக் காலக்கெடு வருகிற ஆகஸ்ட் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்பு இதன் இறுதி நாளாக ஆகஸ்ட் 23, 2026 அறிவிக்கப்பட்டிருந்தது, மக்கள் நலன் கருதியும், பதிவுகள் தாமதமாவதைத் தவிர்க்கவும் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.




Body Weight Machine | Bluetooth BMI Weight Scale with 3 Years Warranty | Weighing Machine & Body Fat Analyzer for Health Monitoring (Black)


https://link.amazon/B005lYjRs

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG Cylinder) விலை உயர்வு



வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG Cylinder) விலை உயர்வு


 நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு



Gas Cylinderஐ எளிதாக Booking செய்ய தொடர்பு எண்கள்


கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப், மிஸ்டு கால் அல்லது செயலி மூலம் மிக எளிதாக  புக்கிங் செய்ய


Gas Cylinderஐ WhatsApp, Missed Call அல்லது App மூலம் மிக எளிதாக  Booking செய்ய Contact Numbers


👇👇👇


🔵 பாரத்கேஸ் (Bharatgas):


வாட்ஸ்அப்: 1800 22 4344


மிஸ்டு கால்: 7710955555


ஐவிஆர்எஸ் (IVRS): 7715012345


செயலி: 'ஹலோ பிபிசிஎல்' (Hello BPCL)


வலைத்தளம்: my.ebharatgas.com


🟠 இண்டேன் (Indane):


வாட்ஸ்அப்: 7588888824


மிஸ்டு கால்: 8454955555


ஐவிஆர்எஸ் (IVRS): 7718955555


செயலி: 'இந்தியன் ஆயில் ஒன்' (IndianOil One)


வலைத்தளம்: https://cx.indianoil.in


🔴 ஹெச்பி கேஸ் (HP Gas):


வாட்ஸ்அப்: 9222201122


மிஸ்டு கால்: 9493602222


ஐவிஆர்எஸ் (IVRS): 8888823456


செயலி: 'எச்பி பே' (HP Pay)


வலைத்தளம்: https://myhpgas.in


சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க அரசு உத்தரவு

 சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு



 தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு? - எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.


தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு என இன்று (மார்ச் 10) மதியத்திற்குள் விவரம் அளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.


இஸ்ரேல் - ஈரான் போர் சூழலில் தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்.


தலைமைச் செயலாளர் தலைமையில் நேற்று (மார்ச் 9) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.


எரிவாயு சிலிண்டர் மானியத்தை தடையின்றி பெற e-KYC செயல்முறை



எரிவாயு சிலிண்டர் மானியத்தை தடையின்றி பெற e-KYC செயல்முறை


எரிவாயு சிலிண்டர் பயனர்கள், தங்களுக்கு வரும் மானியத்தை தடையின்றி பெறுவதை உறுதி செய்ய e-KYC செயல்முறையை முடிக்க வேண்டியது அவசியம். எண்ணெய் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டிற்கு மார்ச் 31ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது. இந்த தேதிக்குள் e-KYC செயல்முறையை முடிக்கவில்லை என்றால், பயனர்கள் மானியம் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.



👉மத்திய அரசு ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஒன்பது சிலிண்டர்கள் வரை மட்டுமே மானியத்தை வழங்குகிறது. இந்த தொகையை விட அதிகமாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முழுமையாக செலுத்த வேண்டும். இருப்பினும், இந்த மானியம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்க, அவர்களின் கணக்குகள் செயலில் இருக்க வேண்டும். முறையான சரிபார்ப்பு இல்லையென்றால், நிதி வெளியீடு நிறுத்தப்படலாம்.



>>> சிறந்த ட்ரிம்மர்களின் (Trimmers) பட்டியல்...



வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.853 ஆக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு


வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.853 ஆக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு


Domestic cooking gas cylinder price hiked to Rs. 853 - Central Government announcement


நள்ளிரவு முதல் நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு


மானிய விலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் பெறுபவர்களுக்கு 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேவேளை, கலால் வரி உயர்த்தப்பட்டபோதும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


கலால் வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது சமையல் எரிவாயு உருளை விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் 50 ரூபாய் விலை உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி இன்று அறிவித்துள்ளார்.


அதன்படி, விலை உயர்வு அடிப்படையில் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு

 


எரிவாயு சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு அறிவிப்பு


Restrictions on the use of Gas cylinders


ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர்கள் மட்டுமே


வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள், ஆண்டுக்கு 15 (14.20kg) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என இந்திய எண்ணெய் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


இந்தியாவிலுள்ள வீடுகளில் ஆண்டுக்கு 15 சமையல் கேஸ் சிலிண்டர் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப, அனுமதிக்கப்பட்ட அளவை கடந்தால், 'அன்புள்ள வாடிக்கையாளரே, ஆண்டு ஒதுக்கீடான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள். மேலும் பதிவு செய்ய முடியாது' என்ற SMS தகவல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.



ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் மட்டுமே முன்பதிவு


ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 


15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெறலாம்.


வீடுகளில் ஒரே இணைப்பு அல்லது இரட்டை இணைப்பு வழியாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இரட்டை இணைப்பு வைத்திருப்பவர்கள், முன்பதிவு செய்து சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரே இணைப்பு கொண்டவர்கள், சிலிண்டர் காலியான பிறகே புதியதை பெற முடியும். மத்திய அரசு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கும் நிலையில், இதற்கு மேல் சிலிண்டர் பெறுவோருக்கு மானியமின்றி வழங்கப்படும்.


இந்தியன் ஆயில் தரப்பில் இருந்து கூறப்பட்டது :

"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 15 சிலிண்டர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சிலிண்டர் தேவைப்படுவோருக்கு, அவர்கள் ஏஜென்சியில் முறையான காரணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகே கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்" எனத் தெரிவித்தனர்.



எனவே, 15 சிலிண்டர் பயன்படுத்தியவர்கள், அதற்கு மேல் பெற வேண்டும் என்றால், ஏஜென்சியில் காரணத்துடன் கடிதம் வழங்கி அனுமதி பெற வேண்டும். இது முறைகேடுகளை தடுக்கும் ஒரு நடவடிக்கையாகவும் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.


ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்க - வீடு தேடி வரும் சிலிண்டர் - இண்டேன் அறிவிப்பு...


மிஸ்டு கால் கொடுத்தால் போதும் வீடு தேடி சமையல் எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) பதிவு செய்யும் வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


சமையல் எரிவாயு சிலிண்டருக்கு குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்து, பின்னர் ரெக்கார்ட் வாய்ஸ் மூலம் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி சிலிண்டர் பதிவு செய்ய வேண்டும்.


தற்போது குறிப்பிட்ட எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தால் போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தானாக பதிவு செய்யும் வசதியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தியுள்ளார்.


84859 55555 என்ற எண்ணுக்கு அழைத்தால் அதன் மூலம் எரிவாயு சிலிண்டரை பதிவு செய்யலாம், மேலும் புதிய இணைப்பு பெறுவதற்கும் மிஸ்டு கால் வசதியை பயன்படுத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்த சேவையை அறிமுகப்படுத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்கள் எளிய முறையில் இனி சிலிண்டர் எரிவாயுவை பெறலாம் என்றும், இந்த மிஸ்டு கால் வசதி உதவும் என தெரிவித்துள்ளார்.

🍁🍁🍁 நவம்பர் 1,2020 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் புதிய மாற்றம்...

 


1. DAC (Delivery Authentication Code) என்ற நான்கு இலக்க OTP எண்ணை சிலிண்டர் வினியோகம் செய்யும் நபரிடம் தெரிவித்த பின்னரே வாடிக்கையாளருக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இல்லை எனில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படமாட்டாது.
  
2. LPG INDANE BOOKING இன்டேன் வாடிக்கையாளர்கள் 77189 55555 என்ற புதிய  எண்ணை அழைப்பதன் மூலமாகவும் 75888 88824 என்ற  எண்ணில் WhatsApp மூலமும் எரிவாயு முன்பதிவு செய்துகொள்ளலாம்.  

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Path to Update Club Incharge Teacher & Student Ambassador

  📢 * Path to Update Club Incharge Teacher & Student Ambassador 🏫 *Applicable Schools:* Pure Government Schools having Classes 6–9 onl...