கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - UPSC தேர்வில் சர்ச்சை கேள்வி



யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை


சாதியை ஒழிக்க பாடுபட்ட தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது UPSCன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி


IAS, IPS உள்ளிட்ட நாட்டை முன்னேற்றும் பொறுப்புள்ள பணியில் ஈடுபட வேண்டியவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் UPSC தேர்வில் சாதிய சர்ச்சையை உள்ளடக்கிய விஷமத்தனமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.


மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.






இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதன்படி யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்..? என கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது


முன்னதாக கடந்த 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். சாதி ஒழிப்புக்காக போராடிய பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது தேர்வர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும் யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில், ஒரு மசோதாவை கவர்னர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.3.6 - Updated on 08-01-2026

    தற்போது TNSED Schools  App-ல்  Noonmeal bug fixes and enhancements added   புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: ...