கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முப்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல்

 முப்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல்


பள்ளிக் கல்வித் துறை சார்பில் முப்பெரும் விழா ; ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் அவர்களின் அறிவுரை


சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.


நிகழ்வில் 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்.


எதுவானாலும் கூகுள், ஏ.ஐ.யிடம் கேட்கலாம் என்ற மெத்தனத்தில் இருந்துவிடக்கூடாது.


மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்தவேண்டியது நமது கடமை.


தேவையற்ற குப்பைகள் தற்போது அதிகமாகியுள்ளது; குழந்தைகளுக்கு சரியான விஷயத்தை கற்று தர வேண்டும்.


தொழில்நுட்பம், மனித சந்ததிக்கான வேறுபாட்டை உணர்த்த வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.


மாணவர்களிடம் எதையும் அன்புடன் சொல்லுங்கள் ; அவர்களுக்கு அழுத்தத்தை தராதீர்கள்.


மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர் காரணம் என சொல்வதுதான் மிகப்பெரிய விருது.


மாணவர்களுக்கு எந்தளவு அறிவாற்றல் முக்கியமோ அதேபோல் உடல் நலமும் முக்கியம்.


மாணவர்களின் குடும்ப சூழல், பின்புலம் அறிந்து செயல்பட வேண்டும் ; நீங்கள்தான் இரண்டாவது பெற்றோர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.


மாணவர்களுக்குள் சாதிய உணர்வு பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் இல்லாமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 ஆசிரியர் என்பவர் வெறும் பாடத்தை மட்டும் சொல்லித் தருபவர்கள் அல்ல, தனது கல்வியையும் அனுபவத்தையும் சொல்லித் தருபவர்கள்.

 ஏ ஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருப்பவர்களாக நமது மாணவர்களை உருவாக்க கூடாது. 

மனித சிந்தனைக்கும் ஏ ஐ சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும்.

மாணவர்களின் சிந்தனையை தூண்டி அறிவை மேம்படுத்த வேண்டியது நமது கடமை.

 புதுப்புது முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேச்சு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி (IT) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief)

  நிதியாண்டு 2025-26 வருமான வரி (Income Tax) புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief) ₹12 லட்சத்தி...