கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதலமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்



Kerala Chief Minister's security  vehicles collided one after the other at Thiruvananthapuram's Vamanapuram


 திடீரென சாலையை கடந்த பெண்ணால் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்


திருவனந்தபுரம் வாமனபுரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய கேரள முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் - காயங்களின்றி பயணத்தை தொடர்ந்தார் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அணிவகுப்பு பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் சாலையில் ஒன்றுடன் மோதி திடீரென விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரம் என்ற பகுதியில் சாலையில் பெண் ஒருவர் தமது ஸ்கூட்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். சாலையில் ஒருபுறம் நடுவழியில் தமது வாகனத்தை நிறுத்திய அப்பெண் வலதுபுறம் திரும்பினார்.


அதே நேரத்தில், முதல்வர் பினராயி விஜயன் கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கோட்டயத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பரபரப்பான சாலையில் பெண்ணின் வாகனம் நின்று திரும்புவதை அறியாமல் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட்டு நின்றது.


இதையடுத்து, முதல்வர் இருந்த வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் முதல்வர் பினராய் விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் திடீர் பரபரப்பு நிலவியது. முதல்வர் பினராயி விஜயன் பயணித்த கார் சிறிது சேதம் அடைந்தது. அவருக்கும், உடன்வந்த பாதுகாவலர்கள் உள்பட யாருக்கும் நல்வாய்ப்பாக எந்த காயமும் ஏற்படவில்லை.


முதல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




முதலமைச்சராக பதவியேற்றார் நயாப் சிங் சைனி



முதலமைச்சராக பதவியேற்றார் நயாப் சிங் சைனி...


ஹரியானா முதலமைச்சராக 2ஆவது முறையாக பதவியேற்றார் நயாப் சிங் சைனி.


சண்டிகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.


ஹரியானாவின் 90 தொகுதிகளில் 48 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது பாஜக.


யார் இந்த நியாப் சிங் சைனி? - குருஷேத்திராவின் எம்.பியாக இருக்கும் 54 வயதாகும் நயாப் சிங் சைனி, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் ஹரியாணா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். நயாப் சிங் சைனி தனது அரசியல் பயணத்தை கடந்த 1996-ம் ஆண்டு பாஜகவில் இருந்து தொடங்கினார். ஹரியாணாவின் நிர்வாக அமைப்பில் தொடங்கி படிப்படியாக முன்னேற்றமடைந்தார்.



2002-ம் ஆண்டு அம்பாலாவின் மாவட்ட பாஜக இளைஞர் பிரிவின் செயலாளராக இருந்தார். பின்னர் 2005-ம் ஆண்டு மாவட்டத் தலைவரானார். கடந்த 2014-ம் ஆண்டு நாராயணகர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தெடுக்கப்பட்ட நயாப், 2016-ம் ஆண்டு ஹரியாணா அரசின் அமைச்சராவும் நியமிக்கப்பட்டார்.


கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குருஷேக்த்ரா தொகுதியில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பதிவு செய்தார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 3.83 லட்சம் வாக்குகளில் வெற்றி பெற்றார்.


மனோகர் லால் கட்டாரின் நெருங்கிய கூட்டாளியாக அறிப்படும் நயாப் சைனி, எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2014-ம் ஆண்டில் இருந்து ஹரியாணா மாநில அரசியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இவர் தனது இளமை காலத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவரகள் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?


 கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவரகள் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன? 👇


▪️  வரும் 18ம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்


▪️ தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.


▪️ வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.


▪️ மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.


▪️ பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.


▪️ உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


▪️ தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

▪️ முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும்.

▪️ நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

▪️ ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

▪️ மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

▪️ அனைத்து மாவட்டங்களிலும் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

▪️ மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

▪️ முட்டுக்காடு, பக்கிங்ஹாம் கால்வாய் - கலைஞர் கருணாநிதி பாலம் அருகில், ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில் நீர்வடிவதற்கான தடைகளை நீக்குவதற்கு போதுமான இயந்திரங்களை இருப்பில் வைக்க வேண்டும்.

▪️ மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.

▪️ பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசிக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


▪️ மீட்புப் பணிகளுக்கு தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள் JCB இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


▪️ தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்.


▪️ பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.


பொதுமக்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய அறிவுரைகள்


▪️ விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள்   தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

▪️ தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

▪️ முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

▪️ கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம்.

▪️ அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

▪️ கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.  அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.


Mini Tidal Parks inaugurated by Chief Minister M.K.Stalin...



மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...


 தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் ₹30.50 கோடி மதிப்பிலும், சேலம் மாவட்டம் கருப்பூர் கிராமத்தில் ₹29.50 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...



மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1379, நாள்: 06-09-2024...


 மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1379, நாள்: 06-09-2024...


Chief Minister's Order to formulate and publish new guidelines for regulating various programs in schools in the State - Press Release No: 1379, Dated: 06-09-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.


எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும்,  முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய  வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.


தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.


அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!


முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - இணையதள முன்பதிவு செய்து பங்கேற்கலாம் - செய்தி வெளியீடு எண் 1239, நாள்: 19.08.2024...



முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் - இணையதள முன்பதிவு செய்து பங்கேற்கலாம் - செய்தி வெளியீடு எண் 1239, நாள்: 19.08.2024...


Chief Minister Cup Sports Tournaments - Online Booking and Participation - Press Release No. 1239, Dated: 19.08.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


“அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும்” - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நேர்காணல்...



 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது:



டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து...


ஜனநாயக நெறிமுறைகள், அரசியல் சட்ட மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சிறைபட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே நடத்தும் மாநில உரிமைக்கான போராட்டத்தை மதிக்கிறேன். நீதி அவர் பக்கம் நிற்கும் என நம்புகிறேன்.




கடந்த 2019 மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. அவ்வாறு வெற்றி பெற்ற 39 எம்.பி.க்கள் மூலம் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது. மீண்டும் இதேபோன்ற நிலை உருவானால், உங்கள் வெற்றியின் பலன் எவ்வாறாக இருக்கும்?


மீண்டும் அதே நிலை உருவாகாது. இண்டியா கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளை செயல்படுத்திக் காட்டுவோம். கடந்த 5 ஆண்டு காலத்தில் பாஜகவுக்கு மிகச் சரியான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டுள்ளது. மோடி அரசின் சர்வாதிகார சட்டங்கள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்துள்ளோம். எதேச்சதிகார செயல்கள் அனைத்தையும் மிக கடுமையாக அம்பலப்படுத்தி உள்ளோம்.


மாநில உரிமைகளுக்காக உரக்க ஒலித்துள்ளோம். ஒற்றை சர்வாதிகார நாடாக ஆக்க நினைக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்துள்ளோம். இதே சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி போராடி இருக்கிறோம். திமுக உறுப்பினர்களின் சிந்தனையால்தான் இண்டியா கூட்டணியே கொள்கை கூட்டணியாக உருவாகி உள்ளது.




தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், வெற்றி வசமானால் உங்களிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?


வெற்றியை மக்கள் எங்களுக்கு முழுமையாக வழங்குவார்கள். நாங்கள் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்.





தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மாற்றுக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் செய்கின்றனர். இதை மாற்ற என்ன முயற்சி எடுப்பீர்கள்?


ஆளுநர் என்பது நியமன பதவியே தவிர, அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பதவி கிடையாது. ஆளுநர்கள் மூலமாக பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அத்துமீறுவதும், போட்டி அரசாங்கம் நடத்த நினைப்பதும் அரசியல்சட்டத்தை மீறும் செயலாகும். அதனால்தான், ஆளுநர் என்கிற நியமனப் பதவியே தேவையில்லை என்பதுதான் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து கலைஞர் காலத்திலும் தற்போதும் திமுகவின் நிலைப்பாடு. ஆனால், நடைமுறையில் ஆளுநர் பதவி நீடித்துவரும் நிலையில், ஆளுநர்களை நியமிக்கும்போது, மாநில முதல்வர்களின் ஆலோசனைகளை பெற்று நியமிக்க புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், மாநில ஆளுநர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆளுநர் சட்டநடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறும்போது ஆளுநர்களின் அதிகார அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.





நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக மட்டுமே இருப்பதை பார்க்க முடிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த கோரிக்கை நிறைவேறுவது சாத்தியமா?


நீட் தேர்வால் மருத்துவ மாணவர்களின் கல்விக் கனவு சிதைக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்குவோம். பயிற்சி மையங்கள் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இதுதான் உண்மை. நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கிறது. அதனால் அதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கக் கோரி சட்டமுன்வடிவு இயற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளை கவனிக்கும் மற்ற மாநிலங்களும் இதிலிருந்து விலக்குப் பெறுவதற்கான வாய்ப்பு அமையும்.




பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இது உங்கள் தேர்தல் வெற்றியை பாதிக்காதா?


சட்டப்பேரவை தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என உத்தரவாதம் அளித்திருக்கிறேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஆட்சி சக்கரத்தை இயக்கக்கூடியவர்கள். அவர்கள் இந்த அரசு எந்தளவு நிதி நெருக்கடியில் இருந்து மெதுவாக மீண்டுவருகிறது என்பதை அறிவார்கள்.


மூன்றாண்டுகளுக்கு முன் இருந்த நிதி நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டதன் விளைவாக மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுபோல, நிதி நெருக்கடி இன்னும் சீராகும்போது மற்ற வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். மத்திய அரசிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதி உரிய வகையில் கிடைக்கின்ற காலம் கனிய இருப்பதால் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேறும் காலம் கனியும்.




இந்த முறை மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதே. சில குறிப்பிட்ட சமூகத்துக்கு இடம் தரவில்லை என்கிறார்களே?


அனுபவம் கொண்ட மூத்தவர்களும், அறிமுகமாகும் இளைஞர்களும் இணைந்த வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதுபோல அனைத்து சமுதாயத்தினருக்குமான பிரதிநிதித்துவத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால், உங்கள் கேள்விக்கே இடமிருக்காது. சில தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் அங்குள்ள சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்கும் சூழலும் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.




‘உயிரே போனாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டேன்’ என்று துரை வைகோ பேசியுள்ளார். உதயசூரியன் சின்னத்தில் நிற்கவேண்டும் என்று திமுக சார்பில் அவருக்கு அழுத்தம் தரப்பட்டதா?


தனி சின்னத்தில் நிற்பதாகவே தொகுதிப் பங்கீட்டின் போதும் மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. 'தீப்பெட்டி' சின்னத்தில் துரை வைகோ நிற்கிறார். எனவே, திமுக எந்த அழுத்தமும் தரவில்லை என்பதை நீங்கள் அறியலாம். இவ்வாறு முதல்வர் கூறினார்.


மிசோரம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக லால்து ஹோமா பதவியேற்றுக் கொண்டார் (Laldu Homa sworn in as the new Chief Minister of Mizoram)..



மிசோரம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக லால்து ஹோமா பதவியேற்றுக் கொண்டார் (Laldu Homa sworn in as the new Chief Minister of Mizoram)..


மிசோரம் மாநில முதலமைச்சராக ஜோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்து ஹோமா பதவியேற்றார். 


லால்டுஹோமாவுக்கு 74 வயதாகிறது, இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். 


முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாகவும் இவா் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


லால்துஹோமா 1987ல் மாநிலத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத, மிஜோ தேசிய முன்னணி (MNF) அல்லாத முதல்வர் ஆவார். மிசோரமின் அரசியலில் இரண்டு கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன, லால்தன்ஹாவ்லா (காங்கிரஸ்) மற்றும் ஜோரம்தங்கா (MNF) ஆகியோர் 34 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட முறை முதல்வர் நாற்காலியில் இருந்தனர்.  ஆறு பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியான ZPM, சமீபத்தில் நடந்து முடிந்த மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் 40ல் 27ல் வெற்றி பெற்று அபார வெற்றி பெற்றது. லால்துஹோமாவின் முன்னோடி, MNF தலைவர் ஜோரம்தங்கா (79), மற்றும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லா (81) ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். பதவியேற்ற பிறகு, லால்துஹோமா தனது அரசாங்கத்தின் கவனம் "விவசாயிகளுக்கு உகந்த கொள்கைகள், நிதி சீர்திருத்தங்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான உந்துதல்" என்று கூறினார். கேபினட் அமைச்சர்களாக பதவியேற்ற ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் ZPM செயல் தலைவர் கே.சப்தங்கா, வன்லால்லானா, சி. லால்சவிவுங்கா, லால்தன்சங்கா, வன்லால்த்லானா, பிசி வன்லால்ருடா மற்றும் லால்ரின்புயி (புதிய அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் அமைச்சர்). நான்கு மாநில அமைச்சர்கள் (சுயேச்சைப் பொறுப்பு), எஃப் ரோடிங்லியானா, பி லால்சன்சோவா, லால்னில்வாமா மற்றும் லால்ங்கிங்லோவா ஹ்மர் ஆகியோருக்கும் ஆளுநரால் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது. மிசோரம் முதலமைச்சராக பதவியேற்ற லால்துஹோமாவுக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா X தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். "மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன் மற்றும் வளமான மற்றும் இணக்கமான வடகிழக்கைக் கட்டியெழுப்ப உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் எழுதினார்.


Lalduhoma is the first non-Congress, non-MNF chief minister of the state since its formation in 1987. Mizoram’s politics had been dominated by the two parties, with Lalthanhawla (Congress) and Zoramthanga (MNF) occupying the chief minister’s chair for over 34 years.


The ZPM, an alliance of six regional parties, secured a landslide win in the recently concluded Mizoram Assembly elections, winning 27 of the 40.


Lalduhoma’s predecessor, MNF president Zoramthanga (79), and former Congress chief minister Lal Thanhawla (81) were also present at the swearing-in ceremony.


After the swearing-in, Lalduhoma stated that his government’s focus would be “farmer-friendly policies, fiscal reforms and a drive against corruption”.


The seven legislators who took oath as cabinet ministers are ZPM working president K Sapdanga, Vanlalhlana, C. Lalsawivunga, Lalthansanga, Vanlalthlana, PC Vanlalruata and Lalrinpuii (the only woman minister in the new cabinet).


Four ministers of state (independent charge), F Rodingliana, B Lalchhanzova, Lalnilwama and Lalnghinglova Hmar, were also administered the oath of office and secrecy by the Governor.


Assam chief minister Himanta Biswa Sarma took to X to congratulate Lalduhoma on assuming office as the chief minister of Mizoram.


“Wishing you a successful stint in advancing the state’s development and looking forward to working with you to build a prosperous & harmonious North East,” he wrote.


மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தொடக்கம் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (A new program called "Ungalai Thedi, Ungal Ooril (Looking for you, in your town)" where the government machinery will come to the field to find people, listen to people's grievances and solve them immediately - Honorable Chief Minister Mr.M.K.Stalin's announcement)...



 மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தொடக்கம் -  மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (A new program called "Ungalai Thedi, Ungal Ooril (Looking for you, in your town)" where the government machinery will come to the field to find people, listen to people's grievances and solve them immediately - Honorable Chief Minister Mr.M.K.Stalin's announcement)...



>>> செய்தி வெளியீடு எண் : 2328, நாள்: 23-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நிர்வாக தலைநகர் விசாகப்பட்டினம் - ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு நிரந்தர வீடு - உத்தரவாத ஓய்வூதியம் - முதலமைச்சர் ஜெகன்மோகன் (Visakhapatnam, the administrative capital of Andhra Pradesh state - Permanent housing for retiring government employees - Guaranteed pension - Chief Minister Jaganmohan)...



 ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நிர்வாக தலைநகர் விசாகப்பட்டினம் - ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு நிரந்தர வீடு - உத்தரவாத ஓய்வூதியம் - முதலமைச்சர் ஜெகன்மோகன் (Visakhapatnam, the administrative capital of Andhra Pradesh state - Permanent housing for retiring government employees - Guaranteed pension - Chief Minister Jaganmohan)...


ஆந்திர மாநிலத்தின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்...


ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்னர் தெலங்கானா, ஆந்திரா என இரண்டானது. அதையடுத்து, ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்கான பணிகளை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வந்தார். இதற்காக நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.


இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன், ஆந்திராவின் தற்போதைய தலைநகரான அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை சட்டத் (உயர் நீதிமன்றம்) தலைநகராகவும் ஏற்படுத்தி மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சம வளர்ச்சி அடைய செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யப்படும் அறிவித்தார்.


இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை கூடவுள்ளது. இதனை முன்னிட்டு, அம்மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.


அப்போது பேசிய முதல்வர் கெஜன் மோகன், “தசரா பண்டிகையன்று விசாகப்பட்டினத்தில் இருந்து மாநில நிர்வாகம் செயல்படத் தொடங்கும்.” என அறிவித்தார். தசரா தினமான நவம்பர் 2 ஆம் தேதி முதல்வரின் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்றும், அமைச்சர்கள் அங்கிருந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


அதேசமயம், கர்னூல் ஆந்திர மாநிலத்தின் சட்டத் (உயர் நீதிமன்றம்) தலைநகராகவும், அமராவதியை சட்டப்பேரவைத் தலைநகராகவும் செயல்படவுள்ளது.


மேலும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கட்டண மீளளிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் பலன்களை வழங்கவும் ஆந்திர அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஒவ்வோர் அரசு ஊழியரும் ஓய்வுபெறும் நேரத்தில் நிரந்தர வீடு இருக்க வேண்டும் என்றும் அமைச்சரவை முடிவு செய்தது. அரசு ஊழியர்களுக்கான உத்தரவாத ஓய்வூதியத் திட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


மேலும், குருபமில் வரவிருக்கும் பொறியியல் கல்லூரியில் பழங்குடியினருக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கவும், போலவரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8,424 வீடுகள் கட்டவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு (TCMTSE) விண்ணப்பிக்கும் வழிமுறைகள் (How to Apply for Tamil Nadu Chief Minister Talent Search Examination)...


>>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு (TCMTSE) விண்ணப்பிக்கும் வழிமுறைகள் (How to Apply for Tamil Nadu Chief Minister Talent Search Examination)...



>>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - விண்ணப்பித்த பள்ளி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் - செப்டம்பர் 2023 (Tamil Nadu Chief Minister Talent Search Exam - Application Form - September 2023)...


>>>  தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் - செப்டம்பர் 2023 (Tamil Nadu Chief Minister Talent Search Exam - Application Form - September 2023)...



>>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2023 அறிவிப்பு - 23-09-2023 அன்று தேர்வு - பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2023 அறிவிப்பு - 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23-09-2023 அன்று தேர்வு நடைபெறும் - இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் (TamilNadu Chief Minister Talent Search Exam September 2023 Notification - Exam will be on 23-09-2023 for 11th standard students - Scholarship of Rs.1000 per month will be given up to undergraduate)...

 


11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு அறிமுகம் - இளநிலை பட்டப் படிப்பு வரை உதவித்தொகை வழங்க ஏற்பாடு...


>>> தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2023 அறிவிப்பு - 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23-09-2023 அன்று தேர்வு நடைபெறும் - இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் (TamilNadu Chief Minister Talent Search Exam September 2023 Notification - Exam will be on 23-09-2023 for 11th standard students - Scholarship of Rs.1000 per month will be given up to undergraduate)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's greeting message for Tamil people's festival Pongal Thirunal)...



>>> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's greeting message for Tamil people's festival Pongal Thirunal)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளிக்கல்வித்துறை - கலைத்திருவிழா குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது உரை - காணொளி (Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin's speech on Kalai Thiruvizha - School Education Department - Video)...



>>> பள்ளிக்கல்வித்துறை - கலைத்திருவிழா குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது உரை - காணொளி (Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin's speech on Kalai Thiruvizha - School Education Department - Video)...


 அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்! என்று போற்றத்தக்க வகையில் பள்ளிக்கல்வி வரலாற்றில் மாணவர்களின் நலத்திற்காக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரைப்படி கல்வியில் மட்டுமல்லாது கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என பள்ளிகள் தோறும் கலைத் திருவிழாக்களை நடத்தி வருகிறோம். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. மாணவர்களின் திறமைகளை கண்டு ஊக்குவிக்கும் வண்ணம் பாராட்டு தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் இப்படி ஊக்குவிப்பதால் எங்கள் மாணவர்களும், பெற்றோர்களும் வானைத் தாண்டிய உயரங்களையும் அடைவார்கள்.


- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று இரவு 8.40 மணிக்கு செங்கோட்டை பயணம் மேற்கொள்ளும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி குறித்த தகவல்கள்(Information about the Pothigai Express train that Chief Minister Mr. M.K.Stalin will travel to Sengottai today at 8.40 pm)...




சென்னை,


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று இரவு 8.40 மணிக்கு பயணம் மேற்கொள்கிறார்.


இந்த ரெயில் நாளை காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும். அங்கு இறங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு விழாவில் பங்கேற்கிறார்.


மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதன்முறையாக இப்போதுதான் ரெயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்-அமைச்சரின் பயணத்திற்காக பொதிகை ரெயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது. இதில் சொகுசு ஓட்டலில் உள்ளதுபோல் பல்வேறு வசதிகள் உண்டு. இந்திய ரெயில்வே நிர்வாகத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்-அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக 'சலூன்' என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி உள்ளது.



இந்த சலூன் பெட்டி என்பது நகரும் வீடு போன்றது. பாத்ரூம் வசதியுடன் கூடிய 2 பெட்ரூம், பெரியஹால், டைனிங் டேபிள், உட்கார சோபா, நாற்காலி, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உண்டு. சமையலறையில் தேவையான பாத்திரங்கள், சுடுநீர், குளிர்சாதன பெட்டி சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர், போன்றவை பொருத்தப்பட்டிருக்கும்.



இது ரெயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்படுவதால் பின்புறம் இருக்கும் ஜன்னல் மூலமும் இயற்கை அழகை ரசிக்க முடியும். பெரிய நட்சத்திர விடுதியில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இந்த ரெயில் பெட்டியில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் வழங்குகிறது. பயணிகள் தொந்தரவு இல்லாத பயணத்தை இதில் மேற்கொள்ள முடியும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சொகுசு சலூன் பெட்டியில் பயணம் செய்ய இருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.



தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 1565, நாள்: 10-09-2022 (Tamil Nadu Chief Minister Mr.M.K.Stalin's speech at JACTTO-GEO Livelihood Trust Conference held at Chennai Island Ground today - Press Release No: 1565, Date: 10-09-2022)...



>>> தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 1565, நாள்: 10-09-2022 (Tamil Nadu Chief Minister Mr.M.K.Stalin's speech at JACTTO-GEO Livelihood Trust Conference held at Chennai Island Ground today - Press Release No: 1565, Date: 10-09-2022)...




ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள் (Honorable Tamil Nadu Chief Minister's announcements in JACTTO-GEO Livelihood Trust Conference)...



 ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள் (Honorable Tamil Nadu Chief Minister's announcements in JACTTO-GEO Livelihood Trust Conference)...


அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டே வந்துள்ளேன்.


1) அனைத்து வகை 16000 தற்காலிக / பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம்.


2) அக்டோபர் 15 முதல் இவர்களுக்கான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு இணைய வழியே நடைபெறும்.


3) அரசாணை எண்: 101 ரத்து செய்யப்பட்டுள்ளது..

( அரசாணை (G.O.No.) எண்: 151, நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி இயக்குநரகம் தனியாக இயங்கும். தனியார் பள்ளிகளுக்கு என தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு என தனியாக கல்வி அலுவலர் பணியிடங்கள்)...


நான் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். முதலமைச்சராக அல்ல, உங்களில் நானும் ஒருவன் என்ற நட்பு உணர்வோடு இதனைக் கூறுகிறேன். இந்த வெற்றி உங்களால் கிடைத்த வெற்றி. இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி...


இவ்வாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.





>>> தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு...




>>> ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - முதலமைச்சர் அவர்களின் உரை (Live)... 







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...