கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-10-2025

 

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 22.10.2025

கிழமை:- புதன்



*திருக்குறள்*


பால் :பொருட்பால் 

‌இயல்: குடியியல் 

அதிகாரம்:  பெருமை

குறள் எண்: 972


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 

செய்தொழில் வேற்றுமை யான்.


 விளக்கவுரை: 


எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.


 *பழமொழி :* 


A positive thought is the first step to victory.

நல்ல சிந்தனையே வெற்றியின் முதல் படி ஆகும்.


 *ஈரொழுக்கப் பண்புகள் :* 


1. இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.


2. எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்


 *பொன்மொழி :* 


அறிவை தேடுங்கள். அது நம்மை ஆற்றல் உடையவனாக ஆக்குகிறது. அறிவு, தனிமையில் நமது தோழன்; இன்பத்திற்கு வழிகாட்டி; துன்பத்திலோ ஆதரவாளர் - விநோபா


 *பொது அறிவு :* 


01. மனித உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?

விடை:  100 - 120 நாட்கள் (100-120  days)


02. தனிநபர் ஒருவர் கணக்கு தொடங்க இயலாத வங்கி  எது? 

விடை:  இந்திய ரிசர்வ் வங்கி Indian Reserve  Bank


 *English words :* 


Delight-pleasure, 

defend -protect 


 *தமிழ் இலக்கணம்:* 


 பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்: பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர் (பண்புப்பெயர்), தொழிற்பெயர் ஆகும்.


 *அறிவியல் களஞ்சியம் :* 


குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.


நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.


 _அக்டோபர் 22_ 


பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness Day, ISAD), அல்லது பன்னாட்டு திணறல் விழிப்புணர்வு நாள் (International Stammering Awareness Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 22 ஆம் நாள் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும். இது முதன் முதலில் 1998 இல் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதமானோர் திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நோக்கமாக உள்ளது.


 *நீதிக் கதை*


 ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. 


அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 


சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். 


ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.


அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. 


முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். 


இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். 


சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். 


இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான். 


நீதி : ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.


 *இன்றைய செய்திகள்* 


 _22.10.2025_ 


செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு-அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


வட தமிழகத்தை நோக்கி புயல் சின்னம் நகர்கிறது-14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 6,000 டன் காந்தங்களை உற்பத்தி செய்யும் வகையில் ₹7,350 கோடி காந்த உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.


சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்


 _விளையாட்டுச் செய்திகள்_ 


IPL (Indian Premier League): ஐபிஎல் 2025 பரீட்சை தற்போது கிளியரான முறையில் நடைபெற்று வருகிறது. பங்கு பெற்ற அணிகள் பல வருடங்களுக்குப் பிறகு வலுவான போட்டிகளை நடத்தி வருகின்றன. ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை சிறந்த வெற்றிகளை பெற்றுள்ளது.


 *Today's Headlines* 


Chembarambakkam Lake opened and Warned  to people along the banks of  Adayaaru river for rescues in advance.


Storm symbol moving towards North Tamilnadu due to heavy rain warning for 14 districts.


The Indian government is planning to set up ₹7,350 crore magnet manufacturing plants in India to produce about 6,000 tonnes of magnets per year. 


151 metric tonnes of firecracker waste removed in Chennai so far last 3 days.


 *SPORTS NEWS* 


IPL (Indian Premier League): The IPL 2025 exam is currently underway in a clear manner. The participating teams are playing strong matches after many years. The Mumbai Indians team, led by Rohit Sharma, has achieved great victories so far.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக இன்று 22.10.2025 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் TNSED Attendance Appல் செய்ய வேண்டியவை

கனமழை காரணமாக இன்று 22.10.2025 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில்  TNSED  Attendance App ல் செய்ய வேண்டியவை அனைவருக்கும் வணக்கம் ...