பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-11-2025 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 17.11.2025
கிழமை:- திங்கள்கிழமை
*திருக்குறள்*
பால் : பொருட்பால்
இயல்: அங்கவியல்
அதிகாரம்: மருந்து
*குறள் எண்: 996*
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
*விளக்க உரை:*
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
*பழமொழி :*
Great oaks from little acorns grow.
சிறிய தொடக்கம் பெரிய வளர்ச்சியாக மாறும்.
*ஈரொழுக்கப் பண்புகள் :*
1. அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.
2. எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.
*பொன்மொழி :*
கேள்விப்பட்டதை எல்லாம் நம்பி விடாதீர்கள் . அதில் இருக்கும் உண்மையை அறிய முற்படுங்கள். - கௌதம புத்தர்
*பொது அறிவு :*
01. உலகின் மிக உயரமான கிரிக்கெட் மைதானம் எது?
விடை: சைல் கிரிக்கெட் மைதானம் இமாச்சலப் பிரதேசம் Chail Cricket Ground Himachal Pradesh.
02. மனித கணினி என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: இந்திய கணித மேதை சகுந்தலா தேவி Shakuntala Devi, An Indian mathematician
*English words :*
delicious –having a very pleasant taste or smell.
இன்சுவைமிக்க அல்லது நறுமணம் மிக்க.
*தமிழ் இலக்கணம்:*
மொத்தம் 18 மெய்யெழுத்துக்கள் அவற்றில்
ய்,ர்,ழ் என்ற மூன்று மெய்யெழுத்துக்கள் அருகில் மட்டும் மற்றொரு மெய் எழுத்து வரும். மற்ற 15 எழுத்துக்கள் அருகில் மற்றொரு மெய்யெழுத்து வராது
எ.டு – ய் –தேங்காய்ப்பால்
ர் – நேர்க்கோடு
ழ் – தாழ்ப்பாள்
*அறிவியல் களஞ்சியம் :*
தன்னைவிட உருவில் பெரிய தவளைகளையும், பல்லி இனங்களையும் உணவாகக் கொள்ளும் திறனுடையது 'ரீகல் ஜம்ப்பிங் ஸ்பைடர்' (regal jumping spider- Araneae: salticidae) என்னும் சிலந்தி. இவற்றின் கண்கள் நான்கு ஒரே வரிசையிலும், மற்றவை வரிசைக்கு இரண்டாக மேலும் இரு வரிசையிலும் என, கண்கள் மூன்று வரிசையில் அமையும் தனிப்பட்ட அமைப்பைக் கொண்ட சிறப்புடையது. இந்த அமைப்பு அதன் பார்வையைக் கூர்மையாக்குகிறது. தனது உணவான உயிரியின் மீது பாய்ந்து, அவற்றின் உடலில் நஞ்சைச் செலுத்தி கொன்றபிறகு அவற்றின் உடலைத் துண்டுகளாகி உண்டுவிடும். ஜர்னல் ஆஃப் அராக்நாலாஜி (Journal of Arachnology) இதழில் முதன்முறையாக முதுகெலும்புள்ள விலங்குகளை உண்ணும் சிலந்தி ஒன்றுள்ளது என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
*நவம்பர் 17*
*லாலா லஜபதி ராய் அவர்களின் நினைவுநாள்*
லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.
*நீதிக்கதை*
*ரூபாய் நோட்டு*
ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனுடைய நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.
செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.
மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார். அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.
இம்முறை ரூபாய் நோட்டினை கீழே போட்டு விட்டு ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பது போல் கையை இறக்காமல் நின்றனர்.
கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், சரி கசங்கி இருந்தாலும் சரி அதன் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது. அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.
*இன்றைய செய்திகள்*
17.11.2025
🌟6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.
⭐ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!
⭐சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நவ. 30-ந்தேதி வரை நீட்டிப்பு.கடந்த வருடம் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது.
*விளையாட்டுச் செய்திகள்*
🔴நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. நியூசிலாந்து முதலில் விளையாடி 269 ரன்கள் விளாசியது.
*Today's Headlines*
⭐Tamilnadu school 's Half-yearly exam time schedule for classes 6 to 12 has been released.
⭐Actress Keerthy Suresh is appointed as UNICEF ambassador.
⭐The deadline for Samba rice crop insurance has been extended to Nov 30. Last year, 10 lakh acres of Samba rice crop was insured.
*SPORTS NEWS*
🔴The first ODI between New Zealand and West Indies was played in Christchurch. New Zealand batted first and scored 269 runs.
Electric Mosquito Bat Weird Wolf | Rechargeable Mosquito Killer Racket with Built-in Plug | Lithium Battery | Durable & Strong Design | 6-Month Warranty


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.