கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? : ஒரு வாரத்தில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 

ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? : ஒரு வாரத்தில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு


* திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு நீதியரசர்கள் அனிதா சுமந்த் , குமரப்பா அமர்வில் விசாரணைக்கு வந்தது.


 * அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். 01.04.2003 க்கு பின்னர் தமிழ்நாடு அரசில் பணியேற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அரசாணை எண்: 259, 06.08.2003 ன்படி நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இதற்கான விதிமுறைகள் ஏதும் இல்லை. மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டு உள்ளது. 12 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு அதனை பின்பற்றவில்லை.   ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவைப் பின்பற்றி அரசாணைகளோ, விதிமுறைகளோ இல்லை. இதனால் ஓய்வூதிய பலன்களை பெறமுடியாமல் பலர் உள்ளனர் என்றார்.


* இதனைத் தொடர்ந்து நீதியரசர்கள் கடைசி வாய்ப்பாக தமிழ்நாடு அரசு ஒருவாரத்தில் இது குறித்து தங்களது நிலைப்பாடு என்ன என்பதை மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை 19.11.2025 க்கு ஒத்தி வைத்தனர்.



PANCA Stainless Steel Paneer Maker Mould Big Size, Paneer Press With Lid, Tofu Press Mould Maker, Whey Seperator (Square, 550ml Capacity)


https://amzn.to/4p7jCRU




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2025 Paper 1 - Question Paper and Tentative Answer Keys

      15-11-2025 அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 1 : வினாத்தாள் மற்றும் தற்காலிக விடைக் குறிப்புகள் TNTET 2025 Paper 1 - Quest...