கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"சமவேலைக்கு சமஊதி​யம்" வழங்​கக்​கோரி சென்னை DPI வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது



 சமவேலைக்கு சமஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி சென்னை டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்ற ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்​பட்​டனர். சாலை​யில் அமர்ந்து போராடிய​தால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டது. ஆசிரியை ஒரு​வர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்​பட்​டது.


அரசு மற்​றும் அரசு உதவி​ பெறும் பள்​ளி​களில் 31.5.2009க்கு முன்னர் பணி​யில் உள்ள இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதற்கு பின்னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்படை சம்​பளத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு இருந்து வரு​கிறது. ஊதிய முரண்பாட்டை கண்​டித்து சமவேலைக்கு சமஊ​தி​யம் என்ற கோரிக்​கையை வலியுறுத்தி நீண்ட கால​மாக போராடி வருகின்​றனர்.


இந்​நிலை​யில், டிசம்பர் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் உள்​ளிட்ட கல்​வித்​துறை அலு​வல​கங்​கள் அமைந்​துள்ள DPI வளாகத்தை முற்றுகையிட்டு போராட்​டம் நடத்​தப்​ போவதாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து வளாகத்​தின் அனைத்து வாயில்​களும் மூடப்​பட்டு போலீ​ஸார் குவிக்கப்​பட்​டனர்.


போராட்​டத்​துக்​காக வெளியூர்​களில் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்​களை நுங்கம்பாக்கம், எழும்​பூர் ரயில்​நிலை​யங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் வழிமறித்து போலீஸ் வாக​னங்​களில் ஏற்​றிச்​சென்​றனர். இந்நிலையில், காலை 11.30 மணி​யள​வில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்​தின் பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் மற்​றும் நிர்​வாகி​கள் தலை​மை​யில் 50-க்கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகை​யிட முயன்​றனர்.


மற்​றொரு​புறம் ஏராள​மானோர் குவி​யத்​தொடங்​கினர். அதில் ஒரு பிரி​வினர் சாலையில் அமர்ந்து கோஷமிட்​டனர். அவர்களை காவல் துறையினர் குண்​டுக் கட்டாக தூக்கி போலீஸ் வாக​னங்​களில் ஏற்றினர்.


திடீர் மறியல்: தொடர்ந்து ஆசிரியர்கள் கூட்டம் கூட்​ட​மாக வரு​வதும் சாலை​யில் அமர்ந்து கோஷமிடு​வதும், அவர்​களை போலீஸார் வாக​னங்​களில் ஏற்​றிச் செல்வதும் என கல்​லூரிச்சாலை​யில் போக்குவரத்து நெரிசல் ஏற்​பட்​டது. வாகனங்கள் மாற்​றுப் பாதை​யில் திருப்​பி​விடப்​பப்​பட்​டன. இதற்​கிடையே, போராட்டத்தில் ஈடு​பட்ட நாமக்​கல் ஆசிரியை மகேஸ்​வரி என்​பவர் மயங்கி விழுந்​தார். இதையடுத்து அவர் அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த ஆம்​புலன்​ஸில் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார்.


போராட்​டம் தொடரும்: போராட்​டம் சற்று தணிந்த நிலை​யில் 50-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​களை ஒய்​எம்​சிஏ கல்​லூரி அருகே போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். இதனால் அவர்​கள் அனை​வரும் சாலை​யில் அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர் அவர்​கள் போலீஸ் வாக​னத்​தில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்​டனர்.


முன்​ன​தாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கத்​தின் பொதுச்​செயலாளர் ஜே.​ராபர்ட் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தி​முக தேர்​தல் வாக்​குறு​தியை இது​வரை நிறைவேற்​ற​வில்​லை, தொடர்ந்து பேச்​சு​வார்த்​தை, குழு அமைப்​பது என தள்ளிக்​கொண்டு செல்​கிறார்​கள்.


முன்​கூட்​டியே கைதுசெய்​வது, வலுக்கட்டாயமாக அப்​புறப்​படுத்​து​வது என எங்​கள் போராட்​டத்தை ஒடுக்க நினைத்தாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராடு​வோம்.  போராடக்​கூட அனு​மதி மறுக்​கிறார்​கள். அறவழி​யில் போராடும் எங்​களை தீவிரவாதிகளைப் போல நடத்துகிறார்கள்” என்​றார்.


அரசியல் தலை​வர்​கள் கண்​டனம்: சமவேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக்கோரி போராட்​டத்​தில் ஈடு​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டதற்கு அரசியல் கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரிவித்​துள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:


அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: திமுக அளித்த தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றக் கோரி போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்​களை காவல்​துறையினர் கைது செய்​திருப்​பது கடும் கண்டனத்​துக்​குரியது. முதல்​வர் ஸ்டா​லின் தான் கொடுத்த வாக்​குறு​தியை நிறைவேற்ற முடிய​வில்லை எனில், அதனை ஒப்​புக்​கொள்ள வேண்​டும். ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்​டும்.


பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்திரன்: சமவேலைக்கு சம ஊதி​யம் கேட்​டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்​களின் மீது அடக்​கு​முறையை ஏவி அவர்​களை வலுக்​கட்​டாய​மாகக் கைது செய்​துள்​ளது கடும் கண்​டனத்​துக்​குரியது.


ஆசிரியர்கள் முதல் செவிலியர்​கள் வரை அனை​வரை​யும் போராடும் அவல நிலைக்கு தள்​ளுவது​தான் நல்​லாட்​சி​யின் அம்​ச​மா? காலி பணி​யிடங்​களை நிரப்​பாமல், பணி​யில் இருப்​பவர்​களுக்கு முறை​யான ஊதி​யம் வழங்​காமல், ஓய்​வு​பெற்ற அரசு ஊழியர்களுக்​கான ஓய்​வூ​தி​யப் பலன்​களை விடுவிக்​காமல் ஒட்​டுமொத்த அரசு இயந்திரத்தையே பழு​தாக்​கியது​தான் திமுக அரசின் நான்​காண்டு சாதனை.


பாமக தலை​வர் அன்​புமணி: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வேண்​டும் என்று போராட்​டம் நடத்​திய ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்​கு​முறை​களை கட்​ட​விழ்த்து விட்​டிருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. ஆசிரியர்களின் போராட்​டத்தை அடக்​கு​முறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்​ணத்தை திமுக அரசு கைவிட்​டு, அவர்​களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.


தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: திமுக அறி​வித்த தேர்தல் வாக்​குறு​தி​களை இடைநிலை ஆசிரியர்​களும் நம்பி வாக்களித்தனர். ஆனால் இன்​னும் நிறைவேற்​றப்​ப​டாதது ஏற்​புடையதல்ல. போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்​தது அடக்குமுறையான செயல். தொடர்ந்து அடக்கு​முறை​களைக் கையாளாமல் இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறியுள்​ளனர்.




Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aided School Deployment - DEE Proceedings

  உபரி ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்தல் / மாற்றுப்பணி வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  அரசு உதவி பெறும் பள்ளிகள் பணியாளர்...