TETOJAC தலைவர்கள் கைது, வீட்டுக்காவல் - தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் - TNHHSSGTA அறிக்கை
*TNHHSSGTA மாநில அமைப்பு கண்டன அறிக்கை*
****************************************
*கண்டிக்கிறோம்* *கண்டிக்கிறோம்*
*****************************************
*டிட்டோஜாக் தலைவர்கள் கைது , வீட்டுக்காவல் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது*
*தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வித் துறையில் செயல்பட்டு வரும் ஆசிரியர் இயக்கங்கள் இணைந்த கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) பல்வேறு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைகளுக்காக அரசுக்கு முன்கூட்டியே அறிவிப்பாணை வழங்கி நாளை 8.12.2025 திங்கள்கிழமை சென்னை DPI வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில்*
*இயக்க பொறுப்பாளர்களிடம் கோரிக்கையில் குறித்து அழைத்து பேசி தீர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்தும் வீட்டுக்காவலில் வைத்தும் வருவதாக தகவல்கள் வருகிறது*
*கோரிக்கைகளுக்காக அறவழிப் போராட்டத்தில் ஈடுபடும் இயக்க பொறுப்பாளர்களை கைது செய்வதை அல்லது வீட்டுக்காவலில் வைப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந் நடவடிக்கையை உடனடியாக தமிழக அரசு கைவிட்டு டிட்டோஜாக் நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.*
*மேலும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை அடக்கு முறையை கையாள நினைத்தால் தமிழக அரசுக்கு அது பலனளிக்காது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்*
இவண்
முனைவர் *அ. மாயவன்* Ex MLC
நிறுவனத் தலைவர்
*சி.ஜெயக்குமார்*
மாநிலத் தலைவர்
*மா .குமரேசன்*
மாநில பொதுச் செயலாளர்
*ம. விஜய சாரதி*
மாநில பொருளாளர்
*மு.மாயகிருஷ்ணன்*
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்
*தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*
Pears Pure & Gentle Bathing Soap Bar 125 g (Combo Pack of 8) Moisturizing Glycerin Soap for Soft|| Glowing Skin & Body - Paraben Free|| For Men & Women
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.