30% ஓய்வூதியமா? - பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது - CPS ஒழிப்பு இயக்கம்
ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக திரு.ககன்தீப்சிங் பேடி இ.ஆ.ப தலைமையில் அமைக்கப்பட்ட அலுவலர் குழுவில்
*தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கம்* அளித்த பரிந்துரையில் தான் அரசு ஊழியர், ஆசிரியர் நலனுக்கு எதிரான *தமிழ்நாடு மாநில ஓய்வூதியத் திட்டத்தை (TSPS )* முன்மொழிந்தனர்.
*என்ன முன்மொழிவுகள்.?*
1) 60 வயதில் ஓய்வு பெறும் போது 35%
65 வயதில் 40%
70 வயதில் 45 %
75 வயதில் 50% ஓய்வூதியம் கொடுக்க வேண்டும்.
2) அரசு ஊழியரிடம் பிடித்தம் செய்யும் பங்கீடு 10%
அரசின் பங்கீடு 10%லிருந்து 20% ஆக உயர்த்த வேண்டும்.
3) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் போன்று பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 /- லட்சமாக்க வேண்டும்.
4) ஓய்வு பெறும் போது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியகளின் 10% பங்கீட்டை வட்டியுடன் கொடுக்க வேண்டும்.
அரசின் பங்கீட்டை அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது அரசே வைத்துக் கொள்ளலாம்.
5) 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு
குறைந்தபட்சம் ரூ.10000 /- ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
6) பிடித்தம் செய்யப்படும் பங்கீட்டு தொகை 10% +20% நிதியை பராமரிக்க தமிழ்நாடு ஓய்வூதிய நிதி மேலாண்மை வாரியத்தை ( Tamilnadu Pension Management Authority) கருவூல ஆணையர் தலைமையில் அமைக்கலாம்.
இந்த நிதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட, கார் வாங்க வட்டிக்கு கடன் கொடுக்கலாம்.
_________________________
*TSPS திட்டம் சாத்தியமா.?*
NPS (புதிய ஓய்வூதியம் திட்டம் ) திட்டத்திற்கும்
UPS ( ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ) திட்டத்திற்கும் இடைப்பட்ட திட்டம் TSPS.
CPS ல் அரசு ஊழியர் பங்கீடு 10%.
தமிழக அரசு பங்கீடு 10%.
NPS ல் அரசு ஊழியர் பங்கீடு 10%.
பிற மாநிலங்களில் அரசின் பங்கீடு 14%.
UPS அரசு ஊழியர் பங்கீடு 10%.
மத்திய அரசின் பங்கீடு
18.5%.
*TSPS திட்டத்திற்கான பரிந்துரை:*
அரசு ஊழியர் பங்கீடு 10%
*தமிழக அரசின் பங்கீடு 20%*.
தற்போது CPS திட்டத்தில் தமிழக அரசு 10% பங்கீட்டுத் தொகையாக மாதம் 626 கோடி செலவு செய்து வருகிறது.
TSPS திட்டபடி அரசு பங்கீடு 20% ஆக உயர்த்தப்பட்டால், தமிழக அரசு மாதம் ரூ.1252 கோடி செலவு செய்ய வேண்டும்.
*TSPS திட்டப்படி*
*தமிழக அரசு மாதம் 20% பங்கீடும் செலுத்தி., 60 வயதில் 35% ஓய்வூதியமும்,*
*5 வருடத்திற்கு ஒரு முறை ஓய்வூதியத்தை 5% உயர்த்துவது என்ற TSPS திட்டமானது...*
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதை விட தமிழக அரசுக்கு பன்மடங்கு செலவு கூடுதலாகும்.
பங்களிப்பு சேமநல நிதி ( Contributiory Provided Fund ) திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறியதற்கான வரலாறும், பொருளாதாரக் கணக்கும் தெரியாத தலைவர்களின் முன்மொழிவே தமிழ்நாடு மாநில ஓய்வூதியத் திட்டம்.
*பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட பன்மடங்கு கூடுதல் செலவாகும் என்பதால் தமிழ்நாடு மாநில ஓய்வூதியத் திட்டம் சாத்தியமே இல்லை.*
😥😥😥😥😥😥😥😥😥
மத்திய அரசில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000/-
எனவே, OPS திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் அகவிலைப் படியுடன் ரூ.9000/-
தமிழ்நாடு அரசில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700/-
எனவே, தமிழக அரசில் OPS திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் அகவிலைப் படியுடன் ரூ.7850/-
10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அச்சங்கம் முன்மொழிவு அளித்துள்ளது.
*குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் தகுதியான ஓய்வூதியத்திற்கு அகவிலைப் படி வழங்க வேண்டும் என்று TSPS திட்டத்தில் வலியுறுத்தவில்லை.*
😥😥😥😥😥😥😥😥😥
பணிக்கொடை அதிகபட்சம் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று அச்சங்கம் முன்மொழிந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக (01.01.2024முதல்) தமிழ்நாட்டில் அதிகபட்ச பணி கொடை ரூ.25 லட்சம்.
ரூ.25 லட்சத்திற்குப் பதில் ரூ.20 லட்சம் என்று குறைவாக கேட்பது யாருடைய நலனுக்காக.?
*ஓய்வூதியச் சட்டம் வேறு.*
*பணிக்கொடை சட்டம் வேறு.*
தொழிலாளர் நலச் சட்டப்படி
பணிக் கொடை பெறுவது
அரசு ஊழியர்,
ஆசிரியர்,
தொழிலாளர்களின் உரிமை.
பணிக்கொடை வழங்குவது
வேலை வாங்கும்
முதலாளிகள் மற்றும்
அரசுகளின் கடமை.
ஓய்வூதியம் 50% க்கு பதில் 35% வழங்க வேண்டும் என்று கேட்பதற்கு...
*பேரம் பேசுவதற்கு ஓய்வூதியம் சந்தைப் பொருள் அல்ல.*
*ஓய்வூதியம் என்பது பிச்சை பணம் அல்ல.*
*ஓய்வூதியம் என்பது கருணை தொகையும் இல்லை*.
*ஓய்வூதியம் நமது உரிமை*.
*ஓய்வூதியம் சொத்துரிமை போன்றது என்றும்*.,
*ஓய்வூதியம் என்பது*
*கொடுபடா ஊதியம் என்றும்*..
*உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது*.
*ஓய்வூதியம் தொடர்பாக பேரம் பேச யார் இவர்களுக்கு உரிமை வழங்கினார்கள்.?*
*பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்று பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே.!*
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக
CPS
NPS
UPS
GPS
TSPS
போன்ற எந்த ஒரு திட்டத்தையும் ஏற்க முடியாது.
பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே அரசுக்கு பாதுகாப்பானது
செலவும் குறைவு.
*பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் ஓயாது.*
- CPS ஒழிப்பு இயக்கம்
>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...
Kraft Seeds Plant Cutter for Garden with Premium Stainless Steel Lock, Sharp Edges - Tree Cutter Tools & Gardening Tools, Grass Trimmer, Shear Cutting, Pruner for Plants and Leaves, Heavy Duty Cutter


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.