கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TAPS - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை



தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் TAPS குறித்து அறிக்கை


தமிழக அரசின் - ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு - திமுகவின் தேர்தல் கால வாக்குறுதிக்கு எதிர்மாறானது.


வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.


பழைய ஓய்வூதியத்  திட்டத்தின் முழுப் பயன் கிடைக்க வேண்டும்.


=============== #அறிக்கை =============


            தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே அமல்படுத்தாது ஏமாற்றம் அளித்துள்ளது. 


          திமுக 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண். 309 ல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் சந்தா பிடிக்காத திட்டம்.


         திமுக 2021 தேர்தல் அறிக்கையில் CPS (Contributory Pension Scheme) ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் OPS (Old Pension Scheme) திரும்பக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்தது. 


           ஆனால், நான்கரை ஆண்டுகளுக்குப் பின் வெளியான TAPS (Tamil Nadu Assured Pension Scheme) ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10% பிடித்தம் செய்ய வேண்டும், அரசு மீதி பொறுப்பேற்கும் என்கிறது. 


           கடைசி சம்பளத்தின் 50% ஓய்வூதியம், DA உயர்வு, 25 லட்சம் பணிக்கொடை ஆகியவையெல்லாம் ஓரளவுக்கு பயன்தரக்கூடியது தான். ஆனால், உண்மையில் இது CPS-ன் சிறு மாற்றம் தான். தற்போது அறிவித்துள்ள தமிழ்நாடு உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களிடம் ஓய்வூதியத்திற்காக சந்தா பிடிக்கும் திட்டம். இத்திட்டம் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மறு வடிவமே. 


             பங்களிப்பு ஓய்வூதியம் என்பது பணத்தைப் பிடித்துக்கொண்டு அதற்கும் வட்டி தருகிறது. அவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள். அதற்கும் வட்டி தருகிறார்கள். அனைத்தையும் அதாவது முதலீட்டு பணத்தை தருவதாக அமைகிறது. ஆனால் TAPS தராது. 


             இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உத்திரவாத ஓய்வூதியத்தால், பழைய ஓய்வுதியத் திட்டத்தின் முழுப் பயன் கிடைக்காது என்கின்றனர். 


           தமிழ்நாடு அரசின் - புதிய - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட (TAPS) அறிவிப்பு, 2003 முதல் CPS-இல் சிக்கிய லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல். 


             மேலும்  போராட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்கான வேலைகள் தான் இவை. 

தமிழக அரசு அறிவித்த ஓய்வூதியத்தில் தொகுத்துப் பெறும் வாய்ப்பு இல்லை. 


           தமிழ்நாடு அரசின் உத்திரவாத ஓய்வூதியத் திட்டத்திற்கு CPS ஒழிப்பு இயக்கத்தினர் உட்பட மற்ற அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். 


            தேர்தல் நெருங்கும் போது ஏமாற்று அறிவிப்பு வெளியிட்டு ஆசிரியர்களை, அரசு ஊழியர்களை நம்ப வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


             எனவே தமிழக அரசு சுமார் 6 ½ லட்சம் ஆசிரியர்களையும் மற்றும் அரசு ஊழியர்களையும், தேர்தல் கால வாக்குறுதியையும் கவனத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில்  கேட்டுக் கொள்கிறேன்.



>>> சிறந்த ட்ரிம்மர்களின் (Trimmers) பட்டியல்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TAPS G.O. in Tamil Translation

  தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துதல் அரசாணை (நிலை) எண் : 07 , நாள் : 09-01-2026 தமிழில் TAPS G.O. Ms. No.07, Dated...