கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Whatsapp மூலம் Ambulance வசதி



வாட்ஸ்அப் மூலம் ஆம்புலன்ஸ் வசதி


9445030725 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி உதவி பெறலாம்


Ambulance facility through WhatsApp


வாட்ஸ்அப் செயலியில் ஆம்புலன்ஸ் சேவையைப் பொதுமக்களால் பெற முடியும். இதற்காக பிரத்தியேகமாக 94450 30725 என்ற வாட்ஸ்அப் எண்ணை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் இருந்து குறுந்தகவல் அனுப்பினால் போதும் உங்களது நிகழ் நேர இருப்பிடம் ட்ராக் செய்யப்பட்டு விரைவாக ஆம்புலனஸ் வந்தடையும். 


வாட்ஸ்அப்பில் ஆம்புலனஸ் சேவையைப் பெறும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

1. முதலில் பொதுமக்கள் தங்களது போனில் 94450 30725 என்ற வாட்ஸ்அப் எண்ணைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2. அடுத்து உங்களது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு Hi என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

3. அதன்பின்பு நீங்கள் மெசேஜ் அனுப்பிய உடனே Book Ambulance என்ற லிங்க் வரும். அதை கிளிக் செய்து உங்கள் இருப்பிடத்தைப் பகிர வேண்டும்.

4. பின்னர் உங்கள் கோரிக்கை ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும்.



5. குறிப்பாக டிரைவரின் பெயர், மொபைல் எண், வாகன எண் ஆகியவை உங்களுக்கு குறுந்தகவலாகவும் அனுப்பப்படும்.

6. அதுவும் ஆம்புலன்ஸின் வழித்தடம், எப்போது வந்து சேரும் என்ற கால அளவையும் நீங்கள் ஆன்லைனில் எளிமையாகத் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக இந்த புதிய சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 | Paper 2 | English Questions & Answers

  தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 | தாள் 2 | ஆங்கிலம் பாட வினாக்கள் மற்றும் விடைகள்  TNTET 2026 | Paper II | English Questions & ...